முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வடநூல் முதல் - வடுக்கொள்ளுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வடநூல் முதல் - வடுக்கொள்ளுதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
வடநூல் | வடமொழியிலுள்ள நூல் . |
வடபல்லி | தலைக்கோலத்திற் புல்லகமென்னும் அணிகலன் . |
வடபுலம் | வடநாடு ; உத்தரகுரு . |
வடபூமி | வடநாடு . |
வடபொழில் | வடக்கிலுள்ள நாட்டுப்பகுதி . |
வடம் | கனமான கயிறு ; தாம்பு ; வில்நாண் ; மணிவடம் ; சரம் ; ஒழுங்கு ; ஆலமரம் ; மண்டலம் ; பலகை . |
வடமகீதரம் | காண்க : வடகிரி . |
வடமரம் | ஆலமரம் ; கப்பலின் நடுவிலிருக்கும் பாய்மரம் . |
வடமலை | மேருமலை ; இமயமலை ; திருப்பதிமலை ; மந்தரமலை . |
வடமலையான் | திருப்பதித் திருமால் . |
வடமீன் | அருந்ததி ; துருவமீன் . |
வடமூலகன் | சிவன் . |
வடமேரு | மேருமலை . |
வடமேற்றிசைக்குறி | கழுதை . |
வடமேற்றிசைப்பாலன் | வாயு . |
வடமொழி | சமஸ்கிருதம் . |
வடரம் | தலைச்சீலை ; பாய் . |
வடலி | இளம்பனைமரம் . |
வடவர் | வடநாட்டார் . |
வடவரை | மேருமலை ; மந்தரமலை . |
வடவளம் | வடநாட்டில் விளைந்த பண்டம் . |
வடவனல் | காண்க : வடந்தைத்தீ . |
வடவனலம் | காண்க : வடந்தைத்தீ . |
வடவாக்கினி | காண்க : வடந்தைத்தீ . |
வடவாமுகம் | காண்க : வடந்தைத்தீ . |
வடவாமுகாக்கினி | காண்க : வடந்தைத்தீ . |
வடவானலம் | காண்க : வடந்தைத்தீ . |
வடவு | மெலிவு . |
வடவேங்கடம் | திருப்பதிமலை ; வடமலை . |
வடவை | பெண்குதிரை ; காண்க : வடந்தைத்தீ ; அடிமைப்பெண் ; குதிரைச்சாதிப் பெண் ; எருமை ; பெண்யானை . |
வடவைக்கனல் | காண்க : வடந்தைத்தீ . |
வடவைத்தீ | காண்க : வடந்தைத்தீ . |
வடாது | வடக்கிலுள்ளது ; வடக்கு . |
வடாரகம் | கயிறு . |
வடி | தேன் ; கள் ; நீளுகை ; வடித்தெடுக்கை ; கூர்மை ; வாரிமுடிக்கை ; ஆராய்ச்சி ; காண்க : வடிகயிறு ; மாவடு ; கயிறு ; நாய் ; மாம்பிஞ்சின் பிளவு ; காற்று ; உருவம் ; சிறுதடி . |
வடிக்கண் | வடுவகிர்போலும் கண் . |
வடிக்கதிர் | நூல்முறுக்குங் கருவி . |
வடிகட்டுதல் | வடித்தெடுத்தல் ; சாரத்தைத் திரட்டுதல் . |
வடிகயிறு | குதிரைவாய்க் கயிறு . |
வடிகாது | தொங்குந் துளைச்செவி . |
வடிகால் | நீரை வடியவிடுங் கால்வாய் . |
வடிசம் | தூண்டில் . |
வடிசல் | நீர் முதலியன வடிதல் ; வடிக்கை ; வடித்த சோறு ; நீளுகை . |
வடிசாந்து | நற்சாந்து . |
வடித்தல் | வடியச்செய்தல் ; வடிகட்டுதல் ; பிழிதல் ; தைலமிறக்குதல் ; திருத்தமாகச் செய்தல் ; சாரமான சொல்லால் அமைதல் ; வசமாக்குதல் ; பழக்குதல் ; பயிலுதல் ; சோறுசமைத்தல் ; கூராக்குதல் ; வாரிமுடித்தல் ; தகடாக்குதல் ; நீளமாக்குதல் ; யாழ்நரம்பை உருவுதல் ; அலங்கரித்தல் ; ஆராய்தல் ; ஆராய்ந்தெடுத்தல் ; கிள்ளியெடுத்தல் . |
வடிதமிழ் | தெளிந்த தமிழ் . |
வடிதயிர் | கட்டித்தயிர் . |
வடிதல் | நீர் முதலியன வற்றுதல் ; ஒழுகுதல் ; திருந்துதல் ; தெளிதல் ; அழகுபெறுதல் ; நீளுதல் . |
வடிப்பம் | வடிவழகு ; செப்பம் ; அழகு ; திறம் . |
வடிப்போர் | யானை முதலியன பயிற்றுவோர் . |
வடிம்பிடுதல் | கட்டாயப்படுத்தல் ; தேரை நிறுத்திக் கிளப்புதல் ; தூண்டுதல் ; பழிகூறுதல் . |
வடிம்பு | விளிம்பு ; கூரைச்சாய்வு ; தேர் முதலியவற்றைக் கிளப்புந் தணிமரம் ; தாங்குமரம் ; தழும்பு ; பழி . |
வடிம்புக்கழி | குறுக்குவிட்டம் . |
வடிமணி | தெளிந்த ஓசையுள்ள மணி . |
வடியல் | வடிதல் ; ஒன்றிலிருந்து நீக்கிய வடித்த நீர் முதலியன ; சமைக்கப்பட்டது . |
வடியிடுதல் | வடித்தெடுத்தல் . |
வடிவணங்கு | அழகிய பெண் . |
வடிவம் | உருவம் ; உடம்பு ; அழகு ; நிறம் ; ஒளி ; மெய்ச்சொல் . |
வடிவவுவமம் | உருவத்தை ஒப்பித்துக் கூறும் உவமை . |
வடிவாளன் | அழகுள்ளவன் . |
வடிவிலாக்கூற்று | அசரீரிவாக்கு , வானொலி . |
வடிவு | காண்க : வடிவம் ; அல்குல் ; வடிந்தது ; வடிந்த நீர் . |
வடிவெழுத்து | திருந்திய கையெழுத்து ; ஒலியின் குறியாக எழுதப்படும் எழுத்து . |
வடிவேல் | கூரிய வேல் ; முருகக்கடவுள் . |
வடு | தழும்பு ; மாம்பிஞ்சு ; இளங்காய் ; உடல் மச்சம் ; உளியாற் செதுக்கின உரு ; புண்வாய் ; குற்றம் ; பழி ; கேடு ; கருமணல் ; செம்பு ; வாள் ; வண்டு ; பிரமசாரி ; இளைஞன் ; வைரவன் ; புத்திசாலிப் பையன் . |
வடுக்கொள்ளுதல் | தழும்புபடுதல் ; புண் முதலியன ஆறத்தொடங்குதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 932 | 933 | 934 | 935 | 936 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வடநூல் முதல் - வடுக்கொள்ளுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வடந்தைத்தீ, முதலியன, நீர், கயிறு, வடிதல், மேருமலை, வடித்த, அழகு, வடிவம், தழும்பு, வடித்தெடுத்தல், தெளிந்த, வடிகயிறு, திருப்பதிமலை, வடமலை, ஆலமரம், மந்தரமலை, பெண், உருவம், வடநாடு, நீளுகை, வடிகட்டுதல்