தமிழ் - தமிழ் அகரமுதலி - மோட்டன் முதல் - மௌசு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மோட்டன் | மூர்க்கன் . |
| மோட்டுமீன் | விண்மீன் . |
| மோட்டுவலயம் | மாலைவகை . |
| மோட்டோடு | வீட்டு முகட்டிலிடும் வளைவோடு . |
| மோட்டோலை | கூரைமோடு வேயும் ஓலை . |
| மோடம் | மப்புமந்தாரம் ; மூடத்தனம் . |
| மோடன் | வளர்ந்தவன் ; மூடன் . |
| மோடனம் | காற்று ; அரைக்கை ; அவமானம் ; மாயவித்தை ; மூடத்தனம் . |
| மோடி | துர்க்கை ; செருக்கு ; விதம் ; பகட்டு ; பெருமிதம் ; வேடிக்கைக் காட்சி ; பிணக்கு ; வஞ்சகம் ; மொத்தம் ; கண்டதிப்பிலி ; திப்பிலி மூலம் ; மகுடி ; ஓர் ஊதுகுழல்வகை . |
| மோடிக்காரன் | பிணக்கங்காட்டுவோன் ; அலங்காரப்பிரியன் ; வஞ்சகன் . |
| மோடிடுதல் | ஆறு முதலியவற்றில் மணலால் மேடு உண்டாதல் ; சோரத்தில் கருப்பமாதல் . |
| மோடு | மேடு ; உயர்ச்சி ; முகடு ; கூரையின் உச்சி ; பருமை ; பெருமை ; உயர்நிலை ; வயிறு ; கருப்பை ; பிளப்பு ; உடம்பு ; மடமை . |
| மோடுபருத்தல் | பிடரியிற் சதை திரண்டிருத்தல் . |
| மோணம் | பழத்தின் வற்றல் ; பாம்புப்பெட்டி . |
| மோத்தல் | மூக்கால் நுகர்தல் ; மொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் . |
| மோத்தை | ஆட்டுக்கடா ; வெள்ளாட்டுக்கடா ; முற்றாத தேங்காய் ; மடல்விரியாத பூ ; மேடராசி . |
| மோதகப்பிரியன் | விநாயகன் . |
| மோதகம் | அப்பவருக்கம் ; கொழுக்கட்டை ; பிட்டு ; தோசை ; மகிழ்ச்சி ; இணக்கம் . |
| மோதகமரம் | பீநாறிமரம் . |
| மோதம் | மகிழ்ச்சி ; களிப்பு ; மணம் ; ஓமம் . |
| மோதயந்தி | மல்லிகைவகை . |
| மோதரம் | காண்க : மோதிரம் . |
| மோதலை | கைமாற்றுக்கடன் ; முன்றானை ; போர்முனை . |
| மோதவம் | மணம் . |
| மோதிரம் | கணையாழி , விரலணி . |
| மோதிரமாற்றுதல் | திருமணத்தில் மணமக்கள் கணையாழியை மாற்றிக்கொள்ளுதல் . |
| மோதிரவிரல் | சுண்டுவிரலுக்கு அடுத்த விரல் . |
| மோது | தாக்கு ; வைக்கோற்கட்டு ; எண்ணெய் வடிக்கும்பொருட்டுச் சேர்த்துக் காய்ச்சும் நீர் . |
| மோதுதல் | புடைத்தல் , தாக்குதல் ; அப்புதல் . |
| மோதை | வசம்பு . |
| மோந்தை | தோற்கருவிவகை . |
| மோப்பம் | மணம் ; மூக்கு . |
| மோப்பம்பிடித்தல் | காமவிச்சையுடன் ஒருத்தியைத் தொடர்தல் ; நாற்றத்தால் ஒன்றை அறிதல் . |
| மோப்பி | கைம்பெண் ; காண்க : மோப்பம் . |
| மோப்பு | காதல் . |
| மோம்பழம் | மணமுள்ள கனி . |
| மோய் | அம்மோய் ' என்பதன் முதற்குறை ; தாய் . |
| மோர் | நீர்விட்டுக் கடைந்த தயிர் ; முத்திரை . |
| மோரடகம் | கரும்புவேர் ; வீழிப்பூடு . |
| மோரடம் | கரும்புவேர் ; வீழிப்பூடு . |
| மோரை | முகம் ; முகவாய்க்கட்டை . |
| மோரைக்கயிறு | மாட்டின் வாயைச்சுற்றிக் கட்டுங் கயிறு . |
| மோலி | மயிர்முடி ; சடைமுடி ; மணிமுடி . |
| மோவம் | ஆன்மாவிற்கு மயக்கத்தைச் செய்யும் குற்றம் . |
| மோவாய் | காண்க : மோவாய்க்கட்டை ; தாடி . |
| மோவாய்க்கட்டை | வாய்க்குக் கீழுள்ள இடம் . |
| மோழல் | காண்க : மோழைமுகம் . |
| மோழலம்பன்றி | ஆண்பன்றி . |
| மோழி | குழம்புவகை ; மேழி . |
| மோழை | கொம்பில்லாத விலங்கு ; மொட்டை ; மரத்தின் அடிமுண்டம் ; மடமை ; வெடிப்பு ; கீழாறு ; குமிழி ; மடு ; கஞ்சி . |
| மோழைமுகம் | பன்றி . |
| மோழைமை | மடமை ; இகழ்மொழி . |
| மோழைவழி | நுழைவழி . |
| மோறாத்தல் | சோம்பியிருத்தல் ; அங்காத்தல் . |
| மோறை | மோவாய் ; முகம் ; முருட்டுத்தனம் . |
| மோறைக்கட்டை | முகம் . |
| மோனம் | அமைதி ; பேசாதிருத்தல் . |
| மோனமுத்திரை | மௌனநிலையைக் காட்டும் முத்திரைவகை . |
| மோனர் | பேசாநோன்பு மேற்கொண்ட துறவியர் . |
| மோனி | பேசாநோன்பு பூண்டவன் . |
| மோனீகம் | பெருச்சாளி . |
| மோனை | முதன்மை ; மகன் ; சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்குந் தொடை . |
| மௌ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ம் +ஔ) . |
| மௌகலி | காகம் . |
| மௌகுலி | காகம் . |
| மௌசலம் | தண்டாயுதத்தால் செய்யும் போர் . |
| மௌசு | மிகுவிருப்பம் ; கவர்ச்சி ; பகட்டு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 919 | 920 | 921 | 922 | 923 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மோட்டன் முதல் - மௌசு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மணம், முகம், மடமை, செய்யும், மோவாய், மோவாய்க்கட்டை, மோழைமுகம், காகம், பேசாநோன்பு, மோப்பம், மேடு, பகட்டு, மகிழ்ச்சி, மோதிரம், கரும்புவேர், மூடத்தனம், வீழிப்பூடு

