முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வனசோபனம் முதல் - வாக்குச்சித்தி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வனசோபனம் முதல் - வாக்குச்சித்தி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
வனசோபனம் | காண்க : வனசம் . |
வனதீபம் | காண்க : சண்பகம் . |
வனதுர்க்கம் | காட்டரண் . |
வனதேவதை | காடுறை தெய்வம் . |
வனநரம் | காண்க : வானரம் . |
வனப்பிரியம் | குயில் . |
வனப்பு | அழகு ; இளமைநிறம் ; பலவுறுப்புத் திரண்டவழிப் பெறுவதொரு செய்யுள் அழகு ; பெருந்தோற்றம் . |
வனப்புவண்ணம் | இசைவகை . |
வனபதி | பூவாது காய்க்கும் மரம் . |
வனபந்தம் | தடாகம் . |
வனபலம் | காண்க : ஆனைத்திப்பிலி . |
வனபோசனம் | சோலை முதலியவற்றில் நடத்தும் விருந்து ; திருவிழா . |
வனம் | காடு ; ஊர் சூழ்ந்த சோலை ; சுடுகாடு ; நீர் ; மலையருவி ; உறைவிடம் ; வழி ; துளசி ; புற்று ; அழகு ; மிகுதி ; நிறம் . |
வனமரை | காண்க : ஓரிதழ்த்தாமரை . |
வனமல்லிகை | காட்டுமல்லிகை ; ஊசிமல்லிகை . |
வனமா | காண்க : கொடிவேலி ; மரவகை . |
வனமாலி | திருமால் ; துளசி . |
வனமாலை | பலவகை நிறமுள்ள மலருந்தழையுங் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை ; துளசிமாலை . |
வனரஞ்சனி | முலைப்பால் . |
வனராசன் | அரிமா . |
வனருகம் | காண்க : வனசம் . |
வனலட்சுமி | வாழை . |
வனவசம் | சந்தனமரம் . |
வனவன் | வேடன் . |
வனவாசம் | காட்டில் வாழ்கை . |
வனவாசி | காட்டில் வாழ்பவன் . |
வனாந்தரம் | காட்டின் உட்பகுதி ; பாலைவனம் . |
வனாந்தரமாய்க்கிடத்தல் | மிகுதியாய் இருத்தல் . |
வனி | சுரம் . |
வனிகை | தோப்பு . |
வனிதம் | சிறப்பு ; மேன்மை . |
வனிதை | பெண் ; மனைவி . |
வனைதல் | உருவம் அமையச்செய்தல் ; அலங்கரித்தல் ; ஓவியம் எழுதுதல் . |
வா | ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்+ஆ) ; தாவுதல் . |
வாக்கல் | வடிக்கப்பட்ட சோறு . |
வாக்களித்தல் | உறுதிகூறுதல் ; வாக்குச் சீட்டுப்போடுதல் . |
வாக்கன் | மாறுகண்ணன் . |
வாக்காட்டுதல் | ஏய்த்தல் . |
வாக்காடுதல் | பேசுதல் ; வாதாடுதல் . |
வாக்காள் | நாமகள் . |
வாக்காளன் | ஓர் இடத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்தெடுப்பது முதலியவற்றில் தன் கருத்தைப் தெரிவிக்கும் உரிமையுள்ளவன் . |
வாக்கி | அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நாற்பொருட் பயன்களைக் கேட்க வேட்கையோடு விரித்துக் கூறுவோன் ; எளிதிற் பாப்புனையும் ஆற்றலுள்ளவன் ; மாறு கண்ணுள்ளவன் . |
வாக்கிடுதல் | வாக்குத்தத்தஞ் செய்தல் ; தீப்பலனைக் கொடுக்கும் சொற் கூறுதல் . |
வாக்கியக்கட்டளை | நன்கு யாத்த சொற்றொடர் . |
வாக்கியசேடம் | காண்க : புறனடைச்சூத்திரம் . |
வாக்கியம் | சொல் ; எழுவாய் பயனிலை முதலிய பொருளோடு கூடிய தொடர் ; பொருள் நிரம்பிய பழமொழி ; மேற்கோள் ; சோதிட கணித வாய்பாடுவகை . |
வாக்கியார்த்தம் | சொற்றொடர்ப் பொருள் ; பொழிப்புரை . |
வாக்கியை | பார்வதி . |
வாக்கின்செல்வி | கலைமகள் . |
வாக்கு | சொல் ; திருத்தம் ; திருந்திய வடிவு ; வளைவு ; ஒழுங்கின்மை ; ஒரு வினையெச்ச விகுதி ; வார்த்தல் ; பேசற்கருவியான வாய் ; அசரீரி ; வாக்குத்தத்தம் ; புகழ்ச்சிச்சொல் ; எளிதிற் கவிபாடுந்திறம் ; நூலின் நடை ; ஒலி ; பக்கம் ; ஓர் இடத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை . |
வாக்குக்கடன் | கைம்மாற்றுக்கடன் ; வாய்மொழி நிபந்தனை . |
வாக்குக்கண் | மாறுகண் . |
வாக்குக்குற்றம் | சொற்பிழை . |
வாக்குக்கொடுத்தல் | வாக்குறுதி கூறுதல் ; விருப்பத்தைச் சீட்டுமூலமாய்த் தெரிவித்தல் ; பேச்சுக்கொடுத்தல் . |
வாக்குச்சகாயம் | சொல்லால் பிறர்க்குச் செய்யும் உதவி . |
வாக்குச்சித்தி | பிறர் ஏற்கும்படி சொல்லுந்திறம் ; சொற்கள் பலிக்கும்படி சொல்லும் ஆற்றல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 952 | 953 | 954 | 955 | 956 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வனசோபனம் முதல் - வாக்குச்சித்தி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சொல், பொருள், அழகு, ஒருவனைத், கூறுதல், உரியவனாக, எளிதிற், துளசி, வனசம், சோலை, முதலியவற்றில், காட்டில், இடத்திற்கு