தமிழ் - தமிழ் அகரமுதலி - மென்பு முதல் - மேகனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மென்பு | மென்¬ . |
| மென்புலம் | மருதநிலம் ; நெய்தல் நிலம் . |
| மென்மெல | மெல்ல . |
| மென்மேல் | மேலும் மேலும் . |
| மென்மை | நுண்மை ; மென்மைத்தன்மை ; தாழ்வு ; வலியின்மை ; அமைதி ; காண்க : மெல்லெழுத்து . |
| மென்றொடர் | மெல்லொற்றைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம் . |
| மென்றொடர்க்குற்றியலுகரம் | மெல்லொற்றைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம் . |
| மென்றொடர்மொழி | மெல்லொற்றைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம் . |
| மென்னகை | புன்சிரிப்பு . |
| மென்னடை | மெதுவான நடை ; அன்னம் . |
| மென்னி | மிடறு , கழுத்து . |
| மென்னை | மிடறு , கழுத்து . |
| மெனக்கெடுத்தல் | வினைகெடுத்தலின் திரிபு ; பயனின்றிப் போகச்செய்தல் . |
| மே | ஓர் உயிர்மெய்யெழுத்து (ம்+ஏ) ; மேம்பாடு ; அன்பு . |
| மேக்கடித்தல் | வஞ்சித்தல் ; ஆப்பறைதல் . |
| மேக்கு | மேலிடம் ; மேலான தன்மை ; மேற்கு ; ஆப்பு ; மர ஆணி . |
| மேகக்கல் | ஆட்டுரோசனை . |
| மேககர்ச்சனை | மேகங்களினூடே உண்டாகும் ஒலி . |
| மேககர்ச்சிதம் | மேகங்களினூடே உண்டாகும் ஒலி . |
| மேககாலம் | கார்காலம் . |
| மேகச்சிரங்கு | கெட்டநீரால் தோன்றும் சிரங்கு வகை . |
| மேகச்சிலை | மாக்கல் ; சுக்கான்கல் . |
| மேகசஞ்சாரம் | மேகநோய் படருகை ; மழை முகிற் கூட்டத்தின் சஞ்சரிப்பு . |
| மேகசம் | முத்து . |
| மேகசாரம் | கருப்பூரம் . |
| மேகசாலம் | முகிற்கூட்டம் ; ஒரு மணிவகை . |
| மேகதனு | இந்திரவில் . |
| மேகதாரி | மயிலிறகு . |
| மேகதீபம் | மின்னல் . |
| மேகநாதம் | மேகமுழக்கம் ; சிறுகீரை ; பலாசமரம் ; பச்சிலை . |
| மேகநாதன் | இராவணனின் மகனான இந்திரசித்து ; வருணன் ; நவச்சாரம் . |
| மேகநீர் | வெட்டைநோய் ; கெட்டநீர் . |
| மேகப்படை | தோலின்மேல் உண்டாகும் சொறிவகை . |
| மேகப்புள் | வானம்பாடி . |
| மேகபடலம் | ஒரு கண்ணோய்வகை ; மேகத்தொகுதி ; மேகநோயாற் படரும் புண்வகை . |
| மேகபந்தி | மேகக்கூட்டம் . |
| மேகம் | முகில் ; எழுவகை மேகம் ; நீர் ; குயில் ; காண்க : முத்தக்காசு ; தீநீர் ; தீநடத்தை , மூத்திரக்கோளாறு என்பவற்றால் உண்டாகும் நோய் ; வெள்ளைநோய் . |
| மேகமண்டலம் | மேகம் திரியும் வானவெளி . |
| மேகமூட்டம் | மேகம் பரந்துநிற்கை . |
| மேகமூர்ந்தோன் | இந்திரன் . |
| மேகயோனி | புகை . |
| மேகரணம் | பறங்கிப்புண் ; குட்டம் . |
| மேகராகக்குறிஞ்சி | குறிஞ்சித்திறத்தின் ஒன்று . |
| மேகராகம் | பாலையாழ்த்திறவகை . |
| மேகராடி | மயிலடிக் குருந்துமரம் . |
| மேகலாபதம் | இடை . |
| மேகலை | அரைஞாண் ; பிரமசாரி தன் இடையிலணிவதற்கு உரிய நாணலாலியன்ற முப்புரிக்கயிறு ; மகளிர் இடையிலணியும் ஏழு கோவையுள்ள அணிவகை ; ஆடை ; புடைவை ; கோயில்விமானத்தின் வெளிப்புறத்திற் செய்யப்பட்ட எழுதகவேலை ; தூணைச் சுற்றியுள்ள வளையம் ; ஓமகுண்டத்தைச் சுற்றி இடுங்கோலம் ; மலைச்சரிவு ; மேருமலையின் சிகரத்தொடர் ; குதிரையின் கொப்பூழுக்கு மேலே காணப்படும் நற்சுழி . |
| மேகவண்ணக்குறிஞ்சி | மேகவண்ணப் பூவுள்ள செடிவகை . |
| மேகவண்ணன் | மேகம்போன்ற கருநிறமுள்ள திருமால் . |
| மேகவர்ணம் | கருநீலம் ; பலபடியாக மாறித்தோன்றும் நிறம் . |
| மேகவருணை | அவுரி . |
| மேகவாகனன் | இந்திரன் ; சிவன் ; கருங்கல . |
| மேகவாய் | தயிர் . |
| மேகவாயு | மேகநோய் வெப்பத்தாலுண்டாகும் வாயு ; வாதநோய்வகை . |
| மேகவிடுதூது | காதலரிடம் மேகத்தைத் தூது விடுவதாகக் கூறும் நூல்வகை . |
| மேகவிநாசம் | மழைமேகம் கலைகை . |
| மேகவியாதி | கெட்டநீரால் உண்டாகும் நோய்வகை . |
| மேகவூறல் | கெட்டநீர் பரவுகை ; காண்க : மேகப்படை . |
| மேகவெட்டை | வெட்டைநோய்வகை . |
| மேகனம் | ஆண்குறி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 910 | 911 | 912 | 913 | 914 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மென்பு முதல் - மேகனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உண்டாகும், மேகம், தொடர்ந்துவரும், குற்றியலுகரம், காண்க, மெல்லொற்றைத், கெட்டநீர், இந்திரன், மேகப்படை, மேகநோய், மேகங்களினூடே, மிடறு, கழுத்து, மேலும், கெட்டநீரால்

