தமிழ் - தமிழ் அகரமுதலி - வளார் முதல் - வற்சலை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
வளார் | இளங்கொம்பு . |
வளால் | தரைக்கூறுவகை . |
வளாவுதல் | சூழ்தல் ; மூடுதல் ; கலத்தல் ; அளவளாவுதல் . |
வளி | காற்று ; சுழல்காற்று ; உடல்வாதம் ; அண்டவாதநோய் ; சிறிய காலவளவுவகை . |
வளிச்செல்வன் | வாயுதேவன் . |
வளிசம் | தூண்டில் . |
வளிநிலை | கோபுரம் . |
வளிமகன் | காற்றின் மக்களான அனுமான் அல்லது வீமன் . |
வளிமறை | கதவு ; வீடு . |
வளு | இளமை ; இளைது . |
வளும்பு | நிணம் ; நிணம் முதலியவற்றின் மேலுள்ள வழுவழுப்பான நீர்ப்பண்டம் ; அழுக்கு . |
வளுவளுத்தல் | வழுக்குந்தன்மையாதல் ; பேச்சில் தெளிவில்லாதிருத்தல் . |
வளை | சுற்றிடம் ; சங்கு ; கைவளை ; சக்கரப்படை ; துளை ; எலி முதலியவற்றின் பொந்து ; நீண்ட மரத்துண்டு ; தூதுவளை என்னும் கொடிவகை ; சிறிய உத்திரம் . |
வளை | (வி) தடைசெய் ; கட்டு ; வாரு ; முற்றுகையிடு . |
வளைக்கரன் | சங்கை ஏந்திய திருமால் . |
வளைகாப்பு | முதலாவதாகக் கருவுற்ற பெண்ணுக்கு ஐந்து அல்லது ஏழாம் மாதத்தில் வளையலணியுஞ் சிறப்பு நிகழ்ச்சி . |
வளைச்சல் | வளைவு ; வளைவுள்ளது ; வீடு முதலியவற்றின் சுற்றுப்புறம் . |
வளைத்தல் | வளையச்செய்தல் ; சூழ்தல் ; தடுத்தல் ; பற்றுதல் ; கவர்தல் ; பேச்சு முதலியவற்றைத் திருப்புதல் ; எழுதுதல் ; அணிதல் . |
வளைத்துவைத்தல் | அப்பாற் போகவொட்டாது மடக்குதல் ; சிறையகப்படுத்துதல் . |
வளைதடி | ஓர் எறிபடைவகை . |
வளைதல் | சூழ்தல் ; சுற்றுதல் ; சுற்றிவருதல் ; தாழ்தல் ; கோணுதல் ; திடமறுதல் ; நேர்மையினின்று விலகுதல் ; வருந்துதல் . |
வளைநீர் | உலகை வளைத்துக்கிடக்கும் கடல் . |
வளைப்பு | வளைத்தல் ; வளைவு ; சூழ்தல் ; முற்றுகையிடுதல் ; குடியிருப்பிடம் ; சிறை ; காவல் ; உழவுசால் . |
வளைபோழ்நர் | காண்க : சங்கறுப்போர் . |
வளைபோழுநர் | காண்க : சங்கறுப்போர் . |
வளைமணி | அக்குமணி , சங்குமணி . |
வளையக்கொடி | காண்க : அண்ண(ணா)ந்தாள் . |
வளையக்கோலுகை | சுற்றுகை ; தனக்குமட்டும் உரிமையாக்கிக்கொள்ளுகை . |
வளையகம் | சங்கு . |
வளையம் | தாமரைச்சுருள் ; சுற்று ; முடியில் வளைத்துச்சூடும் மாலை ; குளம் ; கைவளை ; சங்கு ; எல்லை ; மண்டலம் ; ஒரு கோள் வான மண்டலத்தை ஒருமுறை சுற்றிவரும் காலம் . |
வளையம்போடுதல் | வட்டம் இடுதல் ; சூதாட்டத்தில் வளையமெறிதல் ; ஒருவனைச் சுற்றித்திரிதல் . |
வளையமாலை | முடியில் வளைத்துச் சூடும் மாலை . |
வளையமுடித்தல் | திரளக் கூட்டிமுடித்தல் . |
வளையல் | மகளிர் கையணிவகை ; கண்ணாடி ; வளைவுள்ளது . |
வளையலுப்பு | ஒரு மருந்துப்புவகை . |
வளையற்காரன் | வளையல் விற்பவன் . |
வளையில் | காண்க : வளையல் . |
வளைவாணன் | பலராமன் ; நாகநாட்டரசன் . |
வளைவாணி | கொக்கி . |
வளைவாயுதம் | உள்வளைந்த இடங்களை இழைக்கும் இழைப்புளிவகை . |
வளைவி | வீட்டிறப்பு ; மகளிரது கையணிவகை . |
வளைவிற்பொறி | வளைந்து தானே எய்யும் இயந்திரவில் . |
வளைவு | சுற்று ; கோணல் ; கட்டடத்தில் அமைக்கும் வில்வளைவு ; வீட்டுப்புறம் ; வட்டம் ; பணிவு . |
வளைவெடுத்தல் | வளைவை நிமிர்த்துதல் ; வளைவுகட்டுதல் . |
வற்கடம் | வறட்சி ; பஞ்சம் . |
வற்கம் | குதிரையின் கடிவாளம் ; குதிரைக்குரிய கலணை முதலியன ; இனம் , ஒத்த பொருள்களின் கூட்டம் ; பிசாசு ; அத்தியாயம் ; ஒழுங்கு ; மரப்பட்டை ; குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் பெருக்கிவரும் தொகை ; மரபு . |
வற்கமார்க்கம் | நாயுருவிச்செடி . |
வற்கரி | கரகம் ; குதிரையின் கடிவாளம் . |
வற்கலம் | மரவுரி ; மரப்பட்டை . |
வற்கலை | மரவுரி ; மரப்பட்டை . |
வற்காலம் | வறட்சிக்காலம் . |
வற்காலி | வெள்ளாடு ; ஆடு . |
வற்கித்தல் | ஒரு தொகையை அத் தொகையாற் பெருக்குதல் . |
வற்குணம் | கொடுமை . |
வற்கெனல் | வலிதாதற்குறிப்பு . |
வற்சதரம் | இளங்கன்று . |
வற்சவம் | எருமை , பசு இவற்றின் கன்று ; குழந்தைப் பருவம் ; ஒரு நாடு ; மார்பு . |
வற்சரம் | ஆண்டு . |
வற்சலம் | காண்க : வற்சலை ; பேரன்பு . |
வற்சலை | ஈன்ற பசு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 949 | 950 | 951 | 952 | 953 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வளார் முதல் - வற்சலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சூழ்தல், சங்கு, வளைவு, முதலியவற்றின், மரப்பட்டை, வளையல், வட்டம், கையணிவகை, கடிவாளம், வற்சலை, மரவுரி, மாலை, குதிரையின், சங்கறுப்போர், நிணம், வீடு, அல்லது, கைவளை, வளைவுள்ளது, சுற்று, சிறிய, வளைத்தல், முடியில்