முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மெய்க்கோள் முதல் - மெய்விவாகம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மெய்க்கோள் முதல் - மெய்விவாகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மெய்க்கோள் | உண்மையாகக் கொள்ளுகை ; அச்சாரம் . |
| மெய்கண்டசந்தானம் | மெய்கண்டதேவருடைய சித்தாந்ததைப் பின்பற்றுவோர் . |
| மெய்காணுதல் | உண்மையை ஆராய்ந்தறிதல் . |
| மெய்காவல் | ஒருவனைப் பாதுகாக்கை ; சிறை . |
| மெய்காவலன் | பிறனுக்குக் கேடு நேராமாற்காப்பவன் . |
| மெய்கூறல் | உண்மை பேசல் . |
| மெய்ச்சுதல் | காண்க : மெச்சுதல் . |
| மெய்சிலிர்த்தல் | மயிர்க்குச்செறிதல் . |
| மெய்ஞ்ஞானம் | உண்மையறிவு . |
| மெய்ஞ்ஞானி | தத்துவஞானி . |
| மெய்த்தகை | புனையாத இயற்கையழகு ; உண்மைக் கற்பு . |
| மெய்த்தல் | உண்மையாதல் . |
| மெய்த்திறம் | சமய உண்மையை உணர்த்தும் நூல் . |
| மெய்தீண்டுதல் | அன்போடு ஒருவன் உடலைத் தொடுதல் ; ஒருத்தியின் கற்பைக் கெடுத்தல் . |
| மெய்தீய்தல் | சத்தியந் தவறுதல் . |
| மெய்தொட்டுப்பயிறல் | தலைவியின் மனக்குறிப்பை அறிதற்பொருட்டு அவளைத் தொட்டுப் பழகுவதைக் கூறும் அகத்துறை . |
| மெய்ந்நலம் | வலிமை ; உடம்பின் அழகு . |
| மெய்ந்நவை | காண்க : மெய்க்குற்றம் . |
| மெய்ந்நிலை | உண்மைத்தன்மை ; அபிநயவகை . |
| மெய்ந்நிலைமயக்கம் | சொற்களில் ஒற்றெழுத்து இயைந்து வருகை . |
| மெய்ந்நீர்மை | உண்மை ; வீடுபேறு . |
| மெய்ந்நூல் | உண்மை உணர்த்தும் நூல் . |
| மெய்ப்படாம் | உடலை மூடும் போர்வை . |
| மெய்ப்படுதல் | உண்மையாதல் ; ஆவேசிக்கப் பெறுதல் . |
| மெய்ப்பரிசம் | தொட்டுணரும் உணர்வு ; ஊன்றல் ; கட்டல் , குத்தல் , தடவல் , தட்டல் , தீண்டல் , பற்றல் , வெட்டல் , என்னும் எண்வகைப்பட்ட உடலுணர்ச்சிக் காரணங்கள் . |
| மெய்ப்பாட்டிசைக்குறி | வியப்பைக் குறிக்கச் சொல்லின்பின் இடும் அடையாளம் . |
| மெய்ப்பாட்டியற்கை | சமணப் பரமாகமம் . |
| மெய்ப்பாடு | உள்ளத்தின் நிகழ்ச்சி புறத்தார்க்கு வெளிப்படுதல் ; புகழ் ; இயற்கைக்குணம் . |
| மெய்ப்பித்தல் | உண்மையை நிறுவுதல் ; நிரூபித்தல் . |
| மெய்ப்பிரம் | மேகம் . |
| மெய்ப்பு | நிரூபணம் ; பகட்டு ; புகழ்ச்சி . |
| மெய்ப்பூச்சு | உடலின்மேற் பூசும் கலவைச்சாந்து . |
| மெய்ப்பை | சட்டை . |
| மெய்ப்பொருள் | உண்மையான செல்வம் ; உண்மை ; கடவுள் ; நாயனார் அறுபத்து மூவருள் ஒருவர் . |
| மெய்ப்பொறி | உடல் உறுப்பிலக்கணம் ; உடல் . |
| மெய்படுபருவம் | பாளை , பாலன் , காளை , இளையோன் , முதியோன் என்னும் ஐவகை ஆண்மக்கட் பருவம் . |
| மெய்புகுகருவி | காப்புச்சட்டை . |
| மெய்புதையரணம் | காப்புச்சட்டை . |
| மெய்பெறுதல் | எழுத்துகள் திருந்திய ஒலிவடிவு பெறுதல் . |
| மெய்ம்மயக்கம் | காண்க : மெய்ந்நிலைமயக்கம் . |
| மெய்ம்மயக்கு | காண்க : மெய்ந்நிலைமயக்கம் . |
| மெய்ம்மறத்தல் | அறிவுநீங்குதல் ; தன்னை மறத்தல் . |
| மெய்ம்மறதி | அறிவுநீங்குகை ; தன்னை மறத்தல் ; கோபவெறி ; வெறி . |
| மெய்ம்மறை | காண்க : மெய்புகுகருவி . |
| மெய்ம்மை | உண்மை ; இயற்கையான தன்மை ; சத்து ; பொருண்மை . |
| மெய்ம்மையாதல் | உண்மையாதல் ; இயல்பாதல் . |
| மெய்ம்மொழி | உண்மையான வாக்கு ; வேதம் ; முனிவரின் வெகுளி அருட்சொற்கள் . |
| மெய்மாசு | உடலழுக்கு ; பவ்வீ . |
| மெய்யவற்குக்காட்டல்வினா | பிறனை அறிவுறுத்தற்குக் கேட்கும் வினாவகை . |
| மெய்யன் | உண்மையுணர்ந்தோன் ; உண்மையாளன் ; முனிவன் ; வேதியன் ; உண்மை புகலுவோன் ; கடவுள் : மகன் . |
| மெய்யீறு | மெய்யெழுத்தை இறுதியிலுடைய சொல் . |
| மெய்யுணர்தல் | தத்துவஞானம் . |
| மெய்யுணர்வு | தத்துவஞானம் . |
| மெய்யுரை | நூற்குப் பொருத்தமான உரை ; உண்மைமொழி . |
| மெய்யுவமம் | உண்மையையே எடுத்து உவமித்துக் கூறுவது ; வடிவுபற்றி வரும் உவமை . |
| மெய்யுறுபுணர்ச்சி | உடலால் கூடுங் கூட்டம் . |
| மெய்யுறை | உடலிலிடும் காப்புச்சட்டை . |
| மெய்யெழுத்து | உயிரெழுத்திற்கு உடம்பாக இருப்பதான ஒற்றெழுத்து . |
| மெய்வலி | உடலின் பலம் . |
| மெய்வார்த்தை | உண்மையான மொழி . |
| மெய்வாழ்த்து | ஒருவனை வாழ்த்திக் கூறும் பாட்டுவகை . |
| மெய்விடுதல் | இறத்தல் . |
| மெய்விரதன் | உதிட்டிரன் ; வீடுமன் . |
| மெய்விவாகம் | பெற்றோரின் இசைவுடன் செய்து கொள்ளும் திருமணம் ; சட்டப்படியான மணம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 908 | 909 | 910 | 911 | 912 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெய்க்கோள் முதல் - மெய்விவாகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உண்மை, காண்க, மெய்ந்நிலைமயக்கம், உண்மையான, உண்மையாதல், காப்புச்சட்டை, உண்மையை, உடல், மெய்புகுகருவி, மறத்தல், தத்துவஞானம், கடவுள், தன்னை, ஒற்றெழுத்து, நூல், உணர்த்தும், கூறும், சொல், பெறுதல், என்னும்

