முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வரிந்துகட்டுதல் முதல் - வருணதிசை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வரிந்துகட்டுதல் முதல் - வருணதிசை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வரிந்துகட்டுதல் | இறுக்கிக்கட்டுதல் ; வேலைக்கு ஆயத்தமாதல் . |
| வரிநிழல் | செறியாத நிழல் . |
| வரிப்பணம் | குடியிறை . |
| வரிப்பிளந்தெழுதுதல் | கையெழுத்து வரியில் இடைச்செருகி எழுதுதல் . |
| வரிப்பிளப்பு | இடைச்செருகி எழுதுவது . |
| வரிப்புலி | வேங்கைப்புலி . |
| வரிப்புறம் | அணில்வகை . |
| வரிப்பூனை | காட்டுப்பூனைவகை . |
| வரிமணல் | அறலினையுடைய மணல் . |
| வரியரிசி | சீரகம் . |
| வரியாடல் | எழுதுகை . |
| வரியிலார் | காண்க : வரிக்கூறுசெய்வார் . |
| வரியோலை | உடன்படிக்கைப் பத்திரம் . |
| வரிவடிவு | ஒலியெழுத்திற்கு அறிகுறியான கீற்றுவடிவு . |
| வரிவயம் | புலி . |
| வரிவரி | தண்ணீர்விட்டான்கிழங்கு . |
| வரிவரிமணலி | கற்றாழை . |
| வரிவனம் | தில்லைமரம் . |
| வரிவைத்தல் | குடியிறைவிதித்தல் ; வரிசையாகக் கட்டுதல் ; பொதுநிதி முதலியவற்றிற்காக வீதாசாரத்தொகை குறிப்பிடுதல் . |
| வருக்கம் | இனம் ; குலம் ; தொகுதி ; சதுரம் ; குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் பெருக்கிவருந் தொகை ; அத்தியாயம் ; ஒழுங்கு . |
| வருக்கமூலம் | வருக்கத் தொகைக்கு மூலமாயுள்ள எண் . |
| வருக்கமோனை | பாடல் அடிகளில் முதலெழுத்துகள் வருக்கவெழுத்துகளால் அமையும் மோனைவகை . |
| வருக்கவெதுகை | இனவெழுத்துகளால் ஆகும் எதுகைத்தொடை . |
| வருக்கவெழுத்து | உயிர் அல்லது ஒரு மெய்யின் இனத்தைச் சேர்ந்த எழுத்து . |
| வருக்கித்தல் | ஓர் எண்ணை அதே எண்ணாற் பெருக்குதல் . |
| வருக்கு | கஞ்சி ; பேரேடு . |
| வருக்கை | இனவரிசை ; வேர்ப்பலா ; உயிர்மெய் முதலிய எழுத்துகளின் இனம் ; மீன்வகை . |
| வருகம் | மயிற்றோகை ; இலை ; பரிவாரம் . |
| வருகாலம் | இனி வரப்போகுங் காலப்பகுதி , எதிர்காலம் . |
| வருங்காலம் | இனி வரப்போகுங் காலப்பகுதி , எதிர்காலம் . |
| வருச்சித்தல் | கைவிடுதல் ; விலக்குதல் . |
| வருட்டம் | வேப்பமரம் ; முட்டை . |
| வருட்டுதல் | தேற்றுதல் ; வயப்படுத்தல் . |
| வருடகம் | முடக்கொற்றான் . |
| வருடப்பாதி | அரையாண்டு , அயனம் . |
| வருடம் | ஆண்டு ; மழை ; பூகண்டம் ; ஆவணி ; புரட்டாசி மாதங்களைக் கொண்ட மழைக் காலம் , வருடம் அறுபது- 1. பிரபவ , 2. விபவ , 3. சுக்கில , 4. பிரமோதூத , 5. பிரசோற்பத்தி , 6. ஆங்கீரச ,7. சீமுக , 8. பவ. 9. யுவ , 10. தாது , 11. ஈசுவர , 12. வெகுதானிய , 13. பிரமாதி , 14. விக்கிரம , 15. |
| வருடம்அறுபது | 1. பிரபவ ; 2. விபவ ; 3. சுக்கில ; 4. பிரமோதூத ; 5. பிரசோற்பத்தி ; 6. ஆங்கீரச ; 7. சீமுக ; 8. பவ ; 9. யுவ ; 10. தாது ; 11. ஈசுவர ; 12. வெகுதானிய ; 13. பிரமாதி ; 14. விக்கிரம ; 15. விசு ; 16. சித்திரபானு ; 17. சுபானு ; 18. தாரண ; 19. பார்த்திப ; 20. விய ; 21. சர்வசித்து ; 22. சர்வதாரி ; 23. விரோதி ; 24. விகிர்தி ; 25. கர ; 26. நந்தன ; 27. விசய ; 28. சய ; 29. மன்மத ; 30. துன்முகி ; 31. ஏவிளம்பி ; 32. விளம்பி ; 33. விகாரி ; 34. சார்வரி ; 35. பிலவ ; 36. சுபகிருது ; 37. சோபகிருது ; 38. குரோதி ; 39. விசுவாவக ; 40. பராபவ ; 41. பிலவங்க ; 42. கீலக ; 43. சௌமிய ; 44. சாதாரண ; 45. விரோதிகிருது ; 46. பரிதாபி ; 47. பிரமாதீச ; 48. ஆனந்த ; 49. இராட்சச ; 50. நள ; 51. பிங்கள ; 52. காளயுக்தி ; 53. சித்தார்த்தி ; 54. இரௌத்திரி ; 55. துன்மதி ; 56. துந்துபி ; 57. உருத்திரோற்காரி ; 58. இரத்தாட்சி ; 59. குரோதன ; 60. அட்சய ; இவற்றுள் முதல் இருபதாண்டு உயர்ந்தவை ; இடை இருபதாண்டு இடைப்பட்டவை ; கடை இருபது ஆண்டு இழிந்தவை என்பர் . |
| வருடாகாலம் | மழைக்காலம் . |
| வருடாந்தரம் | ஆண்டுமுடிவு ; ஆண்டுதோறும் ; ஆண்டுக்கொருமுறையான . |
| வருடித்தல் | மழைபொழிதல் ; சொரிதல் . |
| வருடுதல் | தடவுதல் . |
| வருடை | வரையாடு ; ஆடு ; மேடராசி ; எண்காற்பறவை ; மாற்சரியம் . |
| வருடைமான் | மலையாடு . |
| வருணசரம் | செம்மணிகளாற் செய்த கழுத்தணி . |
| வருணதிசை | மேற்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 940 | 941 | 942 | 943 | 944 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வரிந்துகட்டுதல் முதல் - வருணதிசை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தாது, சீமுக, ஆங்கீரச, பிரசோற்பத்தி, ஈசுவர, வெகுதானிய, இருபதாண்டு, விக்கிரம, பிரமாதி, பிரமோதூத, சுக்கில, காலப்பகுதி, வரப்போகுங், எண்ணை, இனம், எதிர்காலம், வருடம், விபவ, பிரபவ, ஆண்டு, இடைச்செருகி

