தமிழ் - தமிழ் அகரமுதலி - வர்ணம் முதல் - வரவு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வர்ணம் | நிறம் ; சாதி ; குலம் ; அழகு ; ஒளி ; பொன்னுரை ; பொன் ; புகழ் ; மணம் ; துதி ; குங்குமம் ; பூச்சுப்பொருள் ; எழுத்து ; ஓசை ; சுரத்தின் எழுத்து ; மஞ்சள் ; வேடம் ; குணம் ; மாற்று . |
| வர்ணவேலை | சித்திரமெழுதுந் தொழில் . |
| வர்ணனை | புகழ்ந்துரைத்தல் ; தோத்திரம் . |
| வர்ணித்தல் | புனைந்துரைத்தல் ; தோத்திரித்தல் ; மிகைபடக் கூறுதல் ; உவமித்தல் . |
| வர்ணியம் | உவமேயம் . |
| வர்த்தகம் | வணிகம் ; பெருக்குவது . |
| வர்த்தகன் | வணிகன் ; பெருக்குபவன் . |
| வர்த்தமானகாலம் | நடக்கின்ற காலம் ; நிகழ்காலம் . |
| வர்த்தமானம் | செய்தி ; தற்கால நிகழ்ச்சி ; காண்க : ஆமணக்கு ; வர்த்தமானகாலம் . |
| வர்த்தனம் | தொடங்குதல் ; வளர்த்தல் ; பெருகுதல் . |
| வர்த்தனை | பெருகுகை ; வளர்ச்சி ; செல்வம் ; மானிய சுதந்தரம் ; ஏற்றஇறக்கமுறையில் சுரம்பாடுதல் ; ஒருவன் தசையான ஆண்டை மூன்றால் பெருக்கின எண் . |
| வர்த்தித்தல் | உளதாதல் ; நிகழ்தல் ; தங்குதல் ; பெருகுதல் . |
| வர்த்துலம் | வட்டவடிவு ; உருண்டை . |
| வர்மம் | உட்பகை ; காண்க : மருமம் . |
| வர்மித்தல் | பகைத்தல் . |
| வர | அசைச்சொல் ; வரை . |
| வரகதி | மேலான நிலை . |
| வரகவி | அருட்கவி ; சிறந்த செய்யுள் . |
| வரகாத்திரம் | தலை ; யானைத்தலை . |
| வரகு | தானியவகை ; சாமைவகை . |
| வரகுணம் | உயர்ந்தகுணம் . |
| வரகுதிரிகை | வரகு அரைக்கும் எந்திரம் . |
| வரங்கிடத்தல் | வரம்வேண்டுதல் . |
| வரடம் | அன்னம் ; கொடிவகை . |
| வரண்டகம் | உண்டை ; சுவர் ; யானைமேற்றவிசு ; காண்க : வரண்டகை ; முகப்பரு . |
| வரண்டகை | நாகணவாய்ப்புள் . |
| வரண்டியம் | செடிவகை . |
| வரணம் | தெரிந்தெடுத்தல் ; அமர்த்தல் ; சூழ்தல் ; மதில் ; மறைத்தல் ; சட்டை ; ஒட்டகம் ; பால் ; மரவகை . |
| வரத்து | வருகை ; நீர்வரும் வழி ; வரும்படி , வருவாய் ; பெருக்கு ; எல்லை ; வரவுதொகை காட்டுங் கணக்கு ; ஆணை ; மரபுவழி . |
| வரதட்சிணை | மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் பொருள் . |
| வரதநூல் | சகுனசாத்திரம் . |
| வரதம் | வரமளிப்பது ; நல்லுடை ; அருள் ; குபேரன் நிதி ; வரந்தருவதற்கு அறிகுறியாக அமையும் கை . |
| வரதன் | வரமளிப்பவன் ; கடவுள் ; உதவுவோன் ; காளமேகப் புலவரின் இயற்பெயர் ; சட்டநூல் இயற்றிய ஆசிரியர் . |
| வரதை | பார்வதி ; கன்னி ; வரந்தருபவள் . |
| வரநதி | கங்கையாறு . |
| வரப்படுத்துதல் | மனப்பாடஞ்செய்தல் ; வந்ததைப் பெற்றுக்கொள்ளுதல் . |
| வரப்பண்ணுதல் | வரவழைத்தல் ; காண்க : வரப்படுத்துதல் . |
| வரப்பிரசாதம் | கடவுளரின் அருட்கொடை . |
| வரப்பிரதானம் | வரமளிக்கை ; நன்கொடை . |
| வரப்பு | வயலின் கரை ; எல்லை . |
| வரப்புக்கடா | நண்டுவகை . |
| வரப்புள் | வயல் . |
| வரபலம் | வரத்தினாலாகிய தன்மை ; தென்னைமரம் . |
| வரம் | தெய்வம் முதலியவற்றாற் பெரும் பேறு ; அருள் ; வாழ்த்து ; வேண்டுகோள் ; விருப்பம் ; மேன்மை ; ஒரு நிதி ; சூழல் ; அடைக்கலாங்குருவி ; எறும்பு ; மஞ்சள் . |
| வரம்பழிதல் | அளவிலதாதல் ; அளவுகடத்தல் . |
| வரம்பிகத்தல் | அளவிலதாதல் ; அளவுகடத்தல் . |
| வரம்பில்காட்சி | பேரறிவு . |
| வரம்பிலறிவன் | கடவுள் . |
| வரம்பிலாற்றல் | முடிவிலா ஆற்றல் . |
| வரம்பிலின்பம் | அளவிலா ஆனந்தம் . |
| வரம்பிலின்பமுடைமை | சிவன் எண்குணத்துள் ஒன்றான அளவிலா ஆனந்தம் உடைமை . |
| வரம்பு | எல்லை ; வரப்பு ; அணை ; வழி ; விளிம்பு ; ஒழுங்கு ; வட்டி ; மனை . |
| வரம்புகட்டுதல் | அணைகட்டுதல் ; எல்லைகட்டுதல் ; முடித்தல் ; கடிப்புண் வட்டமாகத் தடித்தல் . |
| வரயோகம் | யோகவகை . |
| வரர் | சிறந்தவர் ; வானோர் . |
| வரலாற்றுமுறைமை | வழிவழியாகக் கையாளப்படும் அடிப்பட்ட வழக்கு . |
| வரலாறு | சரித்திரம் ; முன்வரலாறு ; நிகழ்ச்சி முறை ; செய்தி ; விவரம் ; ஒழுங்கு ; வழிவகை ; எடுத்துக்காட்டு . |
| வரவர | மேலும்மேலும் ; படிப்படியாய் . |
| வரவழைத்தல் | வருவித்தல் . |
| வரவிடுதல் | அனுப்புதல் . |
| வரவிருத்தன் | சிவபிரான் . |
| வரவு | வருவாய் ; வருகை ; வரலாறு ; விளைவு ; வழி ; வணங்குகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 938 | 939 | 940 | 941 | 942 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வர்ணம் முதல் - வரவு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, எல்லை, வரப்பு, வரவழைத்தல், வரப்படுத்துதல், கடவுள், அளவிலதாதல், அளவுகடத்தல், வரலாறு, ஒழுங்கு, ஆனந்தம், அளவிலா, நிதி, அருள், பெருகுதல், மஞ்சள், நிகழ்ச்சி, செய்தி, வரகு, வரண்டகை, எழுத்து, வருவாய், வருகை, வர்த்தமானகாலம்

