முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஆவரணச்சுவர் முதல் - ஆவிவிடுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆவரணச்சுவர் முதல் - ஆவிவிடுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆவிருத்தியலங்காரம் | பின்வருநிலையணி . |
| ஆவிருதம் | மறைக்கப்பட்டது |
| ஆவிருதி | ஆணவமலம் . |
| ஆவிருந்து | நிகழ்காலம் காட்டும் ஓர் இடைநிலை . |
| ஆவிரை | செடிவகை . |
| ஆவிலம் | கலங்கல் நீர் . |
| ஆவிலியர் | வேளாளர் ; வேடர் . |
| ஆவிவாங்குதல் | உயிர் கவர்தல் ; வருத்துதல் . |
| ஆவிவிடுதல் | சாதல் ; உயிர்விடத் துணிதல் . |
| ஆவரணம் | மறைப்பு ; ஆடை ; சட்டை ; கோட்டை ; தடை ; பிராகாரம் ; அணி ; ஆணவமலம் ; கேடகம் ; ஈட்டி |
| ஆவரணமூர்த்தி | கோயிலில் கருவறையைச் சுற்றி இருக்கும் பக்கத் தேவதைகள் , உட்சுற்று மாளிகைத் தேவதைகள் . |
| ஆவரணி | பார்வதி . |
| ஆவரணீயம் | மறைப்பது . |
| ஆவரி | அம்பு . |
| ஆவரித்தல் | மறைத்தல் . |
| ஆவல் | ஆசை ; வளைவு . |
| ஆவல்லி | சீந்திற்கொடி . |
| ஆவலங்கொட்டுதல் | ஆர்த்து வாய்க்கொட்டுதல் . |
| ஆவலம் | வாயினாலிடும் ஒலி ; கொல்லை ; கூறை ; படைமரம் என்னும் நெசவுக்கருவி . |
| ஆவலர் | உற்றார் ; கணவர் ; காதலர் . |
| ஆவலாதி | குறைகூறுகை ; அவதூறு . |
| ஆவலாதிக்காரன் | போக்கிரி ; குறைகூறுவோன் ; முறையிடுவோன் . |
| ஆவலி | காண்க : ஆவளி . |
| ஆவலித்தல் | அழுதல் ; கொட்டாவிவிடுதல் ; செருக்குதல் . |
| ஆவலிப்பு | செருக்கு . |
| ஆவளி | வரிசை ; மரபுவழி ; உறுதியின்மை ; இரேகை ; வளி என்னும் சிறு காலஅளவு . |
| ஆவளிச்சேவகம் | உறுதியற்ற வேலை . |
| ஆவளித்தல் | ஒழுங்குபடுத்துதல் . |
| ஆவற்காலம் | ஆபத்துண்டாங் காலம் ; இறுதிநாள் . |
| ஆவறியாவறியெனல் | பேராசைக் குறிப்பு . |
| ஆவா | இரக்க வியப்பு ஆனந்தக் குறிப்பு . |
| ஆவாகனம் | அக்கினிக்குப் பலிகொடுத்தல் ; அழைத்தல் ; எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைக்கை . |
| ஆவாகனமுத்திரை | முத்திரை வகை ; வழிபாட்டுக் காலத்தில் கைகளினால் காட்டும் குறிப்பு . |
| ஆவாகித்தல் | எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல் . |
| ஆவாகை | காண்க : நிலவாகை . |
| ஆவாசம் | நகரம் ; மருதநிலத்தூர் . |
| ஆவாதம் | காண்க : ஆகதம் ; கமகம் பத்தனுள் ஒன்று . |
| ஆவாபம் | விதைப்பு ; பாத்தி ; பானவகை ; பாண்டசுத்தி ; வளையல் . |
| ஆவாபனம் | நூல்சுற்றும் பரிவட்டம் ; நெய்பவர் தறி . |
| ஆவாய்கத்துதல் | இல்லையென்று சொல்லித் திரிதல் . |
| ஆவாரம் | மறைப்பு . |
| ஆவாரகம் | மறைப்பு . |
| ஆவாரம்பூச்சம்பா | சம்பாநெல்வகை . |
| ஆவாரைப் பஞ்சகம் | ஆவாரஞ் செடியின் இலை , பூ , வித்து , பட்டை , வேர் என்பன . |
| ஆவாலம் | மரத்தினடியிற் கோலிய பாத்தி ; வௌவால் . |
| ஆவாலை | பாட்டுவகை . |
| ஆவாளஞ்சீவாளம் | காண்க : ஆவச்சீவாளம் . |
| ஆவி | உயிர்ப்பு ; நெட்டுயிர்ப்பு ; கொட்டாவி ; ஆன்மா ; மணம் ; வலிமை ; உயிரெழுத்து ; நீராவி ; பிட்டு ; புகை ; புகையிலை ; நறுமணம் ; பரிசுத்த ஆவி ; நீர்நிலை ; வேளிர் தலைவருள் ஒருவன் . |
| ஆவிகம் | ஆட்டுமயிர்க் கம்பளம் . |
| ஆவிகாட்டுதல் | நிவேதனஞ் செய்தல் . |
| ஆவிகை | பற்றுக்கோடு . |
| ஆவிடை | காண்க : ஆவுடையார் . |
| ஆவிடையார் | காண்க : ஆவுடையார் . |
| ஆவித்தல் | வாய்விடுதல் ; பெருமூச்சு விடுதல் ; கொட்டாவி விடுதல் ; வெளிவிடுதல் . |
| ஆவித்தைலம் | நீராவியால் வடிக்கும் தைலம் . |
| ஆவிதம் | காண்க : மரை ; திருகூசி . |
| ஆவிநீர் | நீராவி குளிர்தலால் உண்டாகும் நீர் . |
| ஆவிபத்தம் | பேராமுட்டிப் பூண்டு . |
| ஆவிபதம் | பேராமுட்டிப் பூண்டு . |
| ஆவிபத்திரம் | புகையிலை . |
| ஆவிபறிதல் | நீராவி எழும்புதல் ; மரித்தல் |
| ஆவிபிடித்தல் | நீராவியால் வேது கொள்ளுதல் . |
| ஆவிமா | மரவகை . |
| ஆவியர் | வேளாவியின் மரபினர் ; வேளாளர் ; வேடர் . |
| ஆவிர்தம் | சுழற்சி . |
| ஆவிர்ப்பவித்தல் | வெளிப்படுதல் . |
| ஆவிர்ப்பாவம் | வெளிப்படுகை . |
| ஆவிர்ப்பூதம் | தோன்றியது ; வெளிப்பட்டது . |
| ஆவிரம் | இடையரூர் ; நரகவகை . |
| ஆவிருத்தி | தடவை ; திரும்பத் திரும்ப ஓதுகை . |
| ஆவரணச்சுவர் | கோயில் திருமதில் . |
| ஆவரணசக்தி | மாயை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆவரணச்சுவர் முதல் - ஆவிவிடுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மறைப்பு, நீராவி, குறிப்பு, பாத்தி, கொட்டாவி, புகையிலை, ஆவுடையார், பூண்டு, பேராமுட்டிப், நீராவியால், விடுதல், தெய்வத்தை, அழைத்தல், வேடர், வேளாளர், நீர், காட்டும், தேவதைகள், என்னும், எழுந்தருளும்படி, ஆணவமலம், ஆவளி, மந்திரத்தால்

