முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வகைச்சூத்திரம் முதல் - வச்சிரபீசம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வகைச்சூத்திரம் முதல் - வச்சிரபீசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வகைச்சூத்திரம் | தொகுத்துச் சொல்லப்பட்டதனை வேறுவேறாக வகுத்துரைக்குஞ் சூத்திரம் . |
| வகைசெய்தல் | ஏற்பாடுசெய்தல் ; வழிசெய்தல் ; கணக்கிற் பதிவுசெய்தல் ; நிலங்களுக்குத் தீர்வை ஒழுங்குசெய்தல் . |
| வகைசொல்லுதல் | விவரஞ் சொல்லுதல் ; கணக்குக்காட்டுதல் . |
| வகைத்தார் | காண்க : வகைமாலை . |
| வகைதெரிவு | பகுத்தறிவு . |
| வகைநிலைக்கொச்சகம் | கொச்சகவகை . |
| வகைப்படுத்துதல் | பங்கிடுதல் ; வகையாகப் பிரித்தல் . |
| வகைபண்ணுதல் | ஏற்பாடுசெய்தல் ; கணக்கிற் பதிவுசெய்தல் ; வழிசெய்தல் . |
| வகைமாலை | தளிரும் பூவும் விரவத் தொடுத்த மாலை . |
| வகைமுதலடுக்கலங்காரம் | பலவகையான முதற்பொருள்களை அடைசினை புணராது செய்யுள் முழுதும் அடுக்கிக் கூறுவதாகிய அணி . |
| வகைமோசம் | இரண்டகம் , நம்பிக்கைமோசம் ; திக்கற்ற நிலை . |
| வகையறா | சார்ந்தது . |
| வகையறிதல் | செய்யும்முறை தெரிதல் ; கூறுபாடறிதல் . |
| வகையறுத்தல் | வழக்குத் தீர்த்தல் ; பகுத்தறிதல் . |
| வகையறுதல் | கதியற்றுப்போதல் . |
| வகையார் | இனத்தார் . |
| வகையுளி | அசைமுதல் உறுப்புகளைச் சொல்நோக்காது இசைநோக்கி வண்ணமறுக்கை . |
| வகைவைத்தல் | காரியமாகக் கொள்ளுதல் ; கணக்கில் வரவுவைத்தல் . |
| வங்கக்கல் | சுக்கான்கல் . |
| வங்கசிந்தூரம் | ஈயத்தின் சிந்தூரம் . |
| வங்கணத்தி | உற்ற தோழி ; கொடியவள் . |
| வங்கணம் | நட்பு ; காதல் ; தகுதி ; செடிவகை . |
| வங்கணன் | உற்ற தோழன் ; கொடியவன் . |
| வங்கநீர் | கடல் . |
| வங்கநீறு | ஈயமணல் . |
| வங்கப்பாண்டி | ஊர்திவகை . |
| வங்கப்பாவை | மருந்துச்சரக்குவகை . |
| வங்கம் | கப்பல் ; ஓர் ஊர்திவகை ; ஈயம் ; தகரம் ; துத்தநாகம் ; வெள்ளி ; ஒரு நாடு ; ஒரு மொழி ; அலை ; ஆற்றுவளைவு ; கருத்து ; வறுமை ; கத்தரிச்செடி . |
| வங்கர் | நெய்தல்நில மக்கள் ; வங்கநாட்டார் . |
| வங்கன் | சண்டாளன் ; வறிஞன் . |
| வங்கா | பறவைவகை ; ஊதுகொம்புவகை . |
| வங்காரம் | பொன் ; உலோகக்கட்டி ; செப்பம் . |
| வங்காளி | வங்கநாட்டான் ; வங்கமொழி ; வாழை . |
| வங்கி | தோளணிவகை ; வளைந்த ஆயுதவகை ; பாங்கி ; சம்பாநெல்வகை ; கொடிவேலி . |
| வங்கிசம் | வமிசம் ; காண்க : வங்கியம் . |
| வங்கியம் | இசைக்குழல் ; மூங்கில் . |
| வங்கு | கல் முதலியவற்றின் அளை ; எலிவளை ; மலைக்குகை ; மரப்பொந்து ; கப்பலின் விலாச் சட்டம் ; பாய்மரக்குழி ; நாய்ச்சொறி ; கழுதைப்புலி ; தாழம்பூவின் மகரந்தம் . |
| வங்குக்கால் | கப்பலின் விலாப்பலகைகளைத் தைக்குஞ் சட்டம் . |
| வங்கூழ் | காற்று ; வாதம் . |
| வங்கை | பகை ; குறும்பு . |
| வச்சகம் | மலைமல்லிகைச்செடி ; வெட்பாலை . |
| வச்சணத்தி | அன்பு . |
| வச்சநாபி | பச்சநாவி ; நச்சுச்செடிவகை . |
| வச்சநாவி | பச்சநாவி ; நச்சுச்செடிவகை . |
| வச்சம் | கன்று ; ஒரு நாடு . |
| வச்சயம் | கலைமான் ; கருநிறமுள்ள மான்வகை . |
| வச்சரி | வேம்பு . |
| வச்சலமணி | கோரோசனை . |
| வச்சனி | மஞ்சள் . |
| வச்சி | காயாமரம் . |
| வச்சிரக்கட்டு | பலமான அமைப்பு . |
| வச்சிரக்கபாய் | உறுதியான காப்புச்சட்டை . |
| வச்சிரக்கல் | வைரமணி . |
| வச்சிரகங்கடம் | மிக்க உறுதியுள்ள சட்டைவகை . |
| வச்சிரகங்கடன் | அனுமான் . |
| வச்சிரகாயம் | காண்க : வச்சிரயாக்கை . |
| வச்சிரசரீரம் | காண்க : வச்சிரயாக்கை . |
| வச்சிரதரன் | வச்சிரப்படையுடைய இந்திரன் . |
| வச்சிரதுண்டம் | கருடன் ; கொக்கு ; வலியான் . |
| வச்சிரநிம்பம் | கருவேம்புமரம் . |
| வச்சிரப்படை | இருதலைச் சூலமாய் நடுவுபிடியாயுள்ள ஓராயுதம் ; கோபுரத்தின் அடிநிலைக் கட்டடம் . |
| வச்சிரப்படையோன் | காண்க : வச்சிரதரன் . |
| வச்சிரபாணி | காண்க : வச்சிரதரன் . |
| வச்சிரபாதம் | இடியேறு . |
| வச்சிரபீசம் | கெட்டியான விதையுடைய கழற்சிக்காய் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 927 | 928 | 929 | 930 | 931 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வகைச்சூத்திரம் முதல் - வச்சிரபீசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வச்சிரதரன், சட்டம், கப்பலின், பச்சநாவி, நச்சுச்செடிவகை, வச்சிரயாக்கை, வங்கியம், ஊர்திவகை, கணக்கிற், வழிசெய்தல், பதிவுசெய்தல், வகைமாலை, ஏற்பாடுசெய்தல், உற்ற, நாடு

