தமிழ் - தமிழ் அகரமுதலி - மேகாந்தகாரம் முதல் - மேய்மணி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மேகாந்தகாரம் | மழைக்காலிருட்டு . |
| மேகாநந்தி | மயில் . |
| மேகாரம் | மயில் . |
| மேகாரி | காண்க : அறுகு ; அவரை . |
| மேகை | இறைச்சி . |
| மேங்காவற்காரன் | நாட்டில் களவு முதலியன நேராமல் காப்பவன் . |
| மேசகம் | இருள் ; கருமை ; புகை ; முகில் ; விரிந்த மயில்தோகை ; குதிரையின் பிடரிமயிர் . |
| மேசை | காலுள்ள பலகை ; சீட்டாட்டத்தில் வைக்கும் பந்தயப்பணம் . |
| மேட்டி | அகந்தை ; மேன்மை ; தலைவன் ; உதவி வேலைக்காரன் ; ஊர்த்தலைவனுக்கு விடப்பட்ட மானியம் . |
| மேட்டிமை | அகந்தை ; மேன்மை ; தலைமை . |
| மேட்டுநிலம் | உயர்வான பூமி . |
| மேட்டுப்பாய்ச்சல் | நீர் ஏறிப் பாயவேண்டியதான மேட்டுநிலம் ; மேட்டில் நீரிறைத்துப் பாய்ச்சுகை ; அரும்பணி . |
| மேடகம் | ஆடு ; இராசிமண்டலத்தின் முதற்பகுதி . |
| மேடம் | காண்க : மேடகம் சித்திரைமாதம் ; காப்புச்சட்டை . |
| மேடமதி | சித்திரைமாதம் . |
| மேடமாதம் | சித்திரைமாதம் . |
| மேடவீதி | இடபம் , மிதுனம் ; கடகம் ; சிம்மம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி . |
| மேடன் | மேடராசிக்கு உடையவனான செவ்வாய் . |
| மேடாயனம் | மேடராசியில் சூரியன் புகுங்காலம் ; காண்க : மேடவீதி . |
| மேடு | உயரம் ; சிறுதிடர் ; பெருமை ; வயிறு ; மேலிடம் . |
| மேடூகம் | சுவர . |
| மேடை | செய்குன்று ; மாடி ; தளமுயர்ந்த இடப்பகுதி . |
| மேண்டம் | ஆடு . |
| மேத்தியம் | தூய்மை ; சீரகம் . |
| மேத்தியாசம் | வசம்பு . |
| மேத்திரம் | ஆட்டுக்கட . |
| மேதகம் | கோமேதகம் ; மதிப்பு ; மேன்மை ; பாடாணவகை . |
| மேதகவு | மேன்மை , மதிப்பு . |
| மேதகு | மேன்மைபொருந்திய , மேன்மையான . |
| மேதகுதல் | மேன்மையாதல் . |
| மேதகை | மேன்மை . |
| மேதசு | கொழுப்பு . |
| மேதம் | கொலை ; கொழுப்பு ; வேள்வி . |
| மேதரம் | ம¬ . |
| மேதரவர் | மூங்கில் வேலை செய்து வாழும் சாதியார . |
| மேதவர் | மூங்கில் வேலை செய்து வாழும் சாதியார . |
| மேதன் | புத்தியுள்ளவன . |
| மேதாவி | புத்தியுள்ளவன . |
| மேதாவினி | காண்க :நாகணவாய்ப்புள் . |
| மேதி | எருமை ; ஓர் அரசன் ; வெந்தயம் ; பொலி காளைகளைக் கட்டும் கட்டை ; நெற்களம் . |
| மேதித்தலைமிசைநின்றாள் | கொற்றவை ; துர்க்கை . |
| மேதியான் | எருமையை யூர்பவனாகிய யமன . |
| மேதினி | உலகம . |
| மேதினிபடைத்தோன் | பூமியைப் படைத்தவனாகிய பிரமன் ; பூமிநாயகனாகிய திருமால் . |
| மேதை | பேரறிஞர் ; பேரறிவு ; மேன்மை ; புதன் ; கள் ; கொழுப்பு ; இறைச்சி ; தோல் ; நரம்பு ; உடலிலுள்ள யோகத்தானங்களாகிய பதினாறு கலையுள் ஒன்று ; பொற்றலைக் கையாந்தகரை . |
| மேதைமை | பேரறிவு . |
| மேதையர் | புலவர் . |
| மேந்தலை | மேன்மை ; கப்பலின் காற்றுத்தாக்கும் பக்கம் ; தலைவன் . |
| மேந்தி | வெந்தயம் . |
| மேந்திகை | வெந்தயம் . |
| மேந்தோல் | காண்க : மீத்தோல் . |
| மேந்தோன்றுதல் | மேம்பட்டு விளங்குதல் . |
| மேம்படுதல் | சிறத்தல் . |
| மேம்படுநன் | மேம்பாடுற்றவன் . |
| மேம்பாடு | சிறப் . |
| மேம்பார்வை | வேலைகளைக் கண்காணிக்கை ; அழுத்தமில்லாத நோக்கு . |
| மேம்பாலம் | இருப்புப்பாதை , ஆறு முதலியவற்றின் மேலே கட்டப்பட்ட பாலம் ; கீழுள்ள ஆறு அல்லது வாய்க்காலுக்கு மேலே குறுக்காக நீராடும்படி கட்டிய பாலம . |
| மேய்க்கி | ஆடுமாடு முதலியன மேய்ப்பவன் . |
| மேய்கானிலம் | காண்க : மேய்ச்சற்றரை . |
| மேய்ச்சல் | மேய்கை ; மேய்ச்சற்றரை ; தீனி ; கேடுற்றது ; காமுகனாய்த் திரிகை . |
| மேய்ச்சற்றரை | ஆடுமாடுகள் மேயுமிடம் . |
| மேய்த்தல் | புல் முதலியவற்றை விலங்குகள் தின்னச்செய்தல் ; மருந்து முதலியன செலுத்துதல் ; அடக்கியாளுதல் . |
| மேய்தல் | விலங்கு முதலியன உணவுகொள்ளுதல் ; பருகுதல் ; கெடுத்தல் ; மேற்போதல் ; திரிதல் ; காமுகனாய்த் திரிதல் ; கவர்ந்து நுகர்தல் ; கூரை முதலியன போடுதல் . |
| மேய்ப்பன் | ஆடுமாடுகளை மேய்ப்பவன் ; இடையன் ; அடக்கியாளுபவன் . |
| மேய்ப்பு | மேய்க்கை ; மேய்க்கைக்குரிய நிலம் . |
| மேய்மணி | நாகமணி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 911 | 912 | 913 | 914 | 915 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மேகாந்தகாரம் முதல் - மேய்மணி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மேன்மை, காண்க, முதலியன, வெந்தயம், மேய்ச்சற்றரை, சித்திரைமாதம், கொழுப்பு, பேரறிவு, அகந்தை, புத்தியுள்ளவன, மேலே, மேய்ப்பவன், திரிதல், காமுகனாய்த், இறைச்சி, சாதியார, வாழும், மேடவீதி, தலைவன், மேடகம், மதிப்பு, மயில், செய்து, வேலை, மூங்கில், மேட்டுநிலம்

