தமிழ் - தமிழ் அகரமுதலி - வ முதல் - வகை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
வ | ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்+அ) ; கால் என்னும் பின்னவெண்ணின் குறி ; பலவின்பால் விகுதியுள் ஒன்று . |
வக்கணித்தல் | விவரித்துரைத்தல் ; மனம் கோணியிருத்தல் . |
வக்கணை | கடிதம் முதலியவற்றின் முகப்புரை ; போற்றுரை ; வருணனை ; பட்டப்பெயர் ; நாகரிகம் ; ஒழுங்கு ; நிந்தை ; திறமையான பேச்சு . |
வக்கரன் | காண்க : வக்கிரன் . |
வக்கரனை | எல்லாப் பண்புகளும் குழலின் ஆறு துளைகளாலேயே உண்டாகும்படி விரல்களால் சமன்செய்து ஆராய்கை . |
வக்கரித்தல் | காண்க : வக்கிரித்தல் . |
வக்கரை | வரிந்துகட்டும் முகட்டுக்கட்டை ; அங்கவடி ; பற்கறை . |
வக்கா | கொக்குவகை ; சிப்பிவகை . |
வக்காணம் | ஆலாபனம் . |
வக்காணிக்குமண்டபம் | சாத்திர சம்பந்தமாக வாதம் நிகழுமிடம் . |
வக்காணித்தல் | விரித்துரைத்தல் ; வாதஞ் செய்தல் . |
வக்காலத்து | வழக்கு முதலியன நடத்துவதற்கு வழக்கறிஞருக்குக் கொடுக்கும் அதிகாரப்பத்திரம் . |
வக்கிரக்கண் | மாறுகண் . |
வக்கிரக்கிரீவம் | வளைந்த கழுத்துடைய ஒட்டகம் . |
வக்கிரகம் | மழையால் உண்டாகும் தடை . |
வக்கிரசந்திரன் | இளம்பிறை . |
வக்கிரதந்தம் | வளைந்த பல் . |
வக்கிரதுண்டன் | விநாயகன் . |
வக்கிரநாசிகம் | வளைந்த அலகுடைய கிளி : ஆந்தை . |
வக்கிரம் | வளைவு ; வட்டம் ; சென்றவழியே மீளுகை ; நேர்மையற்ற செலவு ; கொடுமை ; பொய் ; பொறாமை ; கோளின் பிற்போக்கான நடை ; வஞ்சனை ; கலக்கம் ; கோணல்வழி . |
வக்கிரவுத்தி | சொன்ன சொற்களுக்கு வெவ்வேறு பொருள்கொண்டு மறுமொழி யுரைப்பதாகிய அணி . |
வக்கிரன் | மாறுபாடுள்ளவன் ; குரூரன் ; சனி ; செவ்வாய் ; உருத்திரன் தந்தவக்கிரன் ; ஓர் அசுரன் . |
வக்கிராங்கம் | வளைந்த வடிவுடைய அன்னப் பறவை . |
வக்கிராங்கி | காண்க : கடுகுரோகிணி . |
வக்கிரித்தல் | கோள் மடங்கித் திரும்புதல் ; கோணியிருத்தல் ; மனங்கோணியிருத்தல் ; ஆலாபனஞ்செய்தல் . |
வக்கு | வேகுகை ; தோல் ; ஊமைக்காயம் ; நீர்த்தொட்டி ; மூத்திரக்குண்டிக்காய் ; வழி ; அண்டவிதை . |
வக்குத்திரிகரணம் | படுக்கை . |
வக்குதல் | வதக்குதல் . |
வக்குரித்தல் | வேதல் . |
வகச்சல் | மாலைவகை . |
வகதி | எருது ; காற்று ; நண்பன் . |
வகந்தம் | காற்று ; குழந்தை . |
வகம் | காற்று ; வழி ; ஊர்தி ; குதிரை . |
வகிடு | வகிர்ந்த முன்தலைமயிரின் இடைவெளியொழுங்கு . |
வகித்தல் | தாங்குதல் . |
வகிர் | பிளவு ; கீறு ; வழி ; காண்க : வகிடு ; வார்க்கச்சு ; தோல்வார் ; நரம்பு ; பிளந்த துண்டு . |
வகிர்தல் | துண்டாக அறுத்தல் ; பிளத்தல் ; கீறுதல் ; கோதுதல் ; பங்குசெய்தல் ; காண்க : வகிரெடுத்தல் . |
வகிரங்கம் | வெளிப்படை ; வெளியுறுப்பு . |
வகிரியாகம் | வெளியரங்கப் பூசை . |
வகிரெடுத்தல் | உச்சியினின்று நெற்றியின் மத்திவரை மயிரை ஒழுங்குபடப் பிரித்தல் . |
வகிரேந்திரியம் | அறிகருவியாகிய புலன் . |
வகுஞ்சம் | இரவு . |
வகுணி | காண்க : வகுளி . |
வகுத்தல் | கூறுபடுத்தல் ; பகிர்ந்துகொடுத்தல் ; இனம்பற்றிப் பிரித்தல் ; பகுத்துக் கணக்கிடல் ; அமர்த்துதல் ; வகைப்படுத்தல் ; நியமத்தோடு செலவிடுதல் ; பூசுதல் ; படைத்தல் . |
வகுத்தான் | ஊழ் . |
வகுத்திரம் | தெப்பம் . |
வகுத்துக்காட்டல் | முப்பத்திரண்டு நூல் உத்திகளுள் ஒன்றான தொகுத்துக் காட்டியவற்றை வேறுபிரித்துக் காட்டுதல் . |
வகுதல் | பிளத்தல் . |
வகுதி | வகுப்பு . |
வகுந்து | வழி . |
வகுப்பு | கூறுபடுத்துகை ; இனம்பற்றிப் பிரிக்கை ; பிரிவு ; சாதி ; தரம் ; காண்க : வகிடு ; தடுக்கப்பட்ட அறை ; பொலிவு ; சந்தம் ; அழகு . |
வகுப்புவாரி | சாதிவீதம் . |
வகுமை | மகிழ்ச்சி . |
வகுலி | மீன் . |
வகுளம் | மகிழமரம் . |
வகுளாபரணர் | மகிழம்பூவை அணிந்த நம்மாழ்வார் . |
வகுளி | ஒலி . |
வகை | கூறுபாடு ; சாதியினம் ; இனம் ; முறை ; வழி ; காரணம் ; தந்திரம் ; வலிமை ; தன்மை ; வாழ்க்கைக்குரிய பொருள் முதலியன ; வணிக முதல் ; இடம் ; உறுப்பு ; குறுந்தெரு ; மனையின் பகுப்பு ; விவரம் ; கூட்டப்படும் எண்கள் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 926 | 927 | 928 | 929 | 930 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வ முதல் - வகை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வளைந்த, வகிடு, காற்று, பிரித்தல், வகுளி, இனம்பற்றிப், வகுப்பு, வகிரெடுத்தல், பிளத்தல், வக்கிரித்தல், கோணியிருத்தல், வக்கிரன், முதலியன