முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மொட்டைமாடு முதல் - மொழிபிறழ்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மொட்டைமாடு முதல் - மொழிபிறழ்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மொட்டைமாடு | கொம்பில்லாத மாடு . |
| மொட்டையடித்தல் | தலைமுழுதும் மழித்தல் ; முழுதும் கொள்ளையடித்தல் . |
| மொட்டையன் | மொட்டைத்தலையன் ; முழுதும் இழந்தவன் . |
| மொட்டைவசனம் | முடிவில்லா வாக்கியம் ; மெய்ப்பிக்கப்படாத செய்தி . |
| மொட்டைவண்டி | மேற்கூடில்லாத வண்டி . |
| மொடமொடெனல் | காண்க : மொடுமொடெனல் . |
| மொடு | பருமை ; மிகுதி ; விலை முதலியவற்றின் நயம் . |
| மொடுக்குமொடுக்கெனல் | ஒலிக்குறிப்புவகை . |
| மொடுமொடெனல் | உலர்ந்த தோல் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு ; வயிறு இரைதற்குறிப்பு ; விரைதற்குறிப்பு . |
| மொண்டணி | மரக்கணு . |
| மொண்டல் | மொள்ளுகை . |
| மொண்டி | நொண்டி ; சாமைவகை ; முரண்டுசெய்வோன் ; தொந்தரவு செய்பவன் . |
| மொண்டு | முரண்டு ; தொந்தரவு . |
| மொண்ணன் | வழுக்கைத்தலையன் . |
| மொண்ணை | வழுக்கை ; கூர்மையின்மை . |
| மொத்தம் | கூட்டுத்தொகை ; முழுமை ; பொது ; பருமை . |
| மொத்தளம் | கூட்டம் ; கூட்டுத்தொகை . |
| மொத்தி | புடைப்பு ; புத்தியில்லாதவன் . |
| மொத்தினி | நுரை . |
| மொத்து | அடி ; மூடமானவர் ; மூடமானது ; சுறுசுறுப்பில்லாதவர் ; சுறுசுறுப்பில்லாதது . |
| மொத்துதல் | அடித்தல் ; வீங்குதல் . |
| மொத்தை | உருண்டை ; பருமன் ; மூடப்பெண் . |
| மொதுமொதெனல் | விழுங்கல் அல்லது உறிஞ்சல் ஒலிக்குறிப்பு ; திரளுதற்குறிப்பு ; கொழுத்து வளர்தற்குறிப்பு . |
| மொந்தணி | மரக்கணு ; பருமை ; உருண்டை . |
| மொந்தணியன் | பருத்தது ; உருண்டையானது . |
| மொந்தன் | ஒரு வாழைவகை . |
| மொந்தை | சிறு மட்பாண்டவகை ; சிறு மரப்பாண்டவகை ; சிறு பாண்டவகை ; ஒருகட்பறைவகை ; பருத்தது . |
| மொந்தையுரு | நெட்டுரு . |
| மொப்படித்தல் | வெடிநாற்றம் வீசுதல் . |
| மொப்பு | வெடிநாற்றம் ; குட்டி பாலைக் குடியாதபடி ஆட்டின் மடியில் சுற்றிவைக்குந் துணி . |
| மொய் | நெருக்கம் ; கூட்டம் ; இறுகுகை ; பெருமை ; வலிமை ; போர் ; போர்க்களம் ; பகை ; யானை ; வண்டு ; தாய் ; காண்க : மொய்ப்பணம் , மகமை ; அழகு ; அத்தி . |
| மொய்க்கணக்கு | திருமணம் முதலியவற்றில் வழங்கும் அன்பளிப்புகள் குறிப்பு . |
| மொய்கதிர் | முலை ; முலைக்காம்பு ; அடர்ந்த கதிர் . |
| மொய்த்தல் | நெருங்கல் ; மேல் பரவுதல் ; மூடுதல் ; இருத்தல் ; நெருங்கிச் சுற்றுதல் ; துன்புறுத்தல் ; கொடுத்தல் . |
| மொய்த்தாய் | தாய் . |
| மொய்தாய் | தாய் . |
| மொய்ப்பணம் | திருமணம் முதலியவற்றில் வழங்கும் நன்கொடைப் பணம் . |
| மொய்ப்பு | கூட்டம் . |
| மொய்ம்பன் | வீரன் . |
| மொய்ம்பு | வலிமை ; தோள் . |
| மொய்யெழுத்து | தருமசாசனம் . |
| மொய்யெழுதுதல் | மணம் முதலிய விழாக்களில் நன்கொடையளித்தல் ; அறத்திற்குச் சிறுதொகை உதவுதல் ; கொடுத்துத் திரும்பக் கிடையாதனவற்றைச் செலவாக எழுதுதல் . |
| மொரமொரப்பு | முறுக்காயொலிக்கை ; தூய்மை ; முறுமுறுப்பு . |
| மொரமொரெனல் | தூய்மையாயிருத்தல் ; முறுக்காயிருத்தற்குறிப்பு . |
| மொருமொருத்தல் | முணுமுணுத்தல் ; காண்க : மொரமொரப்பு . |
| மொருமொரெனல் | முணுமுணுத்தற்குறிப்பு ; காண்க : மொரமொரெனல் . |
| மொலுமொலெனல் | விடாது பேசற்குறிப்பு ; முணுமுணுத்தற்குறிப்பு ; தினவெடுத்தற்குறிப்பு ; சொறிதற்குறிப்பு ; இரைச்சற்குறிப்பு . |
| மொழி | சொல் ; கட்டுரை ; சொற்றொகுதி ; பேச்சுமுறை ; வாக்குமூலம் ; பொருள் ; மணிக்கட்டு , முழங்கால் , கணுக்கால் முதலியவற்றின் பொருத்து ; மரக்கணு . |
| மொழிச்சாரியை | இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆகிய சாரியை . |
| மொழிதடுமாறுதல் | திக்கிப்பேசுதல் ; வாய்குழறுதல் . |
| மொழிதல் | சொல்லுதல் . |
| மொழிநூல் | மொழியின் வரலாற்றைக் கூறும் நூல் . |
| மொழிப்பிசகு | காண்க : மொழிபிசகுதல் . |
| மொழிப்பொருள் | சொல்லுக்கு ஏற்பட்ட பொருள் ; நிமித்தச்சொல் ; மந்திரம் . |
| மொழிபிசகுதல் | வாக்குத்தவறுதல் ; உடற்பொருத்து இடம்விட்டு விலகுதல் . |
| மொழிபிறழ்தல் | வாக்குத்தவறுதல் ; உடற்பொருத்து இடம்விட்டு விலகுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 917 | 918 | 919 | 920 | 921 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மொட்டைமாடு முதல் - மொழிபிறழ்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சிறு, கூட்டம், மரக்கணு, முதலியவற்றின், பருமை, தாய், முதலியவற்றில், மொரமொரெனல், மொரமொரப்பு, வழங்கும், முணுமுணுத்தற்குறிப்பு, மொழிபிசகுதல், இடம்விட்டு, விலகுதல், உடற்பொருத்து, வாக்குத்தவறுதல், திருமணம், பொருள், வெடிநாற்றம், தொந்தரவு, ஒலிக்குறிப்பு, மொடுமொடெனல், முழுதும், கூட்டுத்தொகை, உருண்டை, வலிமை, சொல், பருத்தது, அல்லது, மொய்ப்பணம்

