முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வம்புவளர்த்தல் முதல் - வயிரப்படை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வம்புவளர்த்தல் முதல் - வயிரப்படை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வம்புவளர்த்தல் | காண்க : வம்பளத்தல் . |
| வம்மை | பெற்றோர் மணமகட்டுக் கொடுக்குஞ் சீர் . |
| வமனம் | வாயாலெடுத்தல் ; வாந்திசெய்மருந்து . |
| வமிசபரம்பரை | குலமுறை ; குலமுறையாய் வருவது . |
| வமிசம் | குலம் ; மூங்கில் ; வேய்ங்குழல் . |
| வமிசவிருத்தி | மரபிற்குரிய இயல்பு ; குலத்தைப் பெருக்குகை . |
| வமிசாவளி | மரபுவழி ; வமிசபரம்பரையைத் தெரிவிக்கும் அட்டவணை . |
| வய | வலி ; மிகுதி . |
| வயக்கம் | ஒளி ; விளக்கம் . |
| வயக்கு | ஒளி . |
| வயக்குதல் | விளங்கச்செய்தல் ; திருத்துதல் ; பழக்குதல் . |
| வயகுண்டம் | கவிழ்தும்பை . |
| வயங்கல் | கண்ணாடி . |
| வயங்குதல் | ஒளிசெய்தல் ; விளங்குதல் ; தெளிதல் ; தோன்றுதல் ; மிகுதல் ; நடத்தல் . |
| வயசானவன் | முதியவன் . |
| வயசு | காண்க : வயது . |
| வயசுகாலம் | இளமைப்பருவம் ; முதுமைப்பருவம் . |
| வயசுப்பிள்ளை | இளைஞன் ; பகுத்தறியும் பருவமடைந்தவன் . |
| வயஞானம் | உண்மையுணர்வு . |
| வயணம் | விதம் ; நிலைமை ; விவரம் ; உணவு முதலியவற்றின் வளம் ; நல்லமைப்பு ; நேர்த்தி ; காரணம் ; ஏற்றது . |
| வயத்தம்பம் | இளமைநிலை மாறாமல் நிறுத்தும் வித்தை . |
| வயத்தன் | வசப்பட்டவன் . |
| வயதரம் | கடுக்காய் . |
| வயது | அகவை ; ஆண்டு ; இளமை . |
| வயதுசென்றவன் | முதியவன் ; பகுத்தறியும் பருவமடைந்தவன் . |
| வயதுவருதல் | பகுத்தறியும் பருவமடைதல் . |
| வயதெற்றி | திப்பிலி . |
| வயந்தக்கிழவன் | காண்க : வயந்தமன்னவன் . |
| வயந்தகம் | மகளிர் தலைக்கோலத் தொங்கல் உறுப்பு . |
| வயந்தமன்னவன் | மன்மதன் . |
| வயப்படுதல் | வசமாதல் ; தலைப்படுதல் . |
| வயப்புலி | அரிமா . |
| வயப்போத்து | அரிமா . |
| வயம் | வலிமை ; வெற்றி ; பூமி ; வேட்கை ; பறவை ; வசம் ; மூலம் ; சம்பந்தம் ; ஏற்றது ; நீர் ; இரும்பு ; குதிரை ; ஆடு ; முயல் ; கிராம்பு . |
| வயமம் | அத்தி . |
| வயமா | அரிமா ; ஆவணிமாதம் ; புலி ; யானை ; குதிரை . |
| வயமான் | அரிமா ; புலி . |
| வயமீன் | உரோகிணிநாள் . |
| வயல் | கழனி ; மருதநிலம் ; வெளி . |
| வயலை | பசலைக்கொடி ; வெளி . |
| வயவரி | புலி . |
| வயவன் | வீரன் ; திண்ணியன் ; படைத்தலைவன் ; காதலன் ; கணவன் ; காரிப்பிள்ளை . |
| வயவு | வலிமை ; காண்க : வயவுநோய் ; விருப்பம் . |
| வயவுநோய் | கருப்பகாலத்து மகளிர்க்கு உண்டாகும் மயக்கம் . |
| வயவெற்றி | காண்க : வயதெற்றி . |
| வயவை | வழி . |
| வயளை | பசலைக்கொடி . |
| வயற்கடைதூரம் | வயலளவுள்ள தொலைவு . |
| வயற்கரை | வயலுள்ள பகுதி ; வயல் ; வரப்பு . |
| வயற்சார்பு | மருதநிலம் . |
| வயறு | கொக்கி ; கயிறு . |
| வயன் | விதம் ; நிலைமை ; இனிய உணவு ; நல்லமைப்பு ; விவரம் ; நேர்த்தி ; ஏற்றது ; காரணம் . |
| வயனம் | உரை ; வகை ; வேதம் ; பழிமொழி ; காண்க : வயன் . |
| வயனர் | பறவை வடிவினர் . |
| வயா | வேட்கைப்பெருக்கம் ; காண்க : வயவுநோய் ; கருப்பம் ; கருப்பை ; மகப்பேற்றுநோய் ; வருத்தம் ; நோய் . |
| வயாநோய் | காண்க : வயவுநோய் . |
| வயாப்பண்டம் | கருக்கொண்ட மகளிர் விரும்பும் தின்பண்டம் . |
| வயாமது | சீந்திற்கொடி . |
| வயாவு | காண்க : வயா . |
| வயாவுதல் | விரும்புதல் . |
| வயாவுயிர்த்தல் | கருவீனுதல் ; வருத்தந் தீர்தல் . |
| வயானம் | பறவை ; சுடுகாடு . |
| வயிடூயம் | காண்க : வயிரக்கல் . |
| வயிடூரியம் | காண்க : வயிரக்கல் . |
| வயித்தியம் | மருத்துவம் ; சிகிச்சை ; மருத்துவநூல் ; மருத்துவனது தொழில் . |
| வயிந்தவம் | மாயை ; குதிரை . |
| வயிர் | கூர்மை ; ஊதுகொம்பு ; மூங்கில் . |
| வயிர்த்தல் | வயிரங்கொள்ளுதல் ; கோபங்கொள்ளுதல் . |
| வயிரக்கல் | ஒன்பதுவகை மணியுள் ஒன்று . |
| வயிரகரணி | செடிவகை . |
| வயிரச்சங்கிலி | சரப்பணி எண்ணும் அணி . |
| வயிரப்படை | வச்சிரப்படை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 936 | 937 | 938 | 939 | 940 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வம்புவளர்த்தல் முதல் - வயிரப்படை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வயவுநோய், அரிமா, புலி, பறவை, ஏற்றது, பகுத்தறியும், வயிரக்கல், குதிரை, வலிமை, மருதநிலம், வயன், பசலைக்கொடி, வெளி, மகளிர், வயல், வயதெற்றி, பருவமடைந்தவன், விதம், வயது, முதியவன், மூங்கில், நிலைமை, விவரம், காரணம், நேர்த்தி, நல்லமைப்பு, உணவு, வயந்தமன்னவன்

