தமிழ் - தமிழ் அகரமுதலி - யாப்பு முதல் - யானைக்கச்சை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| யாப்பு | கட்டுகை ; கட்டு ; செய்யுள் ; யாழ்ப்பத்தரிற் குறுக்கே வலிவுறச் செய்யுங் கட்டு ; சிறப்புப்பாயிர இலக்கணம் பதினொன்றனுள் இன்ன நூல் கேட்டபின் இன்னது கேட்கத் தக்கதென்னும் தொடர்பு ; அன்பு ; உறுதி ; சூழ்ச்சி ; பொருத்தம் ; பாம்பு . |
| யாப்புறவு | தள்ளத்தகாத நியதி ; தகுதி . |
| யாப்புறுத்தல் | வலியுறுத்தல் . |
| யாப்புறுதல் | பொருள் நிரம்பியிருத்தல் ; ஏற்புடையதாதல் ; ஈட்டுதல் . |
| யாபனம் | பொழுதுபோக்குதல் ; இகழுதல் ; தாமதிக்கை . |
| யாபித்தல் | பொழுதுபோக்குதல் ; நுகர்தல் ; கவர்தல் . |
| யாம் | தன்மைப் பன்மைப் பெயர் . |
| யாமக்கோட்டம் | அந்தப்புரம் . |
| யாமகோடம் | சேவல் ; நாழிகைவட்டில் . |
| யாமங்கொள்பவர் | ஊர்காவலர் ; நாழிகைக் கணக்கர் . |
| யாமசரிதன் | இரவில் திரிபவனான அரக்கன் . |
| யாமபதி | சந்திரன் . |
| யாமபேரி | இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை . |
| யாமம் | நள்ளிரவு ; சாமம் ; இரவு ; இடக்கை மேளம் ; மாலைப்பொழுதின் பின் பத்து நாழிகை ; அகலம் ; தெற்கு . |
| யாமயாழ் | நள்ளிரவில் மீட்டும் யாழ் . |
| யாமவதி | இரவு . |
| யாமளபுராதனர் | காளியின் படைவீரர் . |
| யாமளம் | காளியைத் தெய்வமாகக் கொண்ட ஒரு வேதம் ; இரட்டை ; பச்சை ; இளமை . |
| யாமளை | பார்வதி ; காளி . |
| யாமி | இராத்திரி ; யமன்தேவி ; கற்புடையாள் ; உடன்பிறந்தாள் ; தெற்கு ; மகள் ; மருமகள் . |
| யாமிகன் | இரவில் நகரைக் காக்கும் காவற்காரன் . |
| யாமியம் | தெற்கு ; சந்தனம் ; தவம் . |
| யாமினி | மூன்று யாமங்களையுடைய இரவு . |
| யாமுனம் | அஞ்சனக்கல் . |
| யாமை | ஆமை ; இரவு ; காண்க : யாழ்பதங்காளி ; தெற்கு . |
| யாமைமணை | ஆமையின் வடிவமைந்த ஓர் இருக்கை . |
| யாய் | தாய் . |
| யார் | யாவர் ; காண்க : நத்தைச்சூரி . |
| யாரள் | காண்க : யாவள் . |
| யாரி | கதவு ; கள்ளக்கணவன் ; எதிரி . |
| யாரும் | எவரும் . |
| யாலம் | ஆச்சாமரம் ; இரவு . |
| யாவகம் | செம்பஞ்சு ; காண்க : பெரும்பயறு . |
| யாவண் | எவ்விடம் . |
| யாவது | எது ; எவ்விதம் . |
| யாவதும் | சிறிதும் ; காண்க : யாவும் . |
| யாவர் | எவர் . |
| யாவரும் | எல்லோரும் . |
| யாவள் | எவள் . |
| யாவன் | எவன் . |
| யாவும் | எல்லாம் . |
| யாவை | எவை . |
| யாழ் | பேரியாழ் , சகோடயாழ் , மகரயாழ் , செங்கோட்டியாழ் என்னும் நால்வகை நரம்புக் கருவி ; மிதுனராசி ; அசுவினிநாள் ; திருவாதிரை நாள் ; பண் ; ஆந்தை . |
| யாழ்க்கரணம் | யாழ்மீட்டற்குரிய செய்கை . |
| யாழ்செய்தல் | பாடுதல் . |
| யாழ்த்திறம் | பண் ; ஐந்து சுரமுள்ள இசை . |
| யாழ்தரித்தாள் | பார்வதிதேவி . |
| யாழ்ப்பாணர் | யாழ்மீட்டும் பாணர் வகையினர் ; யாழ்ப்பாண நாட்டார் . |
| யாழ்பதங்காளி | செவ்வழி யாழ்த்திறத்துள் ஒன்று . |
| யாழ்முனிவர் | நாரதர் . |
| யாழ்வல்லோர் | காண்க : யாழோர் . |
| யாழ | ஒரு முன்னிலை யசைச்சொல் . |
| யாழல் | கறையான் . |
| யாழோர் | கந்தருவர் . |
| யாழோர்கூட்டம் | எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் . |
| யாழோர்மணவினை | எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் . |
| யாளி | யானையின் துதிக்கையும் சிங்கத்தின் முகமுமுடைய விலங்கு ; அரிமா ; சிம்மராசி ; யானை ; இறைகூடைவகை . |
| யாளியூர்தி | யாளியை ஊர்தியாக உடைய காளி . |
| யாற்றுநீர் | அடிதொறும் ஆற்றுநீர் ஒழுக்குப் போல நெறிப்பட்டு அற்றுஅற்று ஒழுகுவதான எண்வகைப் பொருள்கோளுள் ஒன்று . |
| யாறு | ஆறு . |
| யான் | தன்மை யொருமைப் பெயர் . |
| யான்மை | அகங்காரம் . |
| யானஞ்செய்தல் | செல்லுதல் . |
| யானம் | ஊர்தி ; சிவிகை ; மரக்கலம் ; போர்ச்செலவு ; அறைவீடு ; கள் . |
| யானெனதெனல் | தன்முனைப்பும் பற்றுடைமையும் வெளிப்படப் பேசுதல் . |
| யானை | துதிக்கையுடைய விலங்குவகை ; ஆனை மரம் . |
| யானைக்கச்சை | யானையின் கழுத்திலிடும் கயிறு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 922 | 923 | 924 | 925 | 926 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யாப்பு முதல் - யானைக்கச்சை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இரவு, தெற்கு, இரவில், மணத்துள், எண்வகை, யாழோர், யானை, ஒன்றான, யானையின், ஒன்று, கந்தருவமணம், யாவர், யாழ், பெயர், பொழுதுபோக்குதல், காளி, யாழ்பதங்காளி, யாவள், கட்டு, யாவும்

