தமிழ் - தமிழ் அகரமுதலி - வற்சன் முதல் - வறைநாற்றம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வற்சன் | குழந்தை . |
| வற்சை | மலட்டுப்பசு ; குழந்தை . |
| வற்பம் | வன்மை ; வறட்சி . |
| வற்பு | உறுதிப்பாடு ; வலிமை . |
| வற்புலம் | மேட்டுநிலம் . |
| வற்புறுத்துதல் | உறுதிப்படுத்திச் சொல்லுதல் ; வலிமைப்படுத்துதல் . |
| வற்புறுதல் | உறுதிப்படுதல் ; திடப்படுதல் ; ஆறுதலடைதல் . |
| வற்றம் | கடல்நீர் வடிகை ; வறட்சி . |
| வற்றல் | வடிகை ; வறளுகை ; உலர்ந்தது ; உலர வைத்த காய் , இறைச்சி முதலிய உணவு . |
| வற்றனோய் | இரத்தங் குன்றி உடலை மெலிவிக்கும் நோய் . |
| வற்று | கடல்நீர் வடிகை ; கூடியது , ஒரு சாரியை . |
| வற்றுதல் | சுவறுதல் ; கடல்நீர் முதலியன வடிதல் ; புண் முதலியன உலர்தல் ; வாடுதல் ; மெலிதல் ; பயனற்றுப்போதல் . |
| வறக்கடை | தீமுதலியவற்றா லுண்டாகிய வறட்சி . |
| வறக்காலன் | தன் குடும்பத்திற்கு இழப்புண்டாக வந்தவன் . |
| வறக்காலி | தன் குடும்பத்திற்கு இழப்புண்டாக வந்தவள் . |
| வறங்கூர்தல் | மழைபெய்யாதுபோதல் ; பஞ்சம் மிகுதல் . |
| வறட்காலம் | பஞ்சகாலம் ; மழையில்லாக் காலம் . |
| வறட்கேடு | மழையின்மையா லுண்டாகுந் துன்பம் . |
| வறட்சாவி | மழையில்லாமையாலான பயிர்ச்சாவி . |
| வறட்சி | நீரற்றுப்போதல் ; உடற்காங்கை ; சொறி ; உடலை மெலியச்செய்யும் நோய் . |
| வறட்சுண்டி | காண்க : ஆடுதின்னாப்பாளை ; சுண்டிவகை . |
| வறட்டாடு | மலட்டு ஆடு . |
| வறட்டி | அடைபோல் தட்டிக் காய்ந்த சாணம் . |
| வறட்டிருமல் | தொண்டையை வறளச்செய்யும் இருமல்வகை . |
| வறட்டுதல் | வற்றச்செய்தல் ; காயச்செய்தல். வறுத்தல் . |
| வறட்டுப்பசு | மலட்டுப்பசு . |
| வறட்பால் | காய்ந்து கட்டியான பால் . |
| வறடன் | மெலிந்தவன் ; ஆண்மையற்றவன் . |
| வறடி | மெலிந்தவள் ; மலடி . |
| வறடு | வறட்சி ; ஈனாத பசு முதலியன . |
| வறண்டி | குப்பை முதலியன வாருங் கருவி ; வழிக்குங் கருவி . |
| வறண்டுதல் | தெள்ளுதல் ; பிறாண்டுதல் ; திருடுதல் . |
| வறத்தல் | காய்தல் ; வறுமையாதல் ; மழை பெய்யாது போதல் ; குறைந்து மெலிதல் . |
| வறம் | காண்க : வறன் . |
| வறல் | உலர்தல் ; வறண்ட நிலம் ; சுள்ளி ; நீரில்லாமை ; வறுத்தல் ; உலரவைத்த காய் ; இறைச்சி முதலிய உணவு . |
| வறவறெனல் | உலர்ந்து கடினமாதற்குறிப்பு . |
| வறவு | கஞ்சி . |
| வறள் | உலர்கை ; வறட்சியான நிலம் ; மணற்பாங்கு . |
| வறளி | காண்க : வறட்டி ; உலர்ந்தது . |
| வறளுதல் | வற்றுதல் ; உடம்பு மெலிதல் . |
| வறற்காலை | நீரில்லாத காலம் . |
| வறன் | வற்றுகை ; நீரில்லாமை ; கோடைக்காலம் ; பஞ்சம் ; வறுமை ; வறண்ட பூமி . |
| வறனுழத்தல் | நீரின்றி வருந்துதல் ; வறுமையுறுதல் . |
| வறிஞன் | பொருளில்லாதவன் . |
| வறிது | சிறிது ; பயனின்மை ; அறியாமை ; குறைவு ; வறுமை ; உள்ளீடற்றது ; இயலாமை . |
| வறியன் | காண்க : வறிஞன் ; அறிவிலான் . |
| வறியான் | காண்க : வறிஞன் ; அறிவிலான் . |
| வறியோன் | காண்க : வறிஞன் ; அறிவிலான் . |
| வறுகடலை | வறுத்த கடலை . |
| வறுகறி | வறுத்த கறி . |
| வறுகுதல் | பிறாண்டுதல் ; இறுகப்பிடித்தல் . |
| வறுங்காலம் | வறுமைக்காலம் ; நீரில்லாக்காலம் ; பஞ்சகாலம் . |
| வறுங்கோட்டி | அறிவிலார் கூட்டம் . |
| வறுங்கோடை | மழையில்லாத கோடை . |
| வறுத்தல் | பொரியச்செய்தல் ; தொந்தரவுபடுத்துதல் . |
| வறுதல் | வறுபடுதல் . |
| வறுநகை | புன்னகை . |
| வறுநிலம் | பாழ்நிலம் . |
| வறுநுகர்வு | உண்மையில்லா அனுபவம் . |
| வறுபடுதல் | தீயாற் பொரிதல் . |
| வறும்புனம் | அறுவடையானபின் தரிசாய்க் கிடக்கும் புன்செய்நிலம் ; பாலைநிலம் . |
| வறுமை | துன்பம் ; வெறுமை ; திக்கற்ற தனிமை . |
| வறுமொழி | பயனில்சொல் . |
| வறுவல் | எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்த கறிவகை . |
| வறுவிது | குறையாக இருப்பது . |
| வறுவிதை | வறுத்த வித்து . |
| வறுவியோர் | வறிஞர . |
| வறுவிலி | திக்கற்றவன் ; வறியவன் . |
| வறுவோடு | காண்க : வறையோடு . |
| வறை | பொரிக்கறி . |
| வறைநாற்றம் | தீநாற்றம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 950 | 951 | 952 | 953 | 954 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வற்சன் முதல் - வறைநாற்றம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வறட்சி, வறிஞன், முதலியன, வறுமை, வறுத்தல், மெலிதல், அறிவிலான், கடல்நீர், வடிகை, வறுத்த, வறட்டி, பிறாண்டுதல், கருவி, நீரில்லாமை, வறுபடுதல், துன்பம், நிலம், வறண்ட, வறன், இழப்புண்டாக, முதலிய, உணவு, இறைச்சி, காய், மலட்டுப்பசு, உலர்ந்தது, உடலை, நோய், பஞ்சம், பஞ்சகாலம், குழந்தை, குடும்பத்திற்கு, வற்றுதல், உலர்தல், காலம்

