முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வட்டம்போடுதல் முதல் - வடந்தைத்தீ வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வட்டம்போடுதல் முதல் - வடந்தைத்தீ வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வட்டம்போடுதல் | காண்க : வட்டமிடுதல் ; சூடடிக்க நெற்கதிர்களை நிலத்திற் பரப்புதல் . |
| வட்டமிடுதல் | பறவைமுதலியன சுற்றிவருதல் ; உருண்டையாதல் ; சூழ்ந்துவருதல் ; நோக்கங்கொண்டு சுற்றுதல் . |
| வட்டரவு | வட்டவடிவு . |
| வட்டன் | வட்டுப்போன்ற உடலுடையவன் ; ஒவ்வொரு முறையும் . |
| வட்டா | வாயகன்ற பாண்டம் . |
| வட்டாட்டு | வட்டுக்கொண்டாடுஞ் சூதாட்டம் . |
| வட்டாடுதல் | வட்டை உருட்டிச் சூதாடுதல் . |
| வட்டாணி | திறமை . |
| வட்டாரம் | காற்றுப்பகுதி ; வீட்டின் சுற்றுப்புறம் ; வீடு ; தானியக்களஞ்சியம் . |
| வட்டி | கடகப்பெட்டி ; கூடை ; ஒரு படி அளவு கொண்ட முகத்தலளவை ; பலகறை ; வழி ; கிண்ணம் ; கருவுற்றாளுக்கு உண்டாகும் மயக்கம் ; ஒரு விருதுவகை ; பணத்தைப் பிறன் பயன்படுத்தியதற்காக உடையவன் பெறும் ஊதியம் ; இலாபம் . |
| வட்டிக்குவட்டி | வட்டித்தொகைக்குக் கொடுக்கும் மேல்வட்டி ; வட்டியை முதலோடு சேர்த்துக் கணக்கிட்டுக் கொடுக்கும் வட்டி . |
| வட்டிகை | சித்திரம் எழுதுங் கோல் ; சித்திரம் ; சுற்றளவு ; வட்டம் ; கைம்மணி ; கூடை ; ஒரு விருதுவகை ; ஓர் ஓடவகை ; நால்வகைச் சாந்தினுள் ஒன்று . |
| வட்டிகைப்பலகை | ஓவியனுக்குப் பயன்படும் வண்ணக்குழம்பு வைக்கும் பலகை . |
| வட்டிகைப்பாவை | சித்திரப்பதுமை . |
| வட்டித்தல் | வட்டமாதல் ; சுழலுதல் ; உறுதிமொழி யெடுத்தல் ; தாளம்போடல் ; தோள் புடைத்தல் ; சுழற்றுதல் ; உருட்டுதல் ; பரிமாறுதல் ; கட்டுதல் ; எழுதுதல் ; வளைத்தல் ; கடிதல் . |
| வட்டிப்பு | வட்டம் ; சூள் . |
| வட்டியில்லாக்கடன் | வட்டியின்றிக் கொடுக்குங் கடன்தொகை ; திருப்பிச்செய்தலை எதிர் நோக்கிக் கொடுக்கும் நன்கொடை ; மொய் . |
| வட்டில் | கிண்ணம் ; உண்கலம் ; ஒரு படி அளவு கொண்ட முகத்தலளவை ; நாழிகைவட்டில் ; அம்புக்கூடு ; கூடை ; வழி ; ஒரு விருதுவகை ; அப்பளஞ் செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுருண்டை . |
| வட்டிற்பூ | தாமரைப்பூ . |
| வட்டினி | பந்தயப்பொருள் . |
| வட்டு | சூதாடுங் கருவி ; திரட்சி ; திரண்ட பொருள் ; நீர்வீசு கருவிகளுள் ஒன்று ; ஒரு விளையாட்டுக் கருவிவகை ; அப்பளஞ் செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுருண்டை ; முள்ளிச்செடி ; சிறுதுணி ; கண்டசருக்கரை ; குடையில் கம்பிகள் கூடுமிடம் . |
