தமிழ் - தமிழ் அகரமுதலி - வச்சிரம் முதல் - வசனித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வச்சிரம் | இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம் ; மிகவும் உறுதியானது ; வைரமணி ; மரத்தின் காழ் ; சதுரக்கள்ளி ; மல்லர் கருவிவகை ; ஒரு பசைவகை ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; வச்சிரநாடு . |
| வச்சிரமணி | வைரக்கல் . |
| வச்சிரமாலை | இந்திரர் முதலிய தேவர் தோளிலணியும் மாலை . |
| வச்சிரயாக்கை | உறுதியான உடல் . |
| வச்சிரயாப்பு | மரங்களை வச்சிரப்பசையினாற் சேர்க்கை ; வச்சிரப்படையால் எழுதியது போன்று என்றும் அழியாவெழுத்து . |
| வச்சிரரேகை | பெண் மகப்பேறடைவதைக் குறிப்பதாகக் கருதப்படும் இரேகைவகை . |
| வச்சிரலேபம் | ஒன்றாக இணைக்கும் பசைவகை . |
| வச்சிரவண்ணன் | குபேரன் . |
| வச்சிரவணன் | குபேரன் . |
| வச்சிரவல்லி | பிரண்டைக்கொடி ; சூரியகாந்தி . |
| வச்சிரன் | இந்திரன் . |
| வச்சிராங்கம் | சதுரக்கள்ளிமரம் . |
| வச்சிராங்கி | உறுதியான கவசம் ; வைரம்பதித்த கவசம் . |
| வச்சிராசனி | இந்திரனது வச்சிரப்படை ; இந்திரனின் கொடி . |
| வச்சிராட்சி | பிரண்டைக்கொடி . |
| வச்சிராயுதம் | இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம் ; இந்திரனின் ஆயுதம் . |
| வச்சிராவர்த்தம் | இராமன் வில் . |
| வச்சிரி | காண்க : வச்சிரதரன் . |
| வச்சை | வாஞ்சை ; இவறல் ; பழிப்பு . |
| வச்சைமாக்கள் | உலுத்தர் , இவறலர் . |
| வச்சையம் | கலைமான் . |
| வச்சையன் | உலுத்தன் . |
| வசக்கட்டு | வாணிகக் கூட்டாளியிடம் கொடுத்த தொகை ; ஒப்படைத்த பொருள் ; செலவுக்கென்று முன்னதாகக் கொடுத்த பணம் ; ஆட்சி . |
| வசக்குதல் | வளையப்பண்ணுதல் ; நிலத்தைத் திருத்துதல் ; வயப்படுத்துதல் . |
| வசங்கண்டவன் | உண்மையறிந்தவன் ; பட்டறிவுள்ளவன் ; ஒரு பழக்கத்தில் விழுந்தவன் . |
| வசங்கெட்டவன் | விருப்பமில்லாதவன் ; நலமில்லாதவன் ; நிலைமைகெட்டவன் ; மனமின்றி வேலைசெய்பவன் ; கட்டினின்று விடுபட்டவன் ; ஒழுங்கீனன் ; நட்பற்றவன் . |
| வசஞ்செய்தல் | வயப்படுத்துதல் ; அடக்குதல் ; கைப்பற்றுதல் . |
| வசதி | வீடு ; மருதநிலத்தூர் ; நல்லிடம் ; ஏந்து ; இரவு ; சினாலயம் . |
| வசந்தகாலம் | காண்க : இளவேனில் . |
| வசந்தத்திருவிழா | இளவேனிலில் நடைபெறும் திருவிழா ; காமன்பண்டிகை . |
| வசந்ததரு | மாமரம் . |
| வசந்ததூதம் | குயில் ; மாமரம் ; சித்திரைமாதம் ; பாதிரிமரம் ; ஒரு பண்வகை . |
| வசந்தபஞ்சமி | காமனுக்குரியதாய் மாசிமாதத்து வளர்பிறையில் வரும் பஞ்சமிதிதி . |
| வசந்தம் | இளவேனிற் பருவம் ; சித்திரைமாதம் ; வசந்தத் திருவிழா ; நறுமணம் ; தென்றற்காற்று ; ஒரு பண்வகை ; மணப்பொடி ; காதற்பேச்சு ; சிறிய முத்து ; இந்திரன் மாளிகை . |
| வசந்தமண்டபம் | பூஞ்சோலை நடுவணுள்ள மண்டபம் . |
| வசந்தமலர் | இலவங்கம் . |
| வசந்தமாலை | தென்றலைச் சிறப்பித்துக் கூறும் நூல்வகை . |
| வசந்தருது | காண்க : இளவேனில் . |
| வசந்தவிழா | காண்க : வசந்தத்திருவிழ . |
| வசந்தன் | மன்மதன் ; காமனின் நண்பன் ; இளவேனிற் காலத்துக்குரிய தேவன் ; தென்றல் ; ஒரு கூத்துவகை . |
| வசந்தனடித்தல் | கும்மியடித்தல் ; வசந்தன் கூத்து ஆடுதல் . |
| வசந்தா | ஒரு பண்வகை . |
| வசந்தி | காண்க : இருவாட்சி . |
| வசந்திகை | தேமல் . |
| வசந்தோற்சவம் | காண்க : வசந்தத்திருவிழா . |
| வசநாவி | காண்க : வச்சநாபி(வி) . |
| வசப்படுத்துதல் | தன்னுடையதாக்குதல் . |
| வசப்படுதல் | வயமாதல் ; அகப்படுதல் . |
| வசம் | தன்வயம் ; ஆட்சி ; கீழ்ப்படிதல் ; ஒழுங்கு ; நிலைமை ; இயலுகை ; நேர் ; பக்கம் ; மூலமாய் ; படியெடுக்குந் தாள் ; வசம்பு . |
| வசம்பு | ஒரு மருந்துச்செடிவகை . |
| வசரம் | கோழி . |
| வசலை | பசளைக்கொடி . |
| வசவன் | பசுவின் ஆண்கன்று ; வசுவதேவர் . |
| வசவி | தேவதாசி ; கெட்டநடத்தையுள்ளவள் . |
| வசவிர்த்திக்கொள்ளுதல் | தன் விருப்பப்படி வேலைவாங்குதல் . |
| வசவு | இழிவுரை . |
| வசன் | எல்லை ; நேர் . |
| வசனநடை | உரைநடை . |
| வசனம் | சொல் ; பேசுகை ; உரைநடை ; பழமொழி ; ஆகமவளவை ; உடை ; அரைப்பட்டிகை ; நோன்பு . |
| வசனாவி | காண்க : வச்சநாபி(வி) . |
| வசனித்தல் | சொல்லுதல் ; விவரித்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 928 | 929 | 930 | 931 | 932 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வச்சிரம் முதல் - வசனித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பண்வகை, மாமரம், சித்திரைமாதம், திருவிழா, வசந்தத்திருவிழா, வயப்படுத்துதல், இளவேனில், இளவேனிற், வசம்பு, உரைநடை, நேர், வச்சநாபி, வசந்தன், ஆட்சி, கொடுத்த, பசைவகை, ஒன்று, ஓராயுதம், பிடியாயுள்ள, சூலமாய், நடுவு, உறுதியான, குபேரன், இந்திரனின், சொல், கவசம், இந்திரன், பிரண்டைக்கொடி, இருதலைச்

