தமிழ் - தமிழ் அகரமுதலி - வரவுதாழ்த்தல் முதல் - வரிதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
வரவுதாழ்த்தல் | தாமதித்து வருதல் . |
வரவுமுறை | வருவாய் . |
வரவுவைத்தல் | செலுத்திய தொகையைக் குறித்து எழுதிவைத்தல் . |
வரவேற்றல் | எதிர்கொண்டு அழைத்தல் . |
வரவை | வயல்தாக்கு ; வரி . |
வரன் | சிறந்தவன் ; கடவுள் ; பிரமன் ; தமையன் ; மணமகன் ; கணவன் ; சீவன்முத்தருள் பிரமவரர் எனப்படும் வகையினன் . |
வரன்முறை | வரலாற்றுமுறை ; அடிப்படவந்த முறை ; வரலாறு ; ஊழ் ; பெரியோர்க்குச் செய்யும் போற்றுகை . |
வரன்றுதல் | வாருதல் . |
வராக்கடன் | காண்க : வாராக்கடன் . |
வராககற்பம் | திருமால் பன்றிப்பிறப்பெடுத்த காலம் . |
வராகபுடம் | இருபது அல்லது ஐம்பது வறட்டி வைத்துப் போடப்படும் புடம் . |
வராகம் | பன்றி ; திருமால் ; பிறப்புகளுள் ஒன்று ; பதினெண் புராணத்துள் ஒன்று ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; கணிதநூல் ; காண்க : நிலப்பனை ; ஒரு நாட்டுப் பகுதி ; போர் ; ஆசனவகை . |
வராகன் | பன்றி உருக்கொண்ட திருமால் ; மூன்றரை ரூபா மதிப்புள்ள பொன் நாணயம் ; காண்க : வராகன்பூண்டு ; அருகன் . |
வராகன்பூண்டு | மூக்குத்திப்பூண்டு . |
வராகனெடை | பொன்நிறுக்கும் நிறைவகை . |
வராகி | சிறுகுறட்டை ; காண்க : சிற்றரத்தை ; நிலப்பனை ; வராகபுடம் ; சிறுகுறிஞ்சாக்கொடி ; வாராகி . |
வராகிவேய் | முள்ளம்பன்றிமுள் . |
வராங்ககம் | இலவங்கப்பட்டை . |
வராங்கம் | தலை ; அழகிய உருவம் ; உடல் ; யானை ; இலவங்கம் ; வானவரின் உடம்பு . |
வராங்கனை | உருவிற்சிறந்தவள் ; கூந்தற்பனை . |
வராசனன் | வாயிற்காப்போன் ; கள்ளக்கணவன் . |
வராசான் | கருப்பூரவகை . |
வராடகம் | தாமரையின் காய் ; பலகறை ; கயிறு . |
வராடி | பலகறை ; பாலை யாழ்த்திறத்துள் ஒன்று ; முரட்டுநூற் சீலை . |
வரால் | ஒரு மீன்வகை . |
வராலி | செடிவகை . |
வராளம் | பாம்பு . |
வராளி | சந்திரன் ; ஒரு பண்வகை ; யாழ் வகை ; மண்ணீரல் . |
வராற்பகடு | ஆண்வரால் . |
வராற்போத்து | இளவரால் . |
வரானி | செடிவகை ; பாலை . |
வரி | கோடு ; தொய்யில் முதலிய வரி ; கைரேகை ; ஒழுங்குநிரை ; எழுத்து ; புள்ளி ; தேமல் ; வண்டு ; கடல் ; கட்டு ; பல தெருக்கள் கூடுமிடம் ; வழி ; இசை ; இசைப்பாட்டு ; கூத்துவகை ; கடைச்சங்கத்து நூல்களுள் ஒன்று ; உயர்ச்சி ; நீளம் ; குடியிறை ; தீ ; நிறம் ; அழகு ; வடிவு ; நெல் . |
வரிக்கடை | வண்டு . |
வரிக்கயிறு | வடக்கயிறு . |
