தமிழ் - தமிழ் அகரமுதலி - மெய்வேறு முதல் - மென்பிணி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மெய்வேறு | தனித்தனியாய் . |
| மெய்வைத்தல் | காண்க : மெய்விடுதல் . |
| மெருகிடுதல் | பளபளப்பு உண்டாகச்செய்தல் . |
| மெருகு | பளபளப்பு ; வெருகஞ்செடி . |
| மெருகுமண் | தட்டார் மெருகிடுவதற்கு உதவும் மண்வகை . |
| மெருகெண்ணெய் | மரப்பொருள் முதலியவற்றிற்கிடும் மேற்பூச்சுத் தைலம் ; மினுக்கெண்ணெய் . |
| மெருள் | அச்சம . |
| மெல் | மிருதுவா . |
| மெல்குதல் | மென்மையாதல் ; இலேசாதல் ; காண்க : மெல்லுதல் . |
| மெல்கோல் | பற்குச்சி . |
| மெல்ல | மெதுவாக . |
| மெல்லடை | அப்பவருக்கம் . |
| மெல்லணை | காண்க : மெத்தை . |
| மெல்லம்புலம்பன் | நெய்தல்நிலத் தலைவன் . |
| மெல்லம்புலம்பு | நெய்தல்நிலம் . |
| மெல்லரி | உயர்ந்த அரிசிவகை . |
| மெல்லி | காண்க : மெல்லியலாள் . |
| மெல்லிக்கை | பருமனற்றது . |
| மெல்லிசு | காண்க : மெல்லிது . |
| மெல்லிசை | மென்மையான ஓசை . |
| மெல்லிசைவண்ணம் | மெல்லெழுத்து மிகுந்து வரும் சந்தம் . |
| மெல்லிது | மென்மைவாய்ந்த பொருள் ; ஒல்லி . |
| மெல்லியர் | வலிமையில்லாதவர் ; உடல் மெலிந்தவர் ; எளியவர் ; இழிகுணமுடையவர் ; பெண்டிர் . |
| மெல்லியல் | மென்மையான இயல்பு ; பெண் ; மரத்தின் இளங்கொம்பு . |
| மெல்லியலாள் | பெண் . |
| மெல்லிலை | வெற்றிலை ; வெற்றிலைக்கொடி . |
| மெல்லினம் | மூவினத்துள் மெல்லோசையுடைய எழுத்துக்களின் வர்க்கம் . |
| மெல்லுதல் | வாயாற் குதப்புதல் ; கடித்தல் . |
| மெல்லெழுத்து | மெல்லோசையுடைய ங் ஞ் ண் ந் ம் ன் என்னும் எழுத்துகள் . |
| மெல்லென | காண்க : மெல் . |
| மெல்லெனல் | மெத்தெனற்குறிப்பு ; குரல் தாழ்ந்துபேசுதற்குறிப்பு ; மந்தக்குறிப்பு . |
| மெல்லொற்று | காண்க : மெல்லெழுத்து . |
| மெல்வினை | சரியை கிரியைகள் . |
| மெலி | காண்க : மெல்லெழுத்து. இளைப்பு . |
| மெலிகோல் | கொடுங்கோல் . |
| மெலித்தல் | வலிகுறைத்தல் ; உடலை மெலியச்செய்தல் ; வருத்துதல் ; அழித்தல் ; சுரத்தைத் தாழ்த்தல் ; வல்லினத்தை இனமொத்த மெல்லினவெழுத்தாக மாற்றுதல் . |
| மெலிதல் | வலிமை குறைதல் ; உடல் இளைத்தல் ; வருந்துதல் ; அழிதல் ; எளியதாதல் ; வல்லினம் தனக்கினமான மெல்லினமாக மாறுதல் ; ஓசையில் தாழ்தல் . |
| மெலிந்தோன் | நோய் முதலியவற்றால் உடல் மெலிந்தவன் ; வலியற்றவன் ; ஏழை . |
| மெலிப்பு | காண்க : மெலித்தல் ; மெல்லெழுத்து . |
| மெலியார் | வலியிலார் . |
