தமிழ் - தமிழ் அகரமுதலி - விசதம் முதல் - விசிறி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விசதம் | வெளிப்படையானது ; அழுக்கற்றது ; வெண்மை ; தூய்மை ; எச்சில் . |
| விசம் | தாமரைநூல் ; நஞ்சு ; விகிதம் ; செலவு ; படித்தரம் . |
| விசமம் | சமமின்மை . |
| விசய | அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தேழாம் ஆண்டு . |
| விசயசரிதன் | வெற்றியாளன் . |
| விசயஞ்செய்தல் | குரு , அரசர்போன்ற பெரியோர் எழுந்தருளுதல் . |
| விசயம் | காண்க : விசையம் ; நூற்றுமுப்பத்தைந்து சிகரங்களையும் பதினேழு மேனிலைக் கட்டுகளையுமுடைய கோயில் ; ஐயம் ; ஆராய்வு ; தருமபுத்திரனுடைய சங்கு ; அடைக்கலம் . |
| விசயமுரசம் | வெற்றிமுரசு . |
| விசயலக்குமி | வெற்றித்திருமகள் . |
| விசயன் | அருச்சுனன் ; திருமாலின் வாயில்காப்போன் ; வெற்றியாளன் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் ; சாலிவாகனன் ; கடுக்காய்வகை . |
| விசயார்த்தம் | வெள்ளிமலை , கைலைமலை . |
| விசயை | வெற்றித்திருமகள் , துர்க்கை , பார்வதி . |
| விசர் | பைத்தியம் . |
| விசர்க்கம் | ஒரு வடமொழி எழுத்து ; ஒழிகை ; விட்டுவிடுதல் ; மலங்கழித்தல் ; அபானவாயு ; தட்சிணாயனமார்க்கம் . |
| விசரம் | கூட்டம் ; கொலை ; மரவகை . |
| விசலம் | கஞ்சி ; தளிர் . |
| விசலி | சீந்திற்கொடி . |
| விசலிகை | காண்க : கொடிமல்லிகை . |
| விசவல்லி | காண்க : கீழாநெல்லி . |
| விசளை | சட்டி ; சட்டியளவு . |
| விசனப்படுதல் | துன்புறுதல் . |
| விசனம் | துன்பம் ; விடாமுயற்சி ; வேட்டை முதலியவற்றில் மிக்க விருப்பு ; பேராசை ; மனிதரில்லாவிடம் ; விசிறி ; தனிமை . |
| விசனம்பண்ணுதல் | நெருக்கித் துன்புறுத்துதல் . |
| விசாகம் | பதினாறாம் நட்சத்திரம் ; வைகாசி . |
| விசாகன் | விசாகநாளில் பிறந்த முருகக்கடவுள் . |
| விசாணம் | விலங்கின் கொம்பு . |
| விசாதி | நோய் ; வேறான சாதி ; காண்க : விசாதி பேதம் . |
| விசாதிபேதம் | வேறுபாடு மூன்றனுள் ஒன்றான சாதியால் உண்டாகும் வேறுபாடு . |
| விசாய்தல் | மேலிடுதல் . |
| விசாரகன் | நியாயவிசாரணை செய்பவன் . |
| விசாரணம் | ஆராய்ச்சி . |
| விசாரணை | ஆராய்ச்சி ; நியாயவிசாரிப்பு ; மேற்பார்வை ; போற்றுகை ; மரவகை . |
| விசாரணைக்காரன் | மேற்பார்ப்போன் . |
| விசாரம் | சூழ்வினை ; ஆராய்ச்சி ; கவலை . |
| விசாரி | ஆராய்வோன் . |
| விசாரித்தல் | ஆராய்தல் ; வினாவுதல் ; நினைத்தல் ; பாதுகாத்தல் ; போற்றுதல் . |
| விசாரிப்பு | ஆராய்ச்சி ; நியாயவிசாரிப்பு ; போற்றுகை ; உபசாரம் ; மேற்பார்வை ; கண்காணிப்பாளன் ; ஊர்ப்பணியாளருள் ஒருவன் . |
| விசாலபுத்தி | பரந்த அறிவு . |
| விசாலம் | இடப்பரப்பு ; பெரியது ; பொலிவு ; மான்வகை ; ஒரு பறவைவகை ; ஒரு நாடு ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; வெண்கடம்பு ; வாழை ; மரவகை ; வாயுவிளங்கம் . |
| விசாலாட்சன் | சிவபிரான் ; கருடன் . |
| விசாலாட்சி | காசியில் உள்ள பார்வதி ; தடங்கண்ணி . |
| விசாலித்தல் | விரிவுபெறுதல் . |
| விசாலை | அவந்திநகர் ; மிதிலைப்பட்டணம் . |
| விசானம் | சுடுகாடு . |
| விசி | கட்டு ; பறையிறுக்கும் வார் ; விசிப்பலகை ; கட்டில் ; தண்டு ; அலை . |
| விசிக்கோல் | அம்பு . |
| விசிகம் | அம்பு ; இருப்புலக்கை ; அலை . |
| விசிகரம் | அலை . |
| விசிகை | முலைக்கச்சு ; கருத்து ; தெரு ; கடப்பாரை ; மருத்துவமனை . |
| விசிட்டஞானம் | இறையறிவு . |
| விசிட்டம் | குணத்தோடு கூடியது ; மேன்மையுள்ளது . |
| விசிட்டன் | பெரியோன் . |
| விசித்தல் | இறுகக்கட்டுதல் ; விம்முதல் . |
| விசித்தி | கடுகு . |
| விசித்திரம் | வியப்பு ; சிறப்பு வேலைப்பாடு அல்லது நிறமுடையது ; பலதிறப்பட்டது ; விநோதமானது ; பேரழகு ; வேடிக்கை ; கம்மத்தொழில் ; இறுமாப்பு ; மேன்மை . |
| விசித்திராங்கம் | மயில் . |
| விசிதம் | திருநீறு ; வெண்மை . |
| விசிப்பலகை | ஊஞ்சற்பலகை . |
| விசிப்பு | ஊஞ்சற்பலகை . |
| விசிமந்தம் | வேம்பு . |
| விசிரமித்தல் | இளைப்பாறுதல் . |
| விசிராமம் | மனவமைதி ; இளைப்பாறுகை . |
| விசிலம் | கஞ்சி . |
| விசிறி | உடம்பு முதலியவற்றில் படும்படி காற்றை அசைவிக்கப் பயன்படுத்தும் கருவி ; ஒரு செடிவகை ; வண்ணக்கோடுள்ள சீலைவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 967 | 968 | 969 | 970 | 971 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விசதம் முதல் - விசிறி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஆராய்ச்சி, காண்க, மரவகை, மேற்பார்வை, நியாயவிசாரிப்பு, போற்றுகை, விசிப்பலகை, ஊஞ்சற்பலகை, அம்பு, வேறுபாடு, விசிறி, வெற்றித்திருமகள், வெற்றியாளன், பார்வதி, கஞ்சி, வெண்மை, முதலியவற்றில், விசாதி

