தமிழ் - தமிழ் அகரமுதலி - வண்ணத்தூதன் முதல் - வதரி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வண்ணத்தூதன் | திருமுகங் கொண்டு போவோன் . |
| வண்ணநீர் | அரக்குநீர் . |
| வண்ணம் | நிறம் ; சிததிரமெழுதற்குரிய கலவை ; சாந்துப்பொது ; அழகு ; இயற்கையழகு ; ஒப்பனை ; குணம் ; நன்மை ; சிறப்பு ; கனம் ; வடிவு ; சாதி ; இனம் ; வகை ; பாவின்கண் நிகழும் ஓசைவிகற்பம் ; சந்தப்பாட்டு ; காண்க : முடுகியல் ; பண் ; இசைப்பாட்டு ; மாலை ; செயல் ; எண்வகை . |
| வண்ணமகள் | கோலஞ்செய்வாள் . |
| வண்ணமாலை | நெடுங்கணக்கு . |
| வண்ணமுதம் | பருப்புச்சோறு . |
| வண்ணவுவமம் | நிறம்பற்றிக் கூறும் உவமை . |
| வண்ணாத்தான் | காண்க : வண்ணத்தான் . |
| வண்ணாத்தி | ஒரு பறவைவகை ; வண்ணாரப்பெண் ; மருந்துப்பொடி ; பூநீறு ; தட்டாரப்பூச்சி ; ஒரு மீன்வகை ; நாகணவாய்ப்புள் . |
| வண்ணாத்திப்பூச்சி | காண்க : வண்ணத்துப்பூச்சி . |
| வண்ணாரத்துறை | காண்க : வண்ணான்றுறை . |
| வண்ணான் | ஆடைவெளுப்பவன் . |
| வண்ணான்றுறை | வண்ணான் ஆடைவெளுக்கும் நீர்த்துறை . |
| வண்ணிகன் | எழுத்தாளன் . |
| வண்ணிகை | மருந்துச்சரக்குவகை . |
| வண்ணித்தல் | புனைந்துரைத்தல் ; புகழ்தல் ; மிகைபடக் கூறுதல் ; விரித்தல் . |
| வண்புகழ் | கொடையால் வரும் கீர்த்தி . |
| வண்மை | வளப்பம் ; ஈகை ; குணம் ; வாய்மை ; வலிமை ; அழகு ; புகழ் ; வாகைமரம் . |
| வணக்கம் | காண்க : வணக்கு ; சிறப்பித்தல் ; கீழ்ப்படிதல் . |
| வணக்கு | வளைகை ; வழிபாடு ; வணக்கங்கூறுகை . |
| வணக்குதல் | பணியச்செய்தல் ; வளையச்செய்தல் . |
| வணங்காமுடியோன் | பிறர்க்குக் கீழ்ப்படாத அரசன் ; மற்றொருவரை வணங்காதவன் ; துரியோதனன் . |
| வணங்குதல் | நுடங்குதல் ; அடங்குதல் ; ஏவற்றொழில் செய்தல் ; வழிபடுதல் ; சூழ்ந்துகொள்ளுதல் . |
| வணர் | கட்டடவேலை ; வளைவு . |
| வணர்தல் | வளைதல் ; மயிர் சுருண்டிருத்தல் . |
| வணிகம் | பொருள்களை வாங்கிவிற்றல் . |
| வணிகர்தொழில் | வணிகரின் ஆறு தொழில்களான ஓதல் , வேட்டல் , ஈதல் , உழவு , நிரையோம்பல் , வாணிகம் ஆகியன . |
| வணிகன் | பொருள்களை வாங்கிவிற்பவன் ; வைசியன் ; துலாராசி . |
| வணிகு | வைசியன் . |
| வணிதம் | நாட்டுப்பகுதி ; செப்பம் . |
| வணைத்தல் | வளைத்தல் ; தண்ணீர் ஊற்றுதல் . |
| வணைதல் | வளைதல் . |
| வத்தகம் | வணிகம் ; வெட்பாலை ; வளர்ச்சி . |
| வத்தகன் | வணிகன் . |
| வத்தகாலம் | நிகழ்காலம் ; நடக்கின்ற காலம் ; காண்க : வர்த்தமானகாலம் . |
| வத்தம் | சோறு . |
| வத்தமம் | ஆமணக்கஞ்செடி . |
| வத்தமானம் | நிகழ்காலம் . |
| வத்தனை | ஆக்கம் ; மரபுவழி ; உயிர்வாழ்க்கை ; கூலி . |
| வத்தா | சொல்பவன் ; நூலாசிரியன் ; நாவிதன் . |
| வத்தாக்கு | கொம்மட்டிக்கொடி . |
| வத்தாலை | கொடிவகை . |
| வத்தி | திரி ; ஊதுவத்தி ; தீக்குச்சி ; விளக்குத்தகழி ; மெழுகுவத்தி ; ஆடையின் அருகு ; மணியின்கீழ்ப் பதிக்கும் வண்ணத்தகடு . |
| வத்தித்தல் | பெருகுதல் ; உளதாதல் . |
| வத்திப்பெட்டி | தீப்பெட்டி . |
| வத்தியம் | காண்க : வதகம் . |
| வத்திரம் | ஆடை ; முகம் ; போர்க்கருவி . |
| வத்திவைத்தல் | வெடிகொளுத்துதல் ; சண்டை மூட்டுதல் ; கோட்சொல்லுதல் ; புண்ணிற்குக் காரம்வைத்தல் . |
| வத்தினை | உரிமைப்பேறு . |
| வத்து | பொருள் ; மது ; உவமை . |
| வத்துநிச்சயம் | கடவுளது உண்மைத் தன்மை , உருவம் என்பவற்றைப்பற்றிச் செய்யும் முடிவு . |
| வத்துநிண்ணயம் | கடவுளது உண்மைத் தன்மை , உருவம் என்பவற்றைப்பற்றிச் செய்யும் முடிவு . |
| வத்துபரிச்சேதம் | ஒன்று இன்ன பொருளாகத் தான் இருக்கும் இன்ன பொருளாக இராது என்று பொருளினால் அளவிடுகை . |
| வத்துளம் | வட்டமானது ; சக்கரம் . |
| வத்தூரம் | கீரைவகை . |
| வத்தை | மரத்தோணி ; உள்வயிரமற்றது ; உயிர் வாழ்க்கை ; கூலி . |
| வதக்கம் | வாடுதல் ; இளைப்பு . |
| வதக்குதல் | வாட்டுதல் ; வருத்துதல் . |
| வதகம் | இறப்பு . |
| வதகன் | கொலைகாரன் . |
| வதங்கல் | வாடியது ; ஈரப்பசை நீங்காத உணவுப்பண்டம் ; உடல்வலியற்றவர் ; உடல்வலியற்றது . |
| வதங்குதல் | வாடுதல் ; சோர்தல் . |
| வதந்தி | புரளி ; உறுதிபடுத்தப்படாத பேச்சு ; பிரஸ்தாபம் . |
| வதம் | கொலை ; நோன்பு . |
| வதரி | இலந்தைமரம் ; காண்க : பதரிகாசிரமம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 934 | 935 | 936 | 937 | 938 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வண்ணத்தூதன் முதல் - வதரி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தன்மை, உண்மைத், கடவுளது, உருவம், வதகம், செய்யும், வாடுதல், இன்ன, முடிவு, கூலி, என்பவற்றைப்பற்றிச், வைசியன், வண்ணான், வண்ணான்றுறை, உவமை, குணம், வணக்கு, வளைதல், அழகு, வணிகன், பொருள்களை, வணிகம், நிகழ்காலம்

