தமிழ் - தமிழ் அகரமுதலி - வறைமுறுகல் முதல் - வனசை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வறைமுறுகல் | கருகிப்போனது ; பயனற்றது ; கரடுமுரடானது . |
| வறையல் | காண்க : வறை ; பிண்ணாக்கு . |
| வறையோடு | பொரிக்குஞ் சட்டியோடு ; பயனற்றவர் ; பயனற்றது . |
| வன்கண் | மனக்கொடுமை ; வீரத்தன்மை ; பகைமை ; பொறாமை ; கொடும்பார்வை . |
| வன்கண்ணன் | கொடுமையுள்ளவன் ; வீரமுள்ளவன் . |
| வன்கண்மை | கொடுமை ; வீரம் . |
| வன்கணம் | காண்க : வல்லினம் . |
| வன்கணாளன் | கொடியோன் ; வீரன் . |
| வன்கனி | செங்காய் . |
| வன்காய் | கடுக்காய் ; முற்றிய காய் . |
| வன்காரம் | வெண்காரம் ; வலாற்காரம் . |
| வன்கிழம் | தொண்டுகிழம் ; மிக்க இளமையிலே உண்டாகும் அறிவுமுதிர்ச்சி . |
| வன்கை | வலிய கரம் ; தோற்கருவிவகை . |
| வன்கொலை | கடுங்கொலை . |
| வன்சிறை | கடுங்காவல் ; மதில் ; கொடுமைக்கு உள்ளாக்கும் அடிமைத்தனம் . |
| வன்செலல் | விரைந்துசெல்லுகை . |
| வன்செவி | உணர்ச்சியற்ற காது . |
| வன்சொல் | கடுஞ்சொல் ; மிலேச்சமொழி . |
| வன்பகை | கடும்பகை . |
| வன்பாடு | வலியதன்மை ; முருட்டுத்தன்மை . |
| வன்பார் | இறுகிய பாறைநிலம் . |
| வன்பால் | காண்க : வன்பார் ; பாலைநிலம் ; குறிஞ்சிநிலம் ; மேடு . |
| வன்பு | வலிமை ; கடினத்தன்மை ; கருத்து ; தோல் முதலியவற்றின் வார் . |
| வன்புல் | புறக்காழுள்ள மரஞ்செடி முதலியன . |
| வன்புலம் | வலியநிலம் ; குறிஞ்சிநிலம் ; முல்லைநிலம் . |
| வன்புறுத்தல் | தலைவியைத் தலைவன் ஆற்றுவித்தல் . |
| வன்புறை | தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை ; தலைவன் பிரிவின்கண் வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக்கூறும் அகத்துறை ; வற்புறுத்திச் சொல்பவன் . |
| வன்புறையெதிரழிதல் | தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமையில் தலைவி வருந்துதலைக்கூறும் அகத்துறை . |
| வன்பொறை | பெரும்பாரம் . |
| வன்மம் | தீராப்பகை ; வலிமை ; சூளுரை ; உடலின் முக்கிய பாகம் ; இரகசியச் சொல் . |
| வன்மரம் | அகக்காழுள்ள மரம் . |
| வன்மனம் | கன்னெஞ்சு . |
| வன்மா | குதிரை ; அரிமா . |
| வன்மான் | அரிமா . |
| வன்மி | பகைவன் . |
| வன்மித்தல் | கன்னெஞ்சு படைத்தல் ; தீராப்பகை காட்டுதல் ; சூளுரைத்தல் ; மரம் காழ் கொள்ளுதல் . |
| வன்மீகம் | கறையான்புற்று ; ஒருவகை உடல்வீக்கநோய் . |
| வன்மீன் | முதலை . |
| வன்மீனம் | முதலை . |
| வன்மை | வலிமை ; கடினம் ; வன்சொல் ; ஆற்றல் ; வலாற்காரம் ; சொல் அழுத்தம் ; கோபம் ; கருத்து ; வல்லெழுத்து . |
| வன்மொழி | கடுஞ்சொல் . |
| வன்றி | பன்றி . |
| வன்னசரம் | பலவகை மணிகளினாலியன்ற கழுத்தணிவகை . |
| வன்னம் | நிறம் ; எழுத்து ; தங்கம் . |
| வன்னரூபி | உமை ; கலைமகள் . |
| வன்னனை | காண்க : வருணனை . |
| வன்னி | நெருப்பு ; குதிரை ; வன்னிமரம் ; காண்க : கொடிவேலி ; தணக்கு ; வன்னியன் ; பிரமசாரி ; கிளி . |
| வன்னிகை | எழுதுகோல் . |
| வன்னிசகாயன் | நெருப்புக்குத் துணையாகிய காற்று . |
| வன்னித்தல் | வண்ணம்வைத்தல் ; வருணித்தல் . |
| வன்னிமன்றம் | வன்னிமரமுள்ள பொதுவிடம் . |
| வன்னியம் | வருணிக்கப்பட்டது ; சிற்றரசரின் தன்மை ; சுதந்தரம் ; பகைமை . |
| வன்னியமறுத்தல் | சிற்றரசரை அழித்தல் . |
| வன்னியன் | சாமந்தன் ; ஒரு சாதியாரின் பட்டப்பெயர் . |
| வன்னிலம் | பாறைப்பாங்கான பூமி . |
| வன்னிவகன் | தீயைத் தாங்குபவனாகிய காற்று . |
| வன்னிவண்ணம் | செந்தாமரை ; செவ்வாம்பல் . |
| வன்னெஞ்சு | கடுமையான மனம் . |
| வனகவம் | காட்டுப்பசு . |
| வனச்சார்பு | காட்டுப்பாங்கான முல்லைநிலம் . |
| வனச்சுவை | நரி ; புலி ; புனுகுபூனை . |
| வனசஞ்சாரம் | காட்டிலே திரிந்துவாழ்கை . |
| வனசந்தனம் | வண்டுகொல்லி ; மரவகை . |
| வனசம் | தாமரை . |
| வனசமூகம் | பூஞ்சோலை . |
| வனசரம் | காட்டுவிலங்கு ; காட்டானை ; காடு . |
| வனசரர் | பாலைநில மக்கள் ; வேடர் . |
| வனசரிதன் | காண்க : வனவாசி . |
| வனசன் | காமன் . |
| வனசுரம் | பாலைநிலம் . |
| வனசை | திருமகள் ; சந்தனமரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 951 | 952 | 953 | 954 | 955 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வறைமுறுகல் முதல் - வனசை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தலைவன், வலிமை, சொல், அகத்துறை, தீராப்பகை, மரம், குதிரை, காற்று, வன்னியன், முதலை, அரிமா, கன்னெஞ்சு, கருத்து, வன்சொல், வலாற்காரம், பகைமை, பயனற்றது, கடுஞ்சொல், வன்பார், முல்லைநிலம், குறிஞ்சிநிலம், பாலைநிலம், தலைவியைத்

