முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முக்கியப்பொருள் முதல் - முகச்சரக்கு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முக்கியப்பொருள் முதல் - முகச்சரக்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முக்கியப்பொருள் | இலக்கணையாகவன்றிச் சொல்லின்படி நேராகக் கொள்ளும் பொருள் . |
| முக்கியம் | இன்றியமையாதது ; சிறப்பானது ; தலைமை . |
| முக்கியன் | தலைவன் . |
| முக்கு | மூச்சுத்திணறுகை ; நோய்வகை ; மூலை ; சந்து ; பெருமுயற்சி ; மூச்சை இறுகப்பிடித்து மெல்ல விடுதல் . |
| முக்குடுமி | சூலம் ; குடுமிவகை . |
| முக்குடை | அருகனுக்குரியதும் சந்திராதித்தம் , சகலபாசனம் , நித்தியவிநோதம் என மூன்று அடுக்குள்ளதுமான குடை . |
| முக்குடைக்கல் | சமண அறக்கட்டளைக்கு விடப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் முக்குடை வடிவு செதுக்கப்பட்டக் கல் . |
| முக்குடைச்செல்வன் | முக்குடை உடைய அருகன் . |
| முக்குடையான் | முக்குடை உடைய அருகன் . |
| முக்குடையோன் | முக்குடை உடைய அருகன் . |
| முக்குணம் | சாத்துவிகம் , இராசதம் , தாமதம் என்னும் மூன்று குணங்கள் . |
| முக்குணுக்கிடுதல் | மூன்று வளைவு உண்டாகும்படி செய்தல் . |
| முக்குதல் | மூச்சை இறுகப்பிடித்து மெல்ல வெளிவிடுதல் ; பெருமுயற்சி செய்தல் ; நிரம்பவுண்ணுதல் ; மூழ்குதல் ; மூழ்குவித்தல் . |
| முக்குலம் | அக்கினிமரபு , சந்திரமரபு , சூரியமரபு என்னும் மூன்று அரசர் குலம் . |
| முக்குழி | மூன்று வேதாக்கினிகளை வளர்க்குங்குழிகள் . |
| முக்குழிச்சட்டி | பணியாரம் சுடும் மூன்று குழியுள்ள சட்டிவகை . |
| முக்குளம் | கங்கை , சரசுவதி , யமுனை என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம் ; பூராடநாள் . |
| முக்குளி | காண்க : கோழிமுளையான் . |
| முக்குளித்தல் | முழுகுதல் . |
| முக்குற்றங்கடிந்தோன் | முக்குற்றத்தையும் ஒழித்தவனான புத்தன் . |
| முக்குற்றம் | காமம் , வெகுளி , மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள் . |
| முக்குறும்பு | காமம் , வெகுளி , மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள் . |
| முக்கூட்டரத்தம் | வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புகளை மெல்லுதலால் உண்டாகும் செந்நிறம் . |
| முக்கூட்டு | மூன்று சரக்குகளாகிய மருந்து ; பசுவின்நெய் ; விளக்கெண்ணெய் , நல்லெண்ணெய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணெய் ; மூன்று கட்டிகளைக் கூட்டியமைத்த அடுப்பு ; மூன்று வழிகள் சேருமிடம் ; பரணிநாள் . |
| முக்கூடல் | மூன்று ஆறுகள் கூடும் புண்ணியத்துறை ; ஓர் ஊர் . |
| முக்கைப்புனல் | மூன்றுமுறை குடங்கையால் நீர் முகந்து தென்புலத்தார்க்குச் செய்யும் நீர்க்கடன் . |
| முக்கோட்டை | தன்னை வழிபட்டோர்க்குப் பாடுமாற்றலை அளிக்கும் கொற்றவை கோயில் . |
| முக்கோண் | மூன்று நிலை ; மூன்று கோணங்களை உடைய வடிவம் ; நரகவகை . |
| முக்கோணம் | மூன்று நிலை ; மூன்று கோணங்களை உடைய வடிவம் ; நரகவகை . |
| முக்கோல் | தவசிகளுக்குரிய திரிதண்டம் ; திருவோணநாள் . |
| முக்கோற்பகவர் | திரிதண்டந் தாங்கிய துறவியர் . |
| முக்தகஞ்சுகம் | தோலுரித்த பாம்பு . |
| முக்தாபலம் | கருப்பூரம் ; முத்து . |
| முக்தி | காண்க : முத்தி . |
| முகக்கட்டை | மோவாய்க்கட்டை . |
| முகக்கடுப்பு | முகத்தில் காணும் கடுமைக்குறி . |
| முகக்கயில் | உடைந்த தேங்காயின் கண்ணுள்ளதாகிய மேல்மூடி . |
| முகக்கருவி | கடிவாளம் . |
| முகக்களை | முகத்தினழகு . |
| முகக்கிளர்ச்சி | முகமலர்வு . |
| முகக்குறி | முகத்தில் தோன்றும் குறிப்பு . |
| முகக்கொள்ளி | கொள்ளிவாய்ப் பிசாசு . |
| முகக்கொள்ளுதல் | அளந்து கொள்ளுதல் . |
| முகக்கோட்டம் | வெறுப்பு , துயரம் முதலியவற்றின் குறியாக முகங்கோணுகை . |
| முகங்கடுத்தல் | சினம் , வெறுப்பு முதலியவற்றின் குறியாக முகத்திற் கடுமைகாட்டுதல் . |
| முகங்கவிழ்தல் | நாணம் முதலியவற்றால் தலைகுனிதல் . |
| முகங்காட்டுதல் | முகத்தைக் காட்டுதல் ; காட்சி கொடுத்தல் ; காண்க : முகங்காண்பித்தல் . |
| முகங்காண்பித்தல் | பெரியோரைச் சென்று காணுதல் . |
| முகங்காணுதல் | கட்டி உடைவதற்குமுன் வாய்திரளுதல் ; பிறந்த குழந்தையின் முகத்தைத் தந்தை பார்த்தல் ; தாய்முகம் பார்த்தல் . |
| முகங்குறாவுதல் | துன்பத்தால் முகப்பொலி விழத்தல் . |
| முகங்கொடுத்தல் | இன்முகங் காட்டுதல் ; காட்சி கொடுத்தல் ; செவிசாய்த்தல் ; செல்லங்கொடுத்தல் . |
| முகங்கொள்ளுதல் | ஒப்புதல் பெறுதல் ; உடன்பாட்டுக்குறி காட்டுதல் ; காண்க : முகங்காணுதல் . |
| முகங்கோடுதல் | முகத்தில் வெறுப்புக்குறிகாட்டல் . |
| முகங்கோணுதல் | முகத்தில் வெறுப்புக்குறிகாட்டல் . |
| முகச்சரக்கு | கடடையின்முன் பார்வைக்காக வைக்கப்படும் பண்டம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 880 | 881 | 882 | 883 | 884 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முக்கியப்பொருள் முதல் - முகச்சரக்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மூன்று, என்னும், முக்குடை, உடைய, காண்க, முகத்தில், அருகன், காட்டுதல், குறியாக, முதலியவற்றின், நரகவகை, வெறுப்பு, முகங்காண்பித்தல், பார்த்தல், வெறுப்புக்குறிகாட்டல், முகங்காணுதல், வடிவம், கொடுத்தல், காட்சி, மூவகை, செய்தல், ஆறுகள், மெல்ல, இறுகப்பிடித்து, மூச்சை, காமம், வெகுளி, நிலை, உயிர்க்குற்றங்கள், பெருமுயற்சி, மயக்கம், கோணங்களை

