தமிழ் - தமிழ் அகரமுதலி - மும்மணி முதல் - முரண்டன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மும்மணி | புருடராகம் , வைடூரியம் ; கோமேதகம் என்னும் மூவகை இரத்தினங்கள் ; அணிகலவகை ; காண்க : திரிமணி . |
| மும்மணிக்காசு | அணிகலவகை . |
| மும்மதத்தன் | விநாயகர் . |
| மும்மதம் | மதயானையின் கன்னமதம் , கைம்மதம் , கோசமதம் என மூவகைப்பட்ட மதநீர் . |
| மும்மதில் | காண்க : முப்புரம் ; சமவசரணத்துள்ள உதயதரம் ; பிரீதிதரம் ; கல்யாணதரம் என்னும் மூன்று மதில்கள் . |
| மும்மரித்தல் | காண்க : மும்முரித்தல் . |
| மும்மலம் | ஆணவம் ; கன்மம் , மாயை என்னும் மூவகை மலங்கள் ; காமம் , வெகுளி , மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள் . |
| மும்மாரி | ஒரு மாதத்தில் பெய்யும் மூன்று மழை . |
| மும்மீன் | மிருகசீரிடநாள் . |
| மும்முட்டி | சிற்றாமுட்டி , பேராமுட்டி , நாகமுட்டி என்னும் செடிகள் . |
| மும்முடிச்சோழன் | தமிழ்நாட்டு வேந்தர் மூவருக்குரிய முடிகளைத் தரித்த சோழனான முதலாம் இராசராசன் . |
| மும்முரசு | மணமுரசு , வெற்றிமுரசு , கொடை முரசு என்னும் மூன்று முரசுகள் ; நியாயமுரசு , வீரமுரசு , தியாகமுரசு என்னும் மூவகை முரசுகள் ; சேர சோழ பாண்டியர்க்குரிய மூன்று முரசுகள் . |
| மும்முரம் | கடுமை ; விரைவு ; பகட்டு ; கவனம் . |
| மும்முரித்தல் | வேகங்கொள்ளல் . |
| மும்முறை | மூன்றுதரம் . |
| மும்மூடர் | முழுமூடர் . |
| மும்மூர்த்தி | பிரமன் , திருமால் , உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகள் ; சுக்கு , திப்பிலி , மிளகு என்னும் திரிகடுகங்கள் . |
| மும்மை | மூன்றாயிருக்குந் தன்மை ; மூன்று ; உம்மை ; இம்மை ; மறுமை என்னும் முப்பிறப்பு ; இறப்பு , நிகழ்வு , எதிர்வு என்னும் மூன்று காலங்கள் . |
| மும்மொழி | பழிகூறல் , புகழ்கூறல் , மெய்கூறல் என்னும் முவகைப்பட்ட மொழி . |
| முமுட்சு | வீடுபேற்றில் நாட்டமுடையவன் . |
| முமுடம் | முழுத் துறவு . |
| முயக்கம் | தழுவுதல் ; புணர்ச்சி ; சம்பந்தம் . |
| முயக்கு | தழுவுதல் ; புணர்ச்சி ; சம்பந்தம் . |
| முயங்கிக்கொள்ளுதல் | கணவன் மனைவியராய் வாழ்தல் . |
| முயங்குதல் | தழுவுதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; செய்தல் . |
| முயல் | போர் ; சிறுவிலங்குவகை . |
| முயல்வலி | வலிப்புநோய்வகை . |
| முயல்வு | முயலுகை . |
| முயலகன் | காண்க : முசலகன் . |
| முயலின்கூடு | காண்க : முயற்கூடு . |
| முயலுதல் | காரியம் முற்றுப்பெறும்பொருட்டு ஊக்கத்தோடு செய்தல் ; வருந்துதல் ; தொடங்குதல் . |
| முயற்களங்கம் | நிலவினிடத்துள்ள களங்கம் . |
| முயற்கறை | நிலவினிடத்துள்ள களங்கம் . |
| முயற்கூடு | சந்திரன் . |
| முயற்கொம்பு | முயலின் கொம்பு ; உலகில் இல்லாத பொருள் . |
| முயற்கோடு | முயலின் கொம்பு ; உலகில் இல்லாத பொருள் . |
| முயற்சி | ஊக்கம் ; இடைவிடாத உழைப்பு ; வேலை . |
| முயற்புல் | அறுகம்புல் . |
| முயற்றிசை | வடகீழ்த்திசை . |
| முயற்று | ஊக்கம் . |
| முயிற்றுப்புல் | ஒரு புல்வகை . |
| முயிறு | ஓர் எறும்புவகை . |
| முரகரி | திருமால் . |
| முரங்கினம் | மிளகு . |
| முரச்சுதல் | முற்றுவித்தல் . |
| முரசக்கொடியோன் | முரசத்தைக் கொடியிலுடைய தருமன் . |
| முரசம் | பறைவகை ; மருதநிலப் பறைவகை ; போர்ப்பறை . |
| முரசறைதல் | யாவரும் அறியப் பறையடித்துச் சொல்லுதல் ; வெளியிடுதல் . |
| முரசு | பல்லின் அடித்தசை ; காண்க : முரசம் ; உத்தரட்டாதிநாள் . |
| முரசுகட்டில் | அரசற்குரிய முரசினை வைக்கும் இருக்கை . |
| முரஞ்சு | முதிர்கை ; பாறை . |
| முரஞ்சுதல் | முதிர்தல் ; வலிபெறுதல் ; நிரம்புதல் . |
| முரட்கை | கலிப்பா . |
| முரட்டடி | இணக்கமற்ற குணம் . |
| முரட்டாட்டம் | இணக்கமற்ற குணம் . |
| முரட்டுக்கழுத்து | வணங்காத குணம் ; நுகம் பூணாத எருதின் கழுத்து . |
| முரட்பயம்பு | ஏற்றிழிவையுடைய நிலத்திலுள்ள குழி . |
| முரடன் | காண்க : முருடன் . |
| முரடு | கரடு ; மரியாதையின்மை ; மரக்கணு ; உடலின் மூட்டு ; பிடிவாதம் ; பருமன் . |
| முரண் | பகை ; போர் ; வலிமை ; பெருமை ; மாறுபாடு ; காண்க : முரண்டொ(தொ)டை ; முருட்டுக்குணம் ; கொடுமை ; மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று . |
| முரண்டல் | பகைத்தல் . |
| முரண்டன் | மாறுபாடுள்ளவன் ; பிடிவாதக்காரன் ; பொறுமையில்லாதவன் ; அவசரக்காரன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 893 | 894 | 895 | 896 | 897 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மும்மணி முதல் - முரண்டன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், என்னும், காண்க, மூன்று, மூவகை, முரசுகள், தழுவுதல், குணம், உலகில், முயலின், இல்லாத, கொம்பு, முரசம், இணக்கமற்ற, பறைவகை, களங்கம், ஊக்கம், பொருள், செய்தல், திருமால், முரசு, மும்முரித்தல், அணிகலவகை, மிளகு, புணர்ச்சி, முயற்கூடு, போர், சம்பந்தம், நிலவினிடத்துள்ள

