முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஆள்மாறாட்டம் முதல் - ஆற்றிக்கொடுத்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆள்மாறாட்டம் முதல் - ஆற்றிக்கொடுத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆளொட்டி | காவற்கட்டு . |
| ஆளொதுங்கி | காவற்கட்டு . |
| ஆளோட்டி | வேலை வாங்குவோன் . |
| ஆளோடி | வீட்டின் முன்புறத்தில் கட்டப்பட்ட தளவரிசை இட்ட தரை ; தடாகத்தில் ஆள்கள் நடப்பதற்குக் கட்டிய வழி . |
| ஆளோலை | அடிமைப்பத்திரம் . |
| ஆற்கந்திதம் | குதிரை நடைவகை . |
| ஆற்பணம் | விருப்பம் ; உரியதாகக் கொடுத்தல் . |
| ஆற்பதம் | பற்றுக்கோடு . |
| ஆற்பனேபதம் | வடமொழி வினைவகை . |
| ஆற்போடம் | காக்கணம் . |
| ஆற்போதம் | எருக்கு ; விஷ்ணுகிராந்தி ; காட்டு மல்லிகை . |
| ஆற்ற | மிக ; முற்ற . |
| ஆற்றங்கரைத்தேவை | வரிவகை . |
| ஆற்றங்கால் | காண்க : காட்டுப்பூவரசு . |
| ஆற்றடம்பு | அடம்புவகை . |
| ஆற்றமாட்டாமை | முடியாமை ; தாங்க முடியாமை . |
| ஆற்றரசு | காண்க : ஆற்றுப்பூவரசு . |
| ஆற்றல் | சக்தி ; முயற்சி ; மிகுதி ; கடைப்பிடி ; பொறை ; ஆண்மை ; வெற்றி ; வாய்மை ; அறிவு ; இன்னசொல் இன்னபொருள் உணர்த்தும் என்னும் நியதி ; சாகசம் . |
| ஆற்றலரி | காண்க : கோடைச்சவுக்கு ; பூடுவகை ; முதலைப் பூண்டு ; காண்க : சேங்கொட்டை மரம் . |
| ஆற்றறுத்தல் | இடையிற் கைவிடுதல் ; வலியழித்தல் . |
| ஆற்றாச்சண்டி | வறுமையால் விடாது பிச்சை கேட்பவன் . |
| ஆற்றாமை | தாங்கமுடியாமை ; தளர்ச்சி ; மாட்டாமை ; கவலை . |
| ஆற்றான் | வலிமையற்றவன் ; வறிஞன் . |
| ஆற்றிக்கொடுத்தல் | சூட்டைக் குறைத்துக் கொடுத்தல் ; துணையாக உதவுதல் . |
| ஆள்மாறாட்டம் | வேற்றாளாகத் தன்னைக் காட்டி வஞ்சிக்கை . |
| ஆள்வணங்கி | அரசமரம் ; காண்க : தொட்டாற் சுருங்கி ; கல்லித்தி ; மாமரம் ; ஆத்தி . |
| ஆள்வரி | தலைவரி . |
| ஆள்வார் | சுவாமி . |
| ஆள்வாரம் | பண்ணையாளுக்குக் கொடுக்கும் பங்கு . |
| ஆள்வாரி | காண்க : ஆளோடி ; குளத்து மதிலின் உட்புறமாகவுள்ள மக்கள் நடமாடும் வழி . |
| ஆள்வாரிநிலம் | கோட்டை உள்மதிற்புறமாக ஆள்கள் சுற்றிவருதற்குச் செய்த வழி . |
| ஆள்வாரில்லா மாடு | பட்டிமாடு . |
| ஆள்வாரிலி மாடு | பட்டிமாடு . |
| ஆள்விடுதல் | தூதனுப்புதல் . |
| ஆள்வினை | முயற்சி ; மகிழ்ச்சி . |
| ஆள்வினை வேள்வி | விருந்து புறந்தருகை . |
| ஆள்வீதம் | ஒவ்வோர் ஆளுக்குங் கொடுக்கும் அளவு ; ஆள் விழுக்காடு . |
| ஆளகம் | சுரைக்கொடி . |
| ஆளடிமை | அடியான்(ள்) . |
| ஆளத்தி | ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை . |
| ஆளம் | ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை . |
| ஆளமஞ்சி | கூலியின்றி வாங்கும் வேலை . |
| ஆளரவம் | மனித நடமாட்டத்தால் உண்டாகுஞ் சந்தடி . |
| ஆளரி | ஆண் சிங்கம் ; நரசிங்கமூர்த்தி . |
| ஆளல் | ஆளுதல் ; மீன்வகை . |
| ஆளறுதி | தனிமை . |
| ஆளன் | ஆளுபவன் ; கணவன் ; அடிமை ; ஊரில் பரம்பரையாகப் பாகவுரிமை உள்ளவன் . |
| ஆளாதல் | அடிமையாதல் ; பூப்படைதல் ; பெருமையடைதல் . |
| ஆளாபம் | காண்க : ஆலாபனம் . |
| ஆளாழம் | ஒரு முழு மனிதனின் அளவுள்ள ஆழம் . |
| ஆளானம் | யானை கட்டுந் தறி . |
| ஆளி | ஆள்வோன் ; செடிவகை ; கிளிஞ்சில் வகை ; யானையாளி ; சிங்கம் ; கீரைவகை ; சிறுமூட்டை ; வழுக்கல் ; வைப்பகம் ; தூய்மையான கருத்து ; பாங்கி ; பாலம் ; பயனின்மை ; ஒழுங்கு . |
| ஆளிட்டான் காசு | பழைய நாணயவகை . |
| ஆளிடுதல் | பதிலாளை அமர்த்துதல் . |
| ஆளியூர்தி | துர்க்கை . |
| ஆளிவிதை | சிறு சணல்வித்து . |
| ஆளிவிரை | சிறு சணல்வித்து . |
| ஆளுகை | ஆட்சி ; ஆளுதல் . |
| ஆளுங்கணத்தார் | ஊர்ச்சபை அதகாரிகள் . |
| ஆளுங்கணம் | ஊரையாளும் சபை . |
| ஆளுடையதேவர் | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் . |
| ஆளுடைய நம்பி | சுந்தரமூர்த்தி நாயனார் . |
| ஆளுடைய பிள்ளையார் | திருஞானசம்பந்தர் . |
| ஆளுடையவரசு | திருநாவுக்கரசு நாயனார் . |
| ஆளுடையான் | அடிமை கொண்டவன் ; ஆளுதலையுடையான் ; சுவாமி . |
| ஆளெழுத்துச் சேலை | சித்திரம் எழுதிய சேலை வகை . |
| ஆளெனல் | நாயின் கதறல் குறிப்பு . |
| ஆளை | காண்க : அறுகு . |
| ஆளையடிச்சான் | புளியமரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆள்மாறாட்டம் முதல் - ஆற்றிக்கொடுத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஆலாபனம், நாயனார், ஆளுதல், சிங்கம், விரித்துப்பாடுகை, அடிமை, சிறு, ஆளுடைய, சணல்வித்து, ஆள்வினை, சேலை, பட்டிமாடு, கொடுத்தல், ஆள்கள், ஆளோடி, வேலை, முடியாமை, முயற்சி, மாடு, கொடுக்கும், சுவாமி, காவற்கட்டு