வரிக்கல் | நீளமாக அடித்துத் திருத்திய கல் . |
வரிக்காரன் | வரி வாங்குபவன் ; வரி கொடுப்பவன் ; வடக்கயிறு திரிப்போன் . |
வரிக்குதிரை | பலநிறக் கோடுள்ள குதிரை ; சேணம்வேண்டாக் குதிரை ; விலங்குவகை . |
வரிக்கூத்து | கூத்துவகை . |
வரிக்கூறுசெய்வார் | அரசிறை அதிகாரிகள் . |
வரிக்கோலம் | தொய்யிலின் பத்திக்கீற்று . |
வரிகயிறு | வண்டியில் மூட்டையைப் பிணைத்துக் கட்டுங் கயிறு . |
வரிகோலம் | காண்க : வரிக்கோலம் . |
வரிச்சந்தி | பல தெருக்கள் கூடுமிடம் . |
வரிச்சல் | கட்டுவரிச்சல் , கூரையிலிடுங் குறுக்குச்சட்டம் . |
வரிச்சு | கட்டுவரிச்சல் , கூரையிலிடுங் குறுக்குச்சட்டம் . |
வரிச்சுருள் | செவ்வட்டை . |
வரிசி | தூண்டில் . |
வரிசை | ஒழுங்கு ; நிரையொழுங்கு ; வேலை முறை ; அரசர் முதலியோரால் பெறுஞ் சிறப்பு ; அரசசின்னம் ; மரியாதை ; மேம்பாடு ; தகுதி ; பாராட்டு ; நல்லொழுக்கம் ; நன்னிலை ; சீராகச் செய்யும் நன்கொடை ; வீதம் ; ஊர்வரிவகை ; பயிர்விளைவில் உழவனுக்குரிய பங்கு . |
வரிசைக்கிரமம் | ஒழுங்குமுறை . |
வரிசைசெய்தல் | மரியாதைசெய்தல் ; காண்க : வரிசையெடுத்தல் . |
வரிசைபார்த்தல் | ஒழுங்குமுறையை அளவுக்கு மிஞ்சிக் கவனித்தல் . |
வரிசைமகளிர் | விறலியர் . |
வரிசைமாதர் | விறலியர் . |
வரிசையாளர் | நிலத்தைப் பயிரிடுங் குடிகள் . |
வரிசையெடுத்தல் | பலரும் அறியச் சீர் எடுத்தல் . |
வரிட்டம் | மிகச் சிறந்தது . |
வரிட்டன் | மேலானவன் ; சீவன்முத்தருள் பிரமவரிட்டர் வகையினன் . |
வரித்தல் | எழுதுதல் ; சித்திரமெழுதுதல் ; பூசுதல் ; கட்டுதல் ; மொய்த்தல் ; கோலஞ்செய்தல் ; ஓடுதல் ; தேர்ந்துகொள்ளுதல் ; அமர்த்தல் ; அழைத்தல் . |
வரிதகம் | முப்பத்திரண்டு அடியான் வரும் இசைப்பாட்டு . |
வரிதல் | எழுதுதல் ; ஓவியந் தீட்டுதல் ; பூசுதல் ; மூடுதல் ; கட்டுதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 939 | 940 | 941 | 942 | 943 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வரவுதாழ்த்தல் முதல் - வரிதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, திருமால், கட்டுவரிச்சல், வரிக்கோலம், குதிரை, இசைப்பாட்டு, கூத்துவகை, வடக்கயிறு, கூரையிலிடுங், குறுக்குச்சட்டம், பூசுதல், கட்டுதல், எழுதுதல், விறலியர், வரிசையெடுத்தல், கூடுமிடம், செடிவகை, வராகபுடம், பன்றி, செய்யும், முறை, சீவன்முத்தருள், வகையினன், நிலப்பனை, வராகன்பூண்டு, அழைத்தல், வண்டு, பாலை, கயிறு, பலகறை, தெருக்கள்