தமிழ் - தமிழ் அகரமுதலி - வசி முதல் - வஞ்சனை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
வசி | பிளவு ; கூர்மை : நுனி கூர்மையான கோல் ; கழுக்கோல் ; தழும்பு ; வாள் ; சூலம் ; இருப்பிடம் ; வசியம் ; தன்வயப்படுத்துவது ; தாழ்ச்சி ; தேற்றுகை ; வசியவித்தைக்குரிய சொல் ; காண்க : வசித்துவம் ; உரைநடை ; வாசிக்கை ; ஐந்தெழுத்து மந்திரவகை ; மழை ; நீர் ; குற்றம் ; வெள்வெங்காயம் . |
வசிகம் | மிளகு . |
வசிகரணம் | கலைஞானம் ; புணர்ச்சிக்கு இணக்கம் ; காண்க : வசீகரணம் . |
வசிகரம் | காண்க : வசீகரணம் ; அழகு ; ஆனைத்திப்பிலி ; சீந்திற்கொடி . |
வசிகரித்தல் | தன்வயப்படுத்துதல் ; வேண்டுதல் . |
வசிகரிப்பு | விண்ணப்பம் . |
வசிகன் | தன்வயத்தன் . |
வசித்தல் | வாழ்தல் ; தங்குதல் ; பேசுதல் ; காண்க : வசிதல் ; வசியஞ்செய்தல் . |
வசித்துவம் | எண்வகைச் சித்திகளுள் ஒன்று ; யாவரையும் தன்வயப்படுத்தி நிற்குந் தன்மை . |
வசிதடி | கண்டமாக்கிய துண்டம் . |
வசிதல் | பிளத்தல் ; வடுப்படுதல் ; வளைதல் . |
வசிதை | தடுத்தற்கரிய ஆற்றலுடைமை . |
வசியகுளிகை | தன்னை வைத்திருப்பவனுக்குப் பிறரை வசமாகச் செய்விக்கும் மாயமாத்திரை . |
வசியப்பொருத்தம் | கலியாணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று . |
வசியம் | வசப்படுகை ; காதல் ; கைவசம் ; ஒரு வித்தைவகை ; கிராம்பு . |
வசியை | கற்புடையவள் . |
வசிரம் | ஆனைத்திப்பிலி ; கடலுப்பு . |
வசிவு | பிளத்தலால் உண்டாகும் வடு ; வளைவு ; காமன் . |
வசீகரணம் | வசியப்படுத்தல் ; காமன் கணைகளுள் வசீகரத்தைச் செய்யும் அம்பு ; பிறரை வசஞ்செய்யும் வித்தை . |
வசீகரம் | வசமாக்கல் . |
வசீகரன் | வசியப்படுத்துவோன் . |
வசீகரித்தல் | தன்வயமாக்குதல் . |
வசீரன் | வீரன் ; குதிரைவீரன் ; திப்பிலி . |
வசு | எண்வகை வசுக்கள் ; சுடர் ; அக்கினி தேவன் ; பொன் ; செல்வம் ; கதிர் ; இரத்தினம் ; நீர் ; மரப்பொது ; பசுவின் கன்று ; வெள்வெங்காயம் . |
வசுகம் | எருக்கஞ்செடி . |
வசுகிரி | பொன்மலை ; மேருமலை . |
வசுதை | காண்க : வசுமதி . |
வசுந்தரை | காண்க : வசுமதி . |
வசுநாள் | அவிட்டநாள் . |
வசுமதி | பூமி . |
வசுவசி | சாதிபத்திரி . |
வசுவாசி | சாதிபத்திரி . |
வசூரை | விலைமகள் . |
வசூல் | சேகரிப்பு ; சேகரிக்கும் வரி முதலியன . |
வசூல்பாக்கி | நிலுவைத்தொகை . |
வசூலித்தல் | வரி முதலியவற்றைத் தண்டுதல் . |
வசை | நிந்தை ; பழிப்பு ; இகழ்ச்சி ; வசைகூறும் பாடல் ; குற்றம் ; அகப்பை ; மலட்டுப்பசு ; பசு ; பெண்யானை ; கணவனுடன் பிறந்தாள் ; பெண் ; மகள் ; நிணம் ; மனைவி . |
வசைக்கூத்து | நகைச்சுவைபற்றி வரும் கூத்து . |
வசைகவி | வசைகூறும் பாடல் ; வசைபாடுவோன் . |
வசைச்சொல் | நிந்தைச்சொல் . |
வசைத்தல் | வளைத்தல் ; சூழ்தல் . |
வசைதல் | வசைகூறுதல் ; வளைதல் ; சூழப்படல் . |
வசைப்படுதல் | வடுப்படுதல் ; குற்றமுறல் . |
வசைப்பாட்டு | வசைகூறும் பாடல் . |
வசையுநர் | வசைகூறுவோர் ; பகைவர் . |
வசைவு | பழிப்பு ; குற்றம் . |
வஞ்சகச்சொல் | ஏமாற்றும் பேச்சு . |
வஞ்சகம் | விரகு ; ஏமாற்றம் ; மறைவு ; நரி . |
வஞ்சகமூடி | ஆமை . |
வஞ்சகன் | சூழ்ச்சிக்காரன் ; ஏமாற்றுபவன் ; கயவன் ; நரி . |
வஞ்சகி | சூழ்ச்சிக்காரி ; ஏமாற்றுபவள் . |
வஞ்சந்தீர்தல் | பழிவாங்குதல் . |
வஞ்சப்புகழ்ச்சியணி | பழிப்பினால் புகழ்ச்சியும் புகழ்ச்சியால் பழிப்பும் தோன்றக் கூறும் ஓர் அணி . |
வஞ்சப்பெண் | காளியேவல் செய்பவள் ; காண்க : வஞ்சகி . |
வஞ்சபாவம் | வஞ்சகத்தன்மை . |
வஞ்சம் | கபடம் ; பொய் ; கொடுமை ; வாள் ; வஞ்சினம் ; பழிக்குப்பழி ; மாயம் ; சிறுமை ; அழிவு ; மரபு ; பிரபஞ்சம் . |
வஞ்சம்வைத்தல் | பழிவாங்கப்பார்த்தல் . |
வஞ்சவம் | பாம்பு . |
வஞ்சவிறுதி | பொய்ச்சாக்காடு . |
வஞ்சன் | வஞ்சகமுள்ளவன் . |
வஞ்சனம் | வஞ்சகம் ; ஒரு மீன்வகை . |
வஞ்சனி | காண்க : வஞ்சப்பெண் ; வஞ்சகி ; பார்வதி ; மாயையென்னுந் தேவதை ; பெண் ; ஆணை . |
வஞ்சனை | தந்திரம் ; பொய் ; மாயம் ; காண்க : வஞ்சனைப்புணர்ப்பு ; ஆணை ; தெய்வப்பெண் ; பெண் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 929 | 930 | 931 | 932 | 933 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வசி முதல் - வஞ்சனை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, குற்றம், வசைகூறும், வஞ்சகி, பாடல், பெண், வசீகரணம், வசுமதி, பழிப்பு, சாதிபத்திரி, வஞ்சகம், மாயம், பொய், வஞ்சப்பெண், காமன், வளைதல், நீர், வசித்துவம், வசியம், வாள், வெள்வெங்காயம், ஆனைத்திப்பிலி, சொல், வடுப்படுதல், ஒன்று, வசிதல், பிறரை