தமிழ் - தமிழ் அகரமுதலி - விகலன் முதல் - விசசனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விகலன் | குறைவுடையோன் . |
| விகலிதம் | சிந்துகை ; வடிகை ; சரிவின்மை . |
| விகலை | நாழிகை ; கலையின் அறுபதில் ஒரு பாகம் . |
| விகற்பக்காட்சி | பொருளின் வேறுபாடுகளைக் கண்டறியுங் காட்சி . |
| விகற்பத்தின்முடித்தல் | பொருள் விளங்குதற் பொருட்டுப் பலதிறப்பட்ட வாய்பாட்டாற் முடித்துக்காட்டும் உத்திவகை . |
| விகற்பம் | வேறுபாடு ; மனமாறுபாடு ; காண்க : விகற்பக்காட்சி ; மனக்கோணல் ; ஐயம் ; தவறு ; ஓர் இலக்கணவிதி ஒருகால் வந்து ஒருகால் வாராமை ; இனம் . |
| விகற்பமில்லாக்காட்சி | பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு . |
| விகற்பவுணர்வு | பொருளின் வேறுபாடுகளைக் கண்டறியும் உணர்வு . |
| விகற்பித்தல் | வேறுபடுத்துதல் ; பகுத்தறிதல் ; மாறுபடுதல் ; ஓர் இலக்கணவிதி ஒருகால் வந்து ஒருகால் வாராதிருத்தல் . |
| விகற்பு | வேறுபாடு ; ஓர் இலக்கண விதி ஓர் இடம் வந்து மற்றோரிடம் வாராதிருத்தல் . |
| விகாசம் | மலர்ச்சி ; முகமலர்ச்சி ; விரித்தல் . |
| விகாதம் | இடையூறு ; கேடு . |
| விகாதித்தல் | தடைசெய்தல் . |
| விகாய் | ஒரு மரவகை . |
| விகாரம் | வேறுபாடு ; காண்க : செய்யுள்விகாரம் ; புணர்ச்சியில் வரும் தோன்றல் , திரிதல் ; கெடுதல் ஆகிய விகாரங்கள் ; மனக்கலக்கம் ; அழகின்மை ; காமம் ; குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் , இடும்பு , அசூயை என எண்வகைப்பட்ட தீக்குணம் ; புத்தாலயம் . |
| விகாரவுவமை | உவமானத்தின் வேறுபாடே உவமேயமென்று சொல்லும் உவமையணிவகை . |
| விகாரி | விகாரமுடையவன் ; காமுகன் ; அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்துமூன்றாம் ஆண்டு . |
| விகாரித்தல் | வேறுபடுத்தல் ; மோகித்தல் . |
| விகாரியம் | வேறுபடுத்தப்படுவதாகிய செயப்படுபொருள் . |
| விகிதம் | வீதம் ; நட்பு ; விதிமுறை ; தகுதி ; அனுகூலம் ; செயல் . |
| விகிர்தம் | காண்க : விகிருதம் ; நகரம் . |
| விகிர்தன் | கடவுள் ; மாறுபட்ட செயலினன் . |
| விகிர்தி | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்து நான்காம் ஆண்டு ; வேறுபாடு . |
| விகிரம் | சிதறுகை ; இறைக்கப்பட்ட சோறு ; துண்டு ; பறவை ; வெள்ளெருக்கு . |
| விகிருதம் | வேறுபாடு ; பொய் ; வெறுப்பு ; அச்சம் ; ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயல் ; தலைவி தலைவனுக்குத் தன் காதலைச் சொல்ல நாணுகை . |
| விகிருதன் | மாறுபட்ட செயலினன் ; கடவுள் . |
| விகிருதி | வேறுபாடு ; முன்புள்ளதிலிருந்து உண்டானது ; பகுபதவுறுப்பினுள் இறுதிநிலையான உறுப்பு ; அறுபதாண்டுக் கணக்கில் இருபத்து நான்காம் ஆண்டு . |
| விகுணம் | குணமின்மை . |
| விகுணி | குணமில்லாதவர் ; குணங்கெட்டது ; கள் . |
| விகுதி | மாறுபாடு ; முன்புள்ளதிலிருந்து உண்டானது ; பகுபதவுறுப்புகளுள் இறுதியான . |
| விங்களம் | குறைவு ; திரிவு ; நட்பின்மை ; உதவிபுரியப் பின்வாங்குதல் ; கபடம் ; களிம்பு . |
| விங்களித்தல் | சூதுசெய்தல் ; வேறுபடுத்தல் ; நட்பில் மனம் வேறுபடுதல் ; நிலையற்றிருத்தல் ; பிரித்தல் . |
| விங்குதல் | மிகுதல் ; துளைத்தல் . |
| விச்சம் | தாமரைவகை . |
| விச்சவம் | அம்பு . |
| விச்சாதரர் | பதினெண்கணத்துள் ஒருசாரார் . |
| விச்சாவாதி | வித்தையால் திறமையாக வாதிப்பவன் . |
| விச்சிரமித்தல் | இளைப்பாறுதல் ; இளைப்பாறச் சயனித்தல் . |
| விச்சிராந்தி | இளைப்பாறுகை . |
| விச்சிரானம் | பேதிமருந்து . |
| விச்சின்னம் | இடையில் விட்டுப்போகை ; இடையில் சிதைவுறுகை . |
| விச்சு | விதை ; மிகுதி . |
| விச்சுதல் | விதைத்தல் ; பரப்புதல் ; பிறர் மனத்தில் பதியவைத்தல் . |
| விச்சுவம் | எல்லாம் ; நெடுமால் ; சுக்கு ; முழுமையும் . |
| விச்சுளி | மீன்கொத்திப்பறவை ; சுறுசுறுப்புள்ளவர் ; ஒல்லி . |
| விச்சுளிப்பாய்தல் | விரைவாகப் பாய்தல் . |
| விச்சுளியன் | சுறுசுறுப்புள்ளவன் ; அறிவாளன் . |
| விச்சை | வித்தை ; கல்வி ; அறிவு ; மாயவித்தை ; மந்திரம் ; காண்க : வித்தியாதத்துவம் ; தெரு ; வெள்ளெருக்கு . |
| விச்சையன் | கல்வியாளன் ; மாயவித்தைக்காரன் . |
| விச்சொரூபம் | வேறுபட்ட வடிவம் . |
| விசகலி | மல்லிகை . |
| விசகலிதம் | சிதைவு . |
| விசசனம் | கொடுவாள் ; கொலை ; தண்டம் ; ஒரு நரகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 966 | 967 | 968 | 969 | 970 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விகலன் முதல் - விசசனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வேறுபாடு, ஒருகால், காண்க, வந்து, அறுபதாண்டுக், கணக்கில், ஆண்டு, பொருளின், நான்காம், இருபத்து, செயலினன், வெள்ளெருக்கு, வேறுபட்ட, உண்டானது, முன்புள்ளதிலிருந்து, மாறுபட்ட, இடையில், கடவுள், வேறுபாடுகளைக், வாராதிருத்தல், உணர்வு, விகற்பக்காட்சி, வேறுபடுத்தல், விகிருதம், செயல், இலக்கணவிதி