| வட்டுடை | முழந்தாளளவாக உடுக்கும் சிறப்புடை ; ஆடை . |
| வட்டுப்போர் | சூதாட்டம் . |
| வட்டுவப்பை | வெற்றிலை முதலியனவைக்கும் பை ; மருந்துப்பை ; பையின் உட்பை . |
| வட்டுவம் | வெற்றிலை முதலியனவைக்கும் பை ; மருந்துப்பை ; பையின் உட்பை . |
| வட்டெலி | மரவெலி . |
| வட்டெழுத்து | பழைய தமிழெழுத்து . |
| வட்டை | வழி ; சக்கரத்தின் மேல் வளைமரம் ; தேர் ; வயல் ; பெருங்காடு ; திக்கு ; மலை வட்டைமரம் ; மரவட்டைவகை ; நாட்டுப்பகுதி ; புலியின் உடல்வரி ; அகன்று வட்ட வடிவமாயமைந்த பக்காப்படிவகை . |
| வட்புலி | அரிமா . |
| வடக்கயிறு | ஏர்நாழிக்கயிறு ; தேர் முதலியவற்றை யிழுக்குங் கயிறு . |
| வடக்கிருத்தல் | உயிர்துறக்குந் துணிவுடன் வடக்கு நோக்கியிருந்து உயிர்விடுதலை மேற்கொள்ளுதல் . |
| வடக்கு | நான்கு திசையுள் ஒன்று . |
| வடக்குநோக்கி | காந்தவூசி . |
| வடக்குமலையான் | காண்க : வடமலையான் . |
| வடகம் | கறிப்பொருள்களை அரைத்த மாவுடன் சேர்த்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை ; வற்றல் ; மேலாடை ; துகில்வகை ; காண்க : வடகு . |
| வடகயிலை | வெள்ளியங்கிரி . |
| வடகலை | வடமொழி ; வடமொழிநூல் ; வைணவப் பிரிவினர் ; வடகலை வைணவர் தரிக்குந் திருமண்காப்பு . |
| வடகாற்று | வாடை . |
| வடகிரி | மேருமலை . |
| வடகிழக்கு | வடக்குங் கிழக்குஞ் சேருங் கோணத்திசை . |
| வடகீழ்த்திசை | வடக்குங் கிழக்குஞ் சேருங் கோணத்திசை . |
| வடகீழ்த்திசைப்பாலன் | ஈசானன் . |
| வடகு | தோல் . |
| வடகோடு | பிறைச்சந்திரனின் வடக்குமுனை . |
| வடசொல் | காண்க : வடமொழி . |
| வடதளம் | ஆலிலை . |
| வடதிசைப்பாலன் | குபேரன் . |
| வடதுருவம் | வடக்கிலுள்ள முனை . |
| வடந்தை | வடதிசையில் உள்ளது ; வடகாற்று . |
| வடந்தைத்தீ | பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடலுக்குள் தங்கியிருந்து ஊழி முடிவில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படுந் தீ . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 931 | 932 | 933 | 934 | 935 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வட்டம்போடுதல் முதல் - வடந்தைத்தீ வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, விருதுவகை, கொடுக்கும், ஒன்று, கூடை, தேர், வடக்கு, உட்பை, மருந்துப்பை, பையின், வடகு, கிழக்குஞ், சேருங், கோணத்திசை, வடக்குங், வடகாற்று, வடகலை, வடமொழி, முதலியனவைக்கும், செய்யுமாறு, அளவு, கொண்ட, வட்டி, வட்டை, வட்டமிடுதல், சூதாட்டம், முகத்தலளவை, கிண்ணம், உருட்டிவைக்கும், மாவுருண்டை, அப்பளஞ், வட்டம், சித்திரம், வெற்றிலை

