முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » யவனப்பிரியம் முதல் - யாப்பியம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - யவனப்பிரியம் முதல் - யாப்பியம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| யவனப்பிரியம் | மிளகு . |
| யவனப்பேழை | யவனநாட்டு வேலைப்பாடமைந்த பெட்டி . |
| யவனம் | ஒரு நாடு ; விரைவு ; வரிப்பணம் . |
| யவனர் | யவனநாட்டார் ; கண்ணாளர் ; சித்திரகாரர் ; தோற்கருவி வாசிப்பவர் . |
| யவனாள் | யுவதி . |
| யவனிகை | இடுதிரை . |
| யவாகு | கஞ்சி . |
| யவை | வாற்கோதுமை ; நீட்டலளவை ; துவரை ; நெல்வகை . |
| யா | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஆ) ; யாவை ; ஓர் அசைச்சொல் ; ஒரு மரவகை ; அகலம் . |
| யாக்கை | கட்டுகை ; உடம்பு . |
| யாக்கைக்குற்றம் | கொட்டாவி , நெட்டை , குறுகுறுப்பு , கூன் கிடை , நட்டுவிழல் என்பனவாகிய மெய்க்குற்றம் ; யாக்கைக்குரிய பசி , நீர் வேட்கை முதலிய பதினெட்டு வகைக் குற்றங்கள் . |
| யாக்கைக்குறுகுற்றம் | கொட்டாவி , நெட்டை , குறுகுறுப்பு , கூன் கிடை , நட்டுவிழல் என்பனவாகிய மெய்க்குற்றம் ; யாக்கைக்குரிய பசி , நீர் வேட்கை முதலிய பதினெட்டு வகைக் குற்றங்கள் . |
| யாககுண்டம் | வேள்விக்குழி . |
| யாகசாலை | வேள்விச்சாலை ; கோயிலுள் வேள்விசெய்யும் மண்டபம் . |
| யாகத்திரவியம் | வேள்விப்பொருள் . |
| யாகநிலை | வேள்விச்சாலை . |
| யாகப்பிறையான் | தக்கனது வேள்வித்தீயில் தோன்றிய சந்திரன் . |
| யாகபத்தினி | வேள்விசெய்பவன் மனைவி ; திரௌபதி . |
| யாகபதி | வேள்விசெய்யும் தலைவன் ; இந்திரன் . |
| யாகபன்னி | யாகபதியின் மனைவி . |
| யாகபேரம் | கோயிலுள் வேள்விச்சாலைக்குரிய மூர்த்தி . |
| யாகபோசனர் | வானோர் . |
| யாகம் | வேள்வி ; பதினெண்வகை வேள்வி . |
| யாகமண்டபம் | காண்க : யாகசாலை . |
| யாகவிபாகம் | வேள்வியிற் கிடைக்கும் அவிர்ப்பாகம் . |
| யாங்கண் | காண்க : யாண்டை . |
| யாங்கணும் | எங்கும் . |
| யாங்கர் | அரக்கர் . |
| யாங்கனம் | எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் . |
| யாங்கு | எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் . |
| யாங்ஙனம் | எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் . |
| யாசகம் | இரப்பு ; மதயானை ; பட்டத்தியானை . |
| யாசகன் | இரவலன் ; வேள்வி இயற்றுபவன் . |
| யாசித்தல் | இரத்தல் . |
| யாசிதம் | இரப்புத்தொழில் , வட்டி அல்லது வாடகையின்றித் திருப்பிக்கொடுப்பதாகப் பெற்ற பொருள் . |
| யாடம் | காண்க : சிறுகாஞ்சொறி . |
| யாடு | ஆடு . |
| யாண்டு | எங்கு ; எப்பொழுது ; ஆண்டு . |
| யாண்டும் | எப்போதும் ; எவ்விடத்தும் . |
| யாண்டை | எவ்விடம் . |
| யாணர் | புதிதுபடல் ; புதிய வருவாய் ; வளமை ; செல்வம் ; நன்மை ; முறைமை ; அழகு ; தச்சர் . |
| யாணன் | அழகுள்ளவன் . |
| யாணு | அழகு . |
| யாத்தல் | செய்யுளமைத்தல் ; கட்டுதல் ; பிணித்தல் ; நீர் முதலியன அணைத்தல் ; விட்டு நீங்காதிருத்தல் ; சொல்லுதல் . |
| யாத்தார் | உற்ற நண்பர் . |
| யாத்திரிகர்விடுதி | பயணஞ்செய்வோர் தங்குமிடம் . |
| யாத்திரிகன் | புண்ணிய இடங்கட்குப் பயணம் செய்வோன் . |
| யாத்திரை | பயணம் ; படையெழுச்சி ; காலட்சேபம் ; வழக்கம் ; திருவிழா ; கூத்து . |
| யாத்து | தைப்பு . |
| யாதபதி | கடல் ; வருணன் . |
| யாதம் | யானைத்தோட்டி ; காண்க : யாதவம் . |
| யாதவம் | மாட்டுமந்தை . |
| யாதவர் | யதுகுலத்தவர் ; இடையர் . |
| யாதவன் | கண்ணபிரான் ; இடையன் . |
| யாதவி | குந்தி ; உமை ; யதுகுலத்தவள் . |
| யாதனம் | தெப்பம் ; மரக்கலம் ; வேதனை ; துயரம் . |
| யாதனாசரீரம் | நரகம் நுகர்தற்குரிய உடம்பு . |
| யாதனை | வேதனை ; நரகவேதனை ; துன்பம் . |
| யாதிகன் | வழிச்செல்வோன் . |
| யாது | எது ; இராக்கதன் ; பிசாசு ; கள் ; நினைவு . |
| யாதுதானன் | இராக்கதன் . |
| யாதும் | எதுவும் . |
| யாப்பண்டம் | கருவுற்றவள் விரும்பும் தின்பண்டம் . |
| யாப்பதிகாரம் | செய்யுளிலக்கணங் கூறும் நூற்பகுதி . |
| யாப்பறை | கற்பில்லாதவள் . |
| யாப்பியம் | பொழுதுபோக்கு ; காலவரையறையுள்ளது ; புல்லியது ; நோய்வகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 921 | 922 | 923 | 924 | 925 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யவனப்பிரியம் முதல் - யாப்பியம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், எங்கு, எவ்விடம், காண்க, எவ்வாறு, வேள்வி, நீர், எப்படி, இராக்கதன், மனைவி, வேள்விசெய்யும், கோயிலுள், வேதனை, யாண்டை, வேள்விச்சாலை, பயணம், யாதவம், அழகு, யாகசாலை, கிடை, நட்டுவிழல், கூன், குறுகுறுப்பு, கொட்டாவி, நெட்டை, என்பனவாகிய, மெய்க்குற்றம், வகைக், குற்றங்கள், பதினெட்டு, முதலிய, யாக்கைக்குரிய, வேட்கை, உடம்பு

