தமிழ் - தமிழ் அகரமுதலி - மீசை முதல் - மீன்முள் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
மீசை | உதட்டின்மேலுள்ள மயிர் ; மேலிடம் . |
மீட்சி | திரும்புகை ; விடுதலைசெய்கை ; எஞ்சுவதைக் கொள்ளுகையாகிய பிரமாணம் ; கைம்மாறு . |
மீட்டு | காண்க : மீண்டு , மீண்டும் . |
மீட்டும் | காண்க : மீண்டு , மீண்டும் . |
மீட்டுதல் | மீளச்செய்தல் ; யாழ் முதலியவற்றின் நரம்பைத் தெறித்தல் ; ஒற்றி முதலியவற்றைத் திருப்புதல் ; காப்பாற்றுதல் ; அள்ளுதல் ; நாணேற்றுதல் . |
மீட்டெடுத்தல் | காப்பாற்றுதல் ; மேலாக எடுத்தல் ; இரையெடுத்தல் . |
மீட்பர் | காப்பாற்றுவோர் . |
மீட்பு | மீட்கை . |
மீடம் | சிறுநீர் . |
மீண்டு | திரும்ப . |
மீண்டும் | திரும்ப . |
மீத்துவைத்தல் | மிச்சப்படுத்துதல் . |
மீத்தோல் | மேல்தோல் . |
மீதாட்சி | நிலம் முதலியவற்றில் மேலாணை . |
மீதாடுதல் | கடந்துசெல்லுதல் . |
மீதாரி | மிச்சம் ; ஒரு கலப்புவகை ; நறுமணப்புகை . |
மீதி | மிச்சம் ; காட்டுக்கத்தரி ; எட்டிமரம் . |
மீதிடல் | வளர்தல் . |
மீது | மேற்புறம் ; மேடு ; மேல் ; அதிகம் . |
மீதுரை | பலகால் கூறுதல் . |
மீதூர்தல் | மேன்மேல் வருதல் ; அடர்தல் ; அடர்த்தல் . |
மீதோல் | காண்க : மீத்தோல் . |
மீந்தது | மிச்சம் . |
மீந்தோல் | காண்க : மீத்தோல் . |
மீநீர் | நீரின் மேற்பரப்பு . |
மீப்பு | மிகுதி ; மேன்மை . |
மீப்போர்த்தல் | மேலே போர்த்தல் . |
மீப்போர்வை | மேற்போர்வை . |
மீமாங்கிசன் | பூர்வ மீமாஞ்சையில் வல்லவன் . |
மீமாஞ்சகன் | பூர்வ மீமாஞ்சையில் வல்லவன் . |
மீமாஞ்சை | வேதப்பொருள் அறிவிக்கும் நூல் ; பூர்வமீமாஞ்சை . |
மீமிசை | மிக்கது ; காண்க : மீமிசைச்சொல் ; மேலிடத்தில் . |
மீமிசைச்சொல் | சிறப்புப் பொருளைத் தெரிவித்தற்கு முன்னுள்ள சொல்லின் பொருளிலேயே அடுத்துவரும் சொல் . |
மீமிசையண்டம் | வீடுபேறு . |
மீயடுப்பு | புடையடுப்பு . |
மீயாட்சி | காண்க : மீதாட்சி . |
மீயாளுதல் | மேலதிகாரஞ் செய்தல் . |
மீயான் | காண்க : மீகான் . |
மீயை | செங்குடை . |
மீரம் | கடல் . |
மீலம் | வானம் . |
மீலனம் | கண்சிமிட்டு . |
மீவான் | காண்க : மீகான் . |
மீள | மறுபடியும் . |
மீளவும் | மறுபடியும் . |
மீளாக்கதி | வீடுபேறு ; திரும்பிவாராநெறி . |
மீளாக்காட்சி | வீடுபேறு ; திரும்பிவாராநெறி . |
மீளாவழி | வீடுபேறு ; திரும்பிவாராநெறி . |
மீளி | மீளுகை ; இரங்கல் ; தலைவன் ; பாலைநிலத் தலைவன் ; படைத்தலைவன் ; இறை ; வலியவன் ; பெருமையிற் சிறந்தோன் ; வலிமை ; வீரம் ; பெருமை ; தலைமை ; கூற்றுவன் ; பேய் ; இளைஞன் ; ஏழு அகவைக்கு மேல் பத்து அகவை முடியுமளவுள்ள பருவம் . |
மீளிமை | வீரம் ; வலிமை . |
மீளுதல் | திரும்புதல் ; இல்லையாதல் ; காப்பாற்றப்படுதல் ; கடத்தல் . |
மீறுதல் | ஆணை முதலியன கடத்தல் ; மேற்போதல் ; அதிகாரஞ்செய்தல் ; மிகுதல் ; எஞ்சியிருத்தல் ; பெரியதாய் வளர்தல் ; செருக்கடைதல் . |
மீன் | நீர்வாழ் உயிரி ; விண்மீன் ; சித்திரைநாள் ; அத்தநாள் ; மீனராசி ; சுறா ; நெய்தல்நிலப்பறை . |
மீன்கவிச்சு | மீனின் நாற்றம் . |
மீன்காரன் | மீன்விற்போன் ; செம்படவன் . |
மீன்காரி | மீன்விற்பவள் ; செம்படத்தி . |
மீன்குஞ்சு | மீனின் இளமை . |
மீன்குத்தி | மீன்கொத்திப்பறவை ; பாரைக்கோல் . |
மீன்கொடியோன் | காண்க : மீனக்கொடியோன் . |
மீன்கொத்தி | சிச்சிலிப்பறவை . |
மீன்கொழுப்பு | திமிங்கிலநெய் . |
மீன்கோட்பறை | நெய்தல்நிலப் பறை . |
மீன்சிதள் | காண்க : மீன்செதில்(ள்) . |
மீன்சிறகு | சிறகுபோலக் காணப்படும் மீனின் உறுப்பு . |
மீன்சினை | மீன்முட்டை ; மீனின் கொழுப்பு . |
மீன்செகிள் | மீனின் மேற்புறத்தேயுள்ள பிரால் . |
மீன்செதில் | மீனின் மேற்புறத்தேயுள்ள பிரால் . |
மீன்செதிள் | மீனின் மேற்புறத்தேயுள்ள பிரால் . |
மீன்செலு | மீனின் மேற்புறத்தேயுள்ள பிரால் . |
மீன்பறி | மீன்பிடிக்குங் கூட்டுப்பொறி . |
மீன்பாடு | மீன்கள் வலையுட்படுகை . |
மீன்பிரால் | காண்க : மீன்செதில்(ள்) . |
மீன்மடை | குளங்குட்டைகளில் மீன்பிடித்தற்கு அமைத்த சிறிய மண்ணணை . |
மீன்முள் | மீனெலும்பு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 878 | 879 | 880 | 881 | 882 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மீசை முதல் - மீன்முள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மீனின், பிரால், வீடுபேறு, மேற்புறத்தேயுள்ள, திரும்பிவாராநெறி, மிச்சம், மீன்செதில், மீண்டும், மீண்டு, மீத்தோல், தலைவன், வீரம், கடத்தல், மறுபடியும், வலிமை, வல்லவன், வளர்தல், மீதாட்சி, திரும்ப, காப்பாற்றுதல், மேல், பூர்வ, மீமிசைச்சொல், சொல், மீமாஞ்சையில், மீகான்