தமிழ் - தமிழ் அகரமுதலி - மையிடுதல் முதல் - மொட்டைமாடி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மையிடுதல் | கண்ணுக்கு மைதீட்டுதல் ; மந்திரமை தடவுதல் . |
| மையிருட்டு | காரிருள் . |
| மையிழுது | கண்ணுக்கிடும் மை ; ஆட்டுநிணநெய் . |
| மையுடை | காண்க : கருவேல் . |
| மையூட்டுதல் | கண்ணுக்கு மையிடுதல் ; ஓலைக்கு மை தடவுதல் . |
| மையெழுதுதல் | கண்ணுக்கு மையிடுதல் . |
| மையொற்றி | எழுதுமையை ஒற்றும் தாள் . |
| மையோலைபிடித்தல் | கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழுத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல் . |
| மைரேயம் | ஒரு மதுவகை ; ஒரு மருந்துத் தைலவகை . |
| மைவாகனன் | ஆட்டுவாகனமுடையோனான அக்கினிதேவன் . |
| மைவிடை | ஆட்டுக்கடா . |
| மைவிளக்கு | எரிவிளக்கு . |
| மைவைத்தல் | அஞ்சனமிட்டு மயக்குதல் ; கண்ணுக்கு அஞ்சனந் தயாரித்தல் ; வெறி உண்டாகும்படி கட்குடித்தல் . |
| மைனம் | மீன் . |
| மைனா | காண்க : நாகணவாய்ப்புள் . |
| மைனிகன் | கறையான் . |
| மொ | ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஒ) . |
| மொக்கட்டை | முகம் ; மழுக்கமானது . |
| மொக்கணி | குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் பை ; கருவிவகை . |
| மொக்களித்தல் | பயணத்தில் தடைசெய்தல் ; பயணத்தில் தங்குதல் . |
| மொக்கன் | தடித்தவர் ; தடித்தது . |
| மொக்கு | பூமொட்டு ; சீலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு ; தரையிலிடும் பூக்கோலம் ; குத்துவிளக்கின் தகழி ; மரக்கணு ; காண்க : மொக்கை . |
| மொக்குதல் | ஒருசேர விழுங்கியுண்ணுதல் ; அடித்தல் . |
| மொக்குமா | ஒரு கோலப்பொடிவகை . |
| மொக்குள் | மலரும்பருவத்தரும்பு ; நீர்க்குமிழி . |
| மொக்குளித்தல் | குமிழி உண்டாதல் ; திரளுதல் . |
| மொக்கை | கூரின்மை ; பருமை ; மரத்துண்டு ; அவமானம் ; தாழ்வு ; மதிப்பு ; முகம் . |
| மொக்கைகுலைதல் | இழிவடைதல் . |
| மொக்கைச்சோளம் | ஒரு சோளவகை , மக்காச்சோளம் . |
| மொக்கைபோதல் | அவமானப்படுதல் ; முனைமழுங்குதல் . |
| மொகமொகெனல் | நீரூற்றில் உண்டாகும் ஈரடுக்கொலிக்குறிப்பு ; நீர்க்கொதிப்பின் ஒலிக்குறிப்பு . |
| மொகுமொகுத்தல் | ஒலித்தல் . |
| மொகுமொகெனல் | ஒலிக்குறிப்பு ; நீர்பெருகுதற்குறிப்பு . |
| மொங்கன் | காண்க : மொக்கன் . |
| மொங்கான் | இடிகட்டை ; பெருத்துக் கனத்த பொருள் . |
| மொச்சட்டங்கொட்டுதல் | நாவாற்கொட்டி ஒலித்தல் . |
| மொச்சியன் | ஓவியன் . |
| மொச்சு | தீநாற்றம் . |
| மொச்சை | ஒரு பயறுவகை ; காண்க : மொச்சு . |
| மொச்சையடித்தல் | நாட்பட்ட தயிர் முதலியன தீநாற்றம் வீசுதல் . |
| மொசித்தல் | தின்னுதல் . |
| மொசிதல் | மொய்த்தல் . |
| மொசுப்பு | செருக்கு . |
| மொசுமொசுக்கை | காண்க : முசுமுசுக்கை . |
| மொசுமொசுத்தல் | தினவுக்குறிப்பு ; அடிக்கடி தொல்லைதருதல் . |
| மொஞ்சகம் | பீலி . |
| மொஞ்சி | முலை ; முலைப்பால் . |
| மொஞ்சிநாற்றம் | முலைப்பால் மணம் . |
| மொட்டம்பு | கூரற்ற அம்பு . |
| மொட்டித்தல் | குவிதல் ; அரும்புதல் . |
| மொட்டு | பூவரும்பு ; தேரின் கூம்பு ; ஆண்குறியின் நுனி ; வெறுமை . |
| மொட்டை | மயிர்நீங்கிய தலை ; கூரின்மை ; அறிவின்மை ; வெறுமை ; முழுமையின்மை ; மணமாகாத இளைஞன் ; கையெழுத்திடப் பெறாத மனு . |
| மொட்டைச்சி | மயிரற்ற தலையுடையவள் ; கைம்பெண் ; ஒரு மருந்துப்பொடிவகை . |
| மொட்டைத்தலை | மயிர்நீங்கிய தலை . |
| மொட்டைதட்டுதல் | முழுதும் கொள்ளை கொள்ளுதல் . |
| மொட்டைப்புத்தி | மழுங்கின அறிவு . |
| மொட்டைமரம் | பட்டுப்போன மரம் ; காயாமரம் ; இலை , பழம் முதலியன முற்றும் உதிர்ந்த மரம் . |
| மொட்டைமாடி | கட்டடம் அமையப்பெறாத மேற்றளம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 916 | 917 | 918 | 919 | 920 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மையிடுதல் முதல் - மொட்டைமாடி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கண்ணுக்கு, மையிடுதல், தீநாற்றம், மொச்சு, முதலியன, வெறுமை, மரம், மயிர்நீங்கிய, ஒலித்தல், முலைப்பால், கூரின்மை, முகம், தடவுதல், பயணத்தில், மொக்கன், மொக்கை, மொட்டு, ஒலிக்குறிப்பு

