முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » யுத்தாயுத்தம் முதல் - யோகவான் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - யுத்தாயுத்தம் முதல் - யோகவான் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
யுத்தாயுத்தம் | தக்கதும் தகாததும் . |
யுத்தி | காண்க : யுக்தி . |
யுவ | அறுபதாண்டுக் கணக்கில் ஒன்பதாம் ஆண்டு . |
யுவதி | பதினாறு வயதுடைய பெண் ; இளம் பெண் . |
யுவராசன் | இளவரசன் . |
யுவன் | இளைஞன் . |
யூ | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஊ) . |
யூகசாலி | புத்திக்கூர்மையுள்ளவன் . |
யூகம் | எதிர்பார்ப்பு ; அறிவுக்கூர்மை ; கருத்து ; காந்தி ; வாதம் ; படையின் முன்னணிவகுப்பு ; படை ; உடற்குறை ; கோட்டான் ; கருங்குரங்கு ; பெண்குரங்கு ; பேன் . |
யூகவான் | காண்க : யூகசாலி . |
யூகி | காண்க : யூகசாலி . |
யூகித்தல் | எதிர்பார்த்தல் ; அனுமானித்தல் ; ஆராய்தல் . |
யூகை | கல்வி ; அறிவாளி ; மூலத்திலிருந்து உரைகாரர் அனுமானிக்குங் கருத்து ; அறிவுக்கூர்மை ; பேன் . |
யூதநாதன் | காண்க : யூதபம் . |
யூதநாயகன் | படைத்தலைவன் . |
யூதபதி | காண்க : யூதபம் . |
யூதபம் | யானைக்கூட்டத்துக்குத் தலைமை யானை . |
யூதம் | யானைக்கூட்டம் ; பெரும்படை . |
யூதிகை | முல்லை . |
யூபத்தம்பம் | வேள்வித்தூண் . |
யூபம் | காண்க : யூபத்தம்பம் ; வேள்வி ; படையின் அணிவகுப்பு ; உடற்குறை . |
யோ | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஓ) . |
யோக்கியத்துக்குக்கொடுத்தல் | ஒருவனது தகுதியின்மேல் ஆதாரமின்றிக் கடன்கொடுத்தல் . |
யோக்கியதாபட்சம் | தகுதிபற்றிய மதிப்பு . |
யோக்கியதாபத்திரம் | கல்வித்தேர்ச்சியைக் குறிக்கும் நற்சான்றிதழ் ; நல்லொழுக்கத்தைக் குறிக்கும் பத்திரம் . |
யோக்கியதை | தகுதி ; நேர்மை ; தொடரில் சொற்கள் பொருள்பொருத்த முற்றிருக்கை ; ஆற்றல் ; கல்வி , ஒழுக்கம் முதலியவற்றால் வருஞ் சிறப்பு ; பயன்படுத்தற்கேற்ற தன்மை . |
யோக்கியம் | தகுதி ; நேர்மை ; நன்மையானது ; ஒழுங்கானது ; தூய்மை . |
யோக்கியன் | தகுந்தவன் ; குணவான் ; பயன்படுபவன் . |
யோகக்காட்சி | யோகத்தாற் காணுமறிவு . |
யோகக்காரன் | நல்வினையாளன் . |
யோகசத்தி | நவச்சாரம் . |
யோகசம்பந்தம் | கூட்டம் , புணர்ச்சி . |
யோகசமாதி | ஆன்மா உடலையும் மனத்தையும் விட்டு நீங்கிநிற்கும் யோகநிலை . |
யோகசரன் | அனுமான் . |
யோகசாதனம் | யோகப்பயிற்சி . |
யோகசாதனை | யோகப்பயிற்சி . |
யோகசித்தி | யோகஞ் செய்ததனால் பெற்ற பேறு . |
யோகதண்டம் | யோகியின் கையிலுள்ள கோல் . |
யோகதீட்சை | யோகநெறியால் குரு சீடனது உடலுட்புகுந்து அவனது ஆன்மாவை ஈர்த்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை ; தீட்சை ஏழனுள் நிராதாரயோகத்தைப் பயிற்றுவிக்கை . |
யோகநித்திரை | உறங்குவது போன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் யோகநிலை . |
யோகநிலை | யோகமுறையில் தியானத்தில் அமர்ந்திருக்கை . |
யோகபரன் | யோகசிந்தையுடையவன் . |
யோகபாதம் | கடவுளை அகத்தான் வழிபடும் நெறி ; யோகத்தைப்பற்றிக் கூறும் சிவாகமத்தின் இரண்டாம் பகுதி . |
யோகம் | சேர்க்கை ; புணர்ச்சி ; கூட்டல் ; நற்பேறு ; உயர்ச்சி ; ஊக்கம் ; தகுதி ; காரணப்பெயர் ; சூத்திரம் ; வழி ; மருந்து ; ஏமாற்று ; அரைப்பட்டிகை ; நற்சுழி ; காண்க : யோகு ; உணர்ச்சி ; கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய நெறி ; எண்வகைப்பட்ட யோகாப்பியாச அங்கங்கள் ; ஆறுவகை யோகங்கள் ; ஒவ்வொரு சிவாகமத்திலும் யோகத்தைப்பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி . |
யோகமார்க்கம் | யோகமுறை . |
யோகர் | யோகியர் ; முனிவர் ; சமணமுனிவர் . |
யோகரூடி | காரண இடுகுறி . |
யோகவான் | நற்பேறுபெற்றவன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 924 | 925 | 926 | 927 | 928 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தாயுத்தம் முதல் - யோகவான் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, யூதபம், யோகநிலை, யூகசாலி, தகுதி, புணர்ச்சி, யோகப்பயிற்சி, அகத்தான், இரண்டாம், பகுதி, யோகத்தைப்பற்றிக், நெறி, நேர்மை, கடவுளை, யூபத்தம்பம், அறிவுக்கூர்மை, உயிர்மெய்யெழுத்து, பெண், கருத்து, படையின், கல்வி, பேன், உடற்குறை, குறிக்கும்