முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஆவினன்குடி முதல் - ஆள்மாகாணம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆவினன்குடி முதல் - ஆள்மாகாணம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆழித்தொட்டான் | ஏனாதி மோதிரம் தரித்த படைத்தலைவன் . |
| ஆழிமால்வரை | சக்கரவாளகிரி . |
| ஆழிமுரசோன் | கடலை முரசாகவுடைய மன்மதன் . |
| ஆழிமூழையாய் | மிக விரைவாய் . |
| ஆழியான் | திருமால் ; அரசன் . |
| ஆழியிழைத்தல் | கூடலிழைத்தல் , வட்டமாக இடப்படும் விரற்குறி . |
| ஆழிவலியான்மணி | மிளகு . |
| ஆழிவித்து | முத்து . |
| ஆழிவிரல் | மோதிரவிரல் . |
| ஆழும்பாழுமாய் | சீர்கேடாய் ; வீணாக . |
| ஆள் | ஆண்மகன் ; திறமையுடையோன் ; வீரன் ; காலாள் ; கணவன் ; தொண்டன் ; ஆட்செய்கை ; வளர்ந்த ஆள் ; ஆள்மட்டம் ; அரசு ; தொட்டால் வாடி ; பெண்பாற் பெயர் விகுதி ; பெண்பால் வினைமுற்று விகுதி . |
| ஆள்காட்டிவேலை | ஏமாற்று வேலை . |
| ஆள்கை | ஆளுதல் . |
| ஆள்திட்டம் | ஓர் ஆளுக்குரிய அளவு ; ஓர் ஆளின் உடலடையாளம் . |
| ஆள்மட்டச்சுவர் | கைப்பிடிச் சுவர் ; மதிற்சுவர் . |
| ஆள்மட்டம் | ஒரு மனிதனின் உயரவளவு . |
| ஆள்மாகாணம் | ஒரு கச்சேரியிலுள்ளார் கூட்டம் ; மக்கட்கட்டு . |
| ஆவினன்குடி | முருகக் கடவுளின் படைவீடுகளுள் ஒன்றான பழனி . |
| ஆவு | காண்க : குன்றி . |
| ஆவுடையார் | சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் . |
| ஆவுடையாள் | சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் . |
| ஆவுதல் | விரும்புதல் . |
| ஆவுதி | ஆகுதி ; ஓமத்தில் இடப்படும் உணவு . |
| ஆவுரிஞ்சி | காண்க : ஆதீண்டுகுற்றி . |
| ஆவுரிஞ்சுதறி | காண்க : ஆதீண்டுகுற்றி . |
| ஆவெனல் | அழுகைக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு ; வாய்திறத்தற் குறிப்பு . |
| ஆவேகி | காண்க : ஆடுதின்னாப்பாளை . |
| ஆவேசசமவாதம் | காண்க : காபாலமதம் . |
| ஆவேசநீர் | வெறியூட்டும் கள் முதலியன . |
| ஆவேசம் | தெய்வமேறுகை ; பேய் ; கோபம் . |
| ஆவேசவாதி | காபாலிக மதத்தான் ; உணர்ச்சி வயப்பட்டு விவாதிப்பவன் . |
| ஆவேசனம் | உலோகவேலை செய்வோர் வீதி ; பணிக்கூடம் ; புகுகை ; ஆவேசிக்கை . |
| ஆவேசாவதாரம் | ஒரு நிமித்தம்பற்றித் தன் ஆற்றலை ஒருவர்பால் ஏறிட்டு நிகழ்த்தும் தெய்வப் பிறப்பு . |
| ஆவேசி | காண்க : ஆவேகி . |
| ஆவேசித்தல் | உட்புகுதல் ; தெய்வமேறுதல் |
| ஆவேதனம் | அறிக்கை . |
| ஆவேலம் | தம்பலம் . |
| ஆவேலி | தொழுவம் . |
| ஆவேறு | காளை , இடபம் . |
| ஆவோ | வியப்பு இரக்கச் சொல் . |
| ஆழ்கடற்றுயின்றோன் | திருமால் . |
| ஆழ்த்துதல் | அமிழ்த்துதல் . |
| ஆழ்தல் | மூழ்குதல் ; அழுந்துதல் ; விழுதல் ; பதிதல் ; சோம்புதல் ; ஆழமாதல் ; வருந்துதல் ; அகழ்தல் . |
| ஆழ்வள்ளி | மரவள்ளி , கிழங்குவகை . |
| ஆழ்வார் | பகவத் குணங்களில் ஆழந்து ஈடுபடுவோர் ; திருமாலடியார் பன்னிருவர் ; சமண பௌத்தப் பெரியோர் ; சுவாமி . |
| ஆழ்வார்கன்மி | திருமால்கோயில் அருச்சகன் . |
| ஆழ்வார்திருநாள் | திருநாள் தொடக்கத்துக்கு முன் நடைபெறும் ஆழவார் திருவிழா . |
| ஆழ்வான் | சூரியன் . |
| ஆழ்வி | தலைவன் ; தலைவி . |
| ஆழ்வு | ஆழம் . |
| ஆழங்கால் | பலகை தாங்கச் சுவரில் பதிக்கும் கட்டை ; அதிக ஆழமில்லாத நீர்நிலை . |
| ஆழங்காற்படுதல் | அழுந்துதல் ; ஈடுபடுதல் . |
| ஆழம் | ஆழந்திருக்கை ; ஆழந்த கருத்து . |
| ஆழம்பார்த்தல் | ஆழத்தை அளந்தறிதல் ; ஒருவன் அறிவு முதலியவற்றைச் சோதித்தல் . |
| ஆழமுடைத்தாதல் | நுண்பொருள் பொதிந்திருத்தல் ; நூலழகுகளுள் ஒன்று . |
| ஆழரம் | அத்தி . |
| ஆழல் | காண்க : கறையான் . |
| ஆழாக்கு | அரைக்காற்படி . |
| ஆழாங்கு | காண்க : ஆழங்கால் . |
| ஆழாடக்கிடங்கு | தண்ணீர்விட்டான் கிழங்கு . |
| ஆழாத்தல் | ஈடுபடுதல் . |
| ஆழாரம் | பழைய காலத்து வழங்கிய ஒருவகை வட்டமான புதைகுழி . |
| ஆழி | சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கட்டளை ; வட்டம் ; மோதிரம் ; சக்கரம் ; குயவன் திகிரி ; யானைக் கைந்நுனி ; கடல் ; கடற்கரை ; காண்க : ஆளி ; குன்றி ; கணவனைப் பிரிந்த மகளிர் இழைக்கும் கூடற்சுழி . |
| ஆழிக்கொடி | பவளம் . |
| ஆழிக்கடல்விழுது | கடலின் பேராழத்தை அறிய உதவும் கயிறு . |
| ஆழித்தல் | ஆழமாய்த் தோண்டுதல் . |
| ஆழித்தீ | வடவையனல் . |
| ஆழித்தேர் | சக்கரப்படை வடிவான திருவாரூர்த் தேர் . |
| ஆழிதிருத்துதல் | கூடலிழைத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 92 | 93 | 94 | 95 | 96 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆவினன்குடி முதல் - ஆள்மாகாணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, குறிப்பு, ஆதீண்டுகுற்றி, பீடம், ஆவேகி, அழுந்துதல், சக்கரப்படை, ஈடுபடுதல், ஆழங்கால், ஆழம், இலிங்க, குறிக்கும், கூடலிழைத்தல், திருமால், மோதிரம், இடப்படும், ஆள்மட்டம், சத்தியைக், குன்றி, விகுதி, சொல்

