முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மொழிபெயர்த்தல் முதல் - மோட்சவிளக்கு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மொழிபெயர்த்தல் முதல் - மோட்சவிளக்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மொழிபெயர்த்தல் | ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழிக்கு மாற்றி எழுதுதல் . |
| மொழிபெயர்ப்பு | ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழிக்கு மாற்றி எழுதுதல் . |
| மொழிமாற்று | ஏற்ற பொருளுக்கு இயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள்கொள்ளுதல் . |
| மொழிமை | பழமொழி . |
| மொழியொலிக்குறிப்பு | சொல்லின் அழுத்தமான உச்சரிப்பு . |
| மொழியோசை | பலுக்குதல் ; உச்சரிப்பு . |
| மொழுக்கன் | தடித்தவன் ; மட்டமான வேலை ; வேலைப்பாடில்லாத அணிகலன் . |
| மொழுக்கெனல் | சடக்கென ஒடிதற்குறிப்பு ; எண்ணெய்ப்பசையா யிருத்தற்குறிப்பு . |
| மொழுங்கன் | காண்க : மொழுக்கன் . |
| மொழுப்பு | கட்டு ; சோலைசெறிந்த பகுதி . |
| மொழுப்புதல் | செயலை மழுப்புதல் . |
| மொழுமொழுத்தல் | கொழுகொழுப்பாயிருத்தல் . |
| மொள்ளுதல் | தண்ணீர் முதலியன முகத்தல் . |
| மொறமொறப்பு | தூய்மை ; சருக்கரை ; உலர்ச்சி . |
| மொறுமொறுத்தல் | வெறுப்புக்குறிப்புக் காட்டுதல் . |
| மொறுமொறெனல் | காண்க : மொரமொரெனல் . |
| மோ | ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஓ) ; ஒரு முன்னிலை யசைச்சொல் . |
| மோக்கம் | வீடுபேறு ; விடுபடுகை . |
| மோகப்படைக்கலம் | எதிரியை மயக்கும் படைக்கலன . |
| மோகம் | ஆசை ; காமமயக்கம் ; விருப்பம் ; வேட்கை ; மூர்ச்சை ; மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி ; திகைப்பு பாதிரிமரம் ; மோர் ; முருங்கைமரம் ; வாழைமரம் . |
| மோகர் | ஓவியர் ; மோகமுடையவர் . |
| மோகரம் | பேராரவாரம் ; கடுமை ; மனமயக்கம் . |
| மோகரித்தல் | ஆரவாரித்தல் ; மயங்குதல் . |
| மோகல¦லை | காமத்தைத் தூண்டும் நடத்தை . |
| மோகவிலை | விருப்பத்தின்மேற் கொடுக்கும் அதிகவிலை . |
| மோகவுவமை | பொருள்மேலுள்ள வேட்கையால் உவமான உவமேயங்களை மயங்கக்கூறும் உவமையணிவகை . |
| மோகன் | மன்மதன் . |
| மோகனக்கல் | பூசைக்குரிய பொருள்களை வைக்கும் கல்மேடை ; கோயில் முதலியவற்றின் வாசற்காலின் மேலுள்ள உத்திரக்கல் . |
| மோகனச்சுண்ணம் | மயக்கப்பொடி . |
| மோகனநாட்டியம் | மகளிர்கூத்து . |
| மோகனம் | மயக்கமுண்டாக்குகை ; மனமயக்கம் ; காண்க : மோகனை ; காமனது மோகம் உண்டாக்கும் அம்பு ; ஆசைமிகுகை ; ஒரு பண்வகை ; ஏமாற்றுகை . |
| மோகனமாலை | பொன்னும் பவளமுங் கோத்தமாலைவகை . |
| மோகனாங்கனை | அழகு முதலியவற்றாற் காண்போரை மயக்கும் பெண் . |
| மோகனாங்கினி | அழகு முதலியவற்றாற் காண்போரை மயக்கும் பெண் . |
| மோகனை | பிறரை மயங்கச்செய்யும் வித்தை . |
| மோகாதி | காமம் , வெகுளி , மயக்கம் என்னும் முக்குற்றங்கள் . |
| மோகி | கஞ்சா ; அபின் . |
| மோகித்தல் | காமத்தால் மயங்குதல் ; மனந்திகைத்தல் . |
| மோகிதம் | காமமயக்கம் . |
| மோகிதன் | மோகமுள்ளவன் . |
| மோகினி | கண்டாரை மயங்கச் செய்யும் திருமாலின் பெண்வடிவான பிறப்பு ; தன்னைக் காண்பவரை மயக்கும் உருவத்தையுடைய பெண் ; அசுத்தமாயாதத்துவம் ; பெண்பேய்வகை . |
| மோங்கில் | திமிங்கிலவகை . |
| மோசக்காரன் | வஞ்சகன் . |
| மோசகன் | விடுவிப்பவன் ; துறவி ; வெளிவிடுவோன் ; திருடன் ; தட்டான் . |
| மோசகி | கிலுகிலுப்பைச்செடி . |
| மோசடி | ஏமாற்றம் . |
| மோசம் | வஞ்சனை ; கேடு ; தவறு ; முருங்கைமரம் ; வாழைமரம் . |
| மோசம்போதல் | வஞ்சிக்கப்படுதல் ; கேட்டுக்குள்ளாதல் ; பிசகுதல் . |
| மோசனம் | விடுபடுதல் ; ஒருநெல்வகை . |
| மோசாடம் | சந்தனம் ; வாழைப்பழம் . |
| மோசித்தல் | பிசகிப்போதல் ; விட்டொழிதல் . |
| மோசிமல்லிகை | காண்க : காட்டுமல்லி . |
| மோசை | அவுரி ; இலவமரம் ; வாழை ; வசம்பு ; விரலணிவகை . |
| மோட்சம் | வீடுபேறு ; விடுபடுகை ; பதமுத்தி ; வினைத்தொடர்பினின்று முற்றும் நீங்கும் நிலை . |
| மோட்சமார்க்கம் | வீட்டுநெறி , வீடுபேற்றிற்குரிய வழி . |
| மோட்சவான் | வீடுபேறடைந்தவன் . |
| மோட்சவிளக்கு | வீரசைவர் தமது பிணத்தைப் புதைக்கும் மண்மேடு மீது வைக்கும் விளக்கு ; இறந்தவர்பொருட்டு ஏற்றப்படும் விளக்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 918 | 919 | 920 | 921 | 922 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மொழிபெயர்த்தல் முதல் - மோட்சவிளக்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மயக்கும், பெண், வாழைமரம், மயங்குதல், மனமயக்கம், வைக்கும், மோகனை, விளக்கு, காண்போரை, முதலியவற்றாற், அழகு, முருங்கைமரம், மோகம், மாற்றி, மொழிக்கு, மற்றொரு, உள்ளதை, எழுதுதல், உச்சரிப்பு, மொழியில், விடுபடுகை, வீடுபேறு, மொழுக்கன், காமமயக்கம்

