முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வடுகக்கடவுள் முதல் - வண்ணத்துப்பூச்சி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வடுகக்கடவுள் முதல் - வண்ணத்துப்பூச்சி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வடுகக்கடவுள் | வைரவமூர்த்தி . |
| வடுகச்சி | வடுகப்பெண் . |
| வடுகர் | தெலுங்கர் ; தமிழகத்தில் வாழும் தெலுங்கு இனத்தவர் . |
| வடுகன் | வைரவன் ; பிரமசாரி ; இளைஞன் ; மூடன் ; தெலுங்கநாட்டான் . |
| வடுகன்றாய் | காளி . |
| வடுகி | காளி . |
| வடுகு | தமிழ்நாட்டின் வடவெல்லையிலுள்ள நாடு ; ஆந்திரமாநிலம் ; தெலுங்குமொழி ; தெலுங்கர் சாதி ; மருத யாழ்த்திறத்துள் ஒன்று ; இந்தளராகம் ; மெய்க்கூத்துவகை ; பூணூல் அணிவிக்குஞ் சடங்கு ; இரத்தினக் குற்றவகை . |
| வடுச்சொல் | பழிமொழி . |
| வடுத்தல் | பிஞ்சுவிடுதல் ; வெளிப்படுத்துதல் . |
| வடுமாங்காய் | மாம்பிஞ்சு . |
| வடுவகிர் | மாவடுவின் பிளவு . |
| வடுவரி | வண்டு . |
| வடை | உழுந்தாற் செய்யப்படும் ஒரு பலகாரவகை . |
| வடையம் | பொட்டலமாகக் கட்டிய வெற்றிலை பாக்கு ; நெல்லிக்கனி முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை . |
| வடையற்றது | வீணானது . |
| வண்களமர் | வேளாளர் . |
| வண்சிறை | மதில் . |
| வண்டத்தனம் | குறும்புத்தனம் ; அவையில் கூறத்தகாத சொல் . |
| வண்டம் | குந்தப்படை . |
| வண்டயம் | கழல் ; காண்க : வண்டவாளம் . |
| வண்டர் | அரசனுக்கு நாழிகை யறிவிக்குங் கடிகையார் ; மங்கலப்பாடகர் ; வீரர் . |
| வண்டல் | மகளிர் விளையாட்டுவகை ; மகளிர் கூட்டம் ; விளையாட்டாக இழைத்த சிற்றில் ; நீர் முதலியவற்றி னடியில் தங்கிய பொடிமண் முதலியன ; நீரொதுக்கிவிட்ட மண் ; பருக்கைக் கல் ; பொருக்கு ; நீர்ச்சுழி . |
| வண்டலடித்தல் | வயலுக்கு உரமாக வண்டல் பரப்புதல் ; வயல் மண்மேடிடுதல் . |
| வண்டலம் | சேறு . |
| வண்டலவர் | விளையாட்டு மகளிர் . |
| வண்டலாயம் | விளையாடுந் தோழியர் கூட்டம் . |
| வண்டலிழைத்தல் | மணலால் சிற்றில் இழைத்து விளையாடுதல் . |
| வண்டவாளம் | நிலைமை ; முதல் . |
| வண்டற்படுகை | வண்டலிட்ட ஆற்றோரம் . |
| வண்டற்பாவை | வண்டலாற் செய்த விளையாட்டுப் பாவை . |
| வண்டன் | குள்ளன் ; திண்ணியன் ; தீயோன் ; விருத்தசேதனம் பண்ணப்பட்டவன் . |
| வண்டனான் | முனிவன் . |
| வண்டாலம் | குந்தாலி ; ஆயுதவகை ; சூரயுத்தம் . |
| வண்டானம் | நாரைவகை . |
| வண்டி | சகடம் ; வண்டிப்பாரம் ; வயிறு ; அடிமண்டி . |
| வண்டிக்காரன் | வண்டியோட்டுபவன் ; வண்டிக்கு உரியவன் . |
| வண்டிகட்டுதல் | மாட்டை வண்டியில் பூட்டுதல் ; யாத்திரை முதலியன தொடங்குதல் . |
| வண்டிச்சத்தம் | வண்டிவாடகை . |
| வண்டித்தடம் | வண்டிபோகும் வழி . |
| வண்டிப்பாரம் | வண்டியிலேற்றுஞ் சுமை ; தானிய அளவுவகை . |
| வண்டில் | சக்கரம் ; சகடம் . |
| வண்டு | அறுகாற் சிறுபறவைவகை ; மறவருள் ஓர் உட்பிரிவினர் ; அம்பு ; குற்றம் ; கைவளை ; சங்கு ; நூல் ; பூசநாள் ; அபிநயவகை ; சிற்றொழுக்கம் ; மரவகை ; வைக்கோற்கூடு . |
| வண்டுகடி | வண்டுகொட்டுகை ; மேகப்படை ; செடிவகை . |
| வண்டுச்சிலந்தி | ஒரு புண்வகை . |
| வண்டுணாமலர் | சண்பகப்பூ ; வேங்கைப்பூ . |
| வண்டுநாணான் | வண்டுகளை வில்லின் நாணாக உடைய காமன் . |
| வண்டுருவன் | திருமால் . |
| வண்டுறை | எழுத்திலாவோசை . |
| வண்டெச்சில் | தேன் . |
| வண்டை | வெண்டைச்செடி ; கொச்சையானது . |
| வண்ணக்கட்சி | காண்க : வண்ணக்களஞ்சியம் . |
| வண்ணக்கம்மர் | வண்ணவேலை செய்வோர் . |
| வண்ணக்களஞ்சியம் | வண்ணக்கவி பாடுவதில் வல்லவன் . |
| வண்ணக்கன் | நாணயசோதகன் . |
| வண்ணக்கிரமம் | அகரமுதலிவரிசை ; சாதியொழுங்கு . |
| வண்ணக்குழிப்பு | வண்ணச்செய்யுளின் சந்தவாய்பாடு . |
| வண்ணகம் | வருணித்துப் புகழுகை ; சந்தனம் ; மணம் ; அராகம் என்னும் கலிப்பாவுறுப்பு . |
| வண்ணகவொத்தாழிசைக்கலிப்பா | ஒரு தரவு , மூன்று தாழிசை , அராகம் , அம்போதரங்கம் , தனிச்சொல் , சுரிதகம் என்னும் இவ்வாறு உறுப்பினையும் கொண்டுவரும் கலிப்பாவகை . |
| வண்ணச்சுவையமுதம் | காண்க : வண்ணமுதம் . |
| வண்ணடை | துகில்வகை . |
| வண்ணத்தரு | ஒரு பாடல்வகை . |
| வண்ணத்தான் | வண்ணான் . |
| வண்ணத்துப்பூச்சி | தட்டாரப்பூச்சி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 933 | 934 | 935 | 936 | 937 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வடுகக்கடவுள் முதல் - வண்ணத்துப்பூச்சி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மகளிர், சகடம், முதலியன, வண்டிப்பாரம், வண்ணக்களஞ்சியம், என்னும், அராகம், சிற்றில், கூட்டம், தெலுங்கர், வண்டு, வண்டவாளம், வண்டல், சொல், காளி

