தமிழ் - தமிழ் அகரமுதலி - யானைக்கண் முதல் - யுத்தமுகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| யானைக்கண் | சிறுகண் ; இலை , காய் முதலியவற்றில் விழும் புள்ளி . |
| யானைக்கதி | நடனம் , துரிதம் , மந்தரம் , ஓட்டம் என்னும் நான்கு வகைப்பட்ட யானை நடை . |
| யானைக்கவடு | யானைபோல் மனத்துள் மறைத்துவைத்திருக்கும் பகைமை . |
| யானைக்கன்று | யானைக்குட்டி . |
| யானைக்கால் | ஒரு நோய்வகை . |
| யானைக்குப்பு | சதுரங்கம் . |
| யானைக்குருகு | சக்கரவாகப்புள் . |
| யானைக்கை | தும்பிக்கை ; கைவீக்கங் காணும் நோய்வகை . |
| யானைகைக்கோள் | பகைவரை எறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை . |
| யானைச்சாலை | காண்க : யானைத்தொழு . |
| யானைத்தண்டம் | யானை செல்லும் வழி . |
| யானைத்தந்தம் | யானைக்கொம்பு ; யானையின் எலும்பு . |
| யானைத்தலைவன் | யானைக் கூட்டத்துள் தலைமைதாங்கும் யானை . |
| யானைத்தறி | காண்க : யானைத்தூண் . |
| யானைத்திசை | வடக்கு . |
| யானைத்திப்பிலி | ஒரு திப்பிலிவகை . |
| யானைத்தீ | தணியாப் பசியைத்தரும் நோய் . |
| யானைத்தூண் | யானைகட்டும் கம்பம் . |
| யானைத்தொழு | யானைகள் கட்டுமிடம் . |
| யானைநெருஞ்சி | பெருநெருஞ்சி . |
| யானைப்பட்டம் | யானையின் முகவோடை . |
| யானைப்படுகுழி | யானையை அகப்படுத்துங்குழி . |
| யானைப்பல் | யானையின் கொம்பு . |
| யானைப்பாகன் | யானையை நடத்துவோன் . |
| யானைப்போர் | யானைகள் ஒன்றோடொன்று செய்யும் போர் . |
| யானைபாய்ச்சுதல் | யானையை மதம்படுமாறு செய்தல் . |
| யானைமதம் | யானையினின்று பாய்வதாகக் கருதப்படும் மதநீர் . |
| யானைமறம் | அரசனது யானையின் போர் வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை . |
| யானைமால் | காண்க : யானைத்தொழு . |
| யானைமுகவற்கிளையோன் | முருகன் ; வீரபத்திரக் கடவுள் . |
| யானைமுகவன் | விநாயகன் . |
| யானையடி | சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் நெறி ; நேர்வழி ; பெரிய வட்டமாயுள்ளது ; செடிவகை . |
| யானையுண்குருகு | ஆனையிறாஞ்சிப்புள் ; காண்க : யானைக்குருகு . |
| யானையுரித்தோன் | யானையின் தோலை உரித்தவனாகிய சிவபிரான் . |
| யானையேற்றம் | யானைமீதேறி அதனையடக்கி நடத்தும் வித்தை . |
| யானைவணங்கி | காண்க : தேட்கொடுக்கி ; யானைநெருஞ்சி . |
| யானைவாரி | காண்க : யானைத்தொழு ; யானை பிடிக்குமிடம் . |
| யானைவீரர் | எண்பெருந் துணைவருள் யானைமேலிருந்து போர்புரியும் வீரர் . |
| யானைவென்றி | ஒரு யானை பிறிதொன்றோடு பொருது வெற்றிபெறுதலைக் கூறும் புறத்துறை . |
| யானைவேட்டுவன் | யானைவேட்டையாடுவோன் . |
| யு | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+உ) . |
| யுக்தி | கூரிய அறிவு ; பொருத்தம் ; அனுமானம் ; நியாயம் ; சூழ்ச்சி ; ஆராய்வு ; வழிவகை ; அறிவுக்கூர்மை ; புத்திமதி . |
| யுகதருமம் | யுகபேதத்தினா லுண்டாகும் நடைமுறை . |
| யுகந்தரம் | ஏர்க்கால் ; ஒரு நாடு . |
| யுகப்பிரளயம் | நான்கு யுகத்தின் முடிவில் நிகழும் அழிவு . |
| யுகம் | கிருதயுகம் , திரேதாயுகம் , துவாபரயுகம் , கலியுகம் என்று நால்வகைப்பட்ட யுகங்கள் ; இரட்டை ; நுகத்தடி ; நாலுமுழங்கொண்ட அளவு ; பூமி . |
| யுகளம் | இரட்டை . |
| யுகளி | இரட்டை . |
| யுகாதி | அருகன் ; கடவுள் ; தெலுங்கர் , கன்னடர் முதலியோரின் ஆண்டுப்பிறப்பு ; யுகத்தின் தொடக்கம் . |
| யுகாந்தம் | யுகமுடிவு ; உலக முடிவுகாலம் . |
| யுஞ்சானம் | உடற்பயிற்சி செய்வோன் . |
| யுத்தகளம் | போர்க்களம் . |
| யுத்தசன்னத்தன் | போருக்கு ஆயத்தமானவன் . |
| யுத்தம் | போர் ; பொருத்தமானது ; நான்குமுழங்கொண்டது . |
| யுத்தமுகம் | போர்முனை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 923 | 924 | 925 | 926 | 927 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யானைக்கண் முதல் - யுத்தமுகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, யானை, யானையின், யானைத்தொழு, யானையை, போர், புறத்துறை, இரட்டை, கூறும், கடவுள், யுகத்தின், யானைநெருஞ்சி, செல்லும், நோய்வகை, யானைக்குருகு, நான்கு, யானைத்தூண், யானைகள்