| மெலிவடைதல் | வாடல் ; கலங்கல் ; வலுக்குறைதல் . |
| மெலிவித்தல் | கனங்குறைத்தல் ; வாட்டல் ; மிருதுவாக்கல் . |
| மெலிவு | வருத்தம் ; தளர்ச்சி ; களைப்பு ; துன்பம் ; தோல்வி ; கொடுமை ; படுத்தலோசை . |
| மெலுக்கு | வெளியலங்காரம் ; மென்மை ; விழிப்பு . |
| மெலுக்குவை | மென்மை ; விழிப்பு . |
| மெழுக்கம் | சாணத்தால் மெழுகிவைத்த இடம் . |
| மெழுக்கு | சாணம் ; மெழுகுதல் ; மெழுகும் பொருள் ; மருந்துவகை ; தேனடையின் சக்கை . |
| மெழுக்கூட்டுதல் | மேற்பூச்சிடுதல் . |
| மெழுகிடுதல் | காண்க : மெழுகுதல் ; மெழுகுகட்டுதல் ; நூலின்மேல் மெழுகு பூசுதல் . |
| மெழுகு | அரக்கு ; சாணம் ; மென்மை ; தேனடையின் சக்கை ; பிசின் ; பிசுபிசுத்த தன்மையுடைய மருந்து . |
| மெழுகுகட்டுதல் | விக்கிரகம் வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல் . |
| மெழுகுசாத்துதல் | விக்கிரகம் வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல் . |
| மெழுகுசீலை | நீர் ஊறாதிருப்பதற்காக மெழுகு பூசின துணி ; நனையாதிருப்பதற்காக மேற்பூச்சிட்ட துணி ; தார்த் தைலமிட்ட கூரைப்பாய் . |
| மெழுகுதண்டு | காண்க : மெழுகுவத்த . |
| மெழுகுதல் | தரையை சாணமிட்டுத் தூய்மை செய்தல் ; பூசுதல் ; குற்றத்தை மறைத்துப் பூசிவிடுதல் . |
| மெழுகுதிரி | காண்க : மெழுகுவத்த . |
| மெழுகுபதம் | காய்ச்சப்பட்ட மருந்தெல்லாம் மெழுகுபோலத் திரளும் பக்குவம் . |
| மெழுகுமண் | கருக்கட்டும் பசைமண் . |
| மெழுகுவத்தி | எரிய உதவும்படி நடுவே திரியிட்டுச் செய்யப்பட்ட மெழுகுகோல் . |
| மெள்ள | காண்க : மெல்ல . |
| மெள்ளென | காண்க : மெல்லென . |
| மென்கண் | இரக்கம் . |
| மென்கணம் | காண்க : மெல்லினம் . |
| மென்கால் | தென்றல் . |
| மென்சொல் | இனியசொல் ; அன்பான மொழி . |
| மென்பறை | பறவைக்குஞ்சு . |
| மென்பால் | மருதநிலம் . |
| மென்பிணி | சிறுதுயில் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 909 | 910 | 911 | 912 | 913 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெய்வேறு முதல் - மென்பிணி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மெல்லெழுத்து, மெழுகுதல், மென்மை, உடல், மெழுகு, தேனடையின், மெழுகினாற், மெழுகுவத்த, கருக்கட்டுதல், சக்கை, மெழுகுகட்டுதல், பூசுதல், சாணம், துணி, வார்க்க, விக்கிரகம், மெலித்தல், மெல்ல, மெல்லியலாள், மெல்லுதல், மெல், பளபளப்பு, மெல்லிது, மென்மையான, மெல்லோசையுடைய, மெல்லென, மெல்லினம், பெண், பொருள், விழிப்பு

