முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முகச்சவரம் முதல் - முகமண்டலம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முகச்சவரம் முதல் - முகமண்டலம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முகச்சவரம் | முகத்தளவில் செய்துகொள்ளும் சவரம் . |
| முகச்சாடை | முகக்குறி ; காண்க : முகச்சாயல் ; கண்டுங்காணாமை . |
| முகச்சாயல் | முகத்தின் தோற்றம் . |
| முகச்சார்த்து | சார்த்துவரி என்னும் இசைப்பாட்டுவகை . |
| முகச்செழிப்பு | காண்க : முகக்களை . |
| முகசந்தி | நாடகச்சந்தி ஐந்தனுள் முதலிலுள்ள சந்தி . |
| முகசோதி | எலுமிச்சை . |
| முகஞ்சுண்டுதல் | வெட்கப்படுதல் ; சினமுதலியவற்றால் முகம் கன்றுதல் ; காண்க : முகங்கடுத்தல . |
| முகஞ்சுளித்தல் | காண்க : முகங்கடுத்தல . |
| முகஞ்செய்தல் | நோக்குதல் ; தோன்றுதல் ; முன்னாதல் . |
| முகட்டாணி | கூரையின் உச்சியிலுள்ள மர ஆணிவகை . |
| முகட்டுத்துவாரம் | கூரையில் காற்றுச் செல்லவிடும் வழி . |
| முகட்டுப்பந்தல் | முகடு வைத்த சாய்வுப் பந்தல் . |
| முகட்டுப்பூச்சி | மூட்டுப்பூச்சி . |
| முகட்டுவளை | கூரைமுகட்டின் நீட்டுவளை . |
| முகடி | மூதேவி . |
| முகடு | உச்சி , மலை , வீடு முதலியவற்றின் உச்சி ; முகட்டுவளை ; அண்டமுகடு ; உயர்வு ; வாயில் ; திண்ணை ; சபைக்குறடு ; தலை ; முதுகு ; பாழ் ; வீடுபேறு ; முலைமுகம் . |
| முகத்தல் | மொள்ளுதல் ; அளத்தல் ; தாங்கியெடுத்தல் ; விரும்புதல் ; நிரம்பப்பெறுதல் ; மணம் பார்த்தல் ; காண்க : முகத்தலளவு(வை) . |
| முகத்தலளவு | தானியங்களை முகந்து அளக்கும் அளவை . |
| முகத்தலளவை | தானியங்களை முகந்து அளக்கும் அளவை . |
| முகத்தாலடித்தல் | காண்க : முகத்திலடித்தல் . |
| முகத்திரியக்குநாடி | முகத்தில் குறுக்காய் ஓடும் அரத்தக்குழாய் . |
| முகத்திலடித்தல் | நேரே நிந்தித்தல் ; கடுமுகங்காட்டிக் கண்டித்தல் ; அருவருப்பாதல் . |
| முகத்தில¦யாடாமை | கவலைகொண்ட முகங்கொள்ளுகை . |
| முகத்துதி | ஒருவன்முன் புகழ்தல் . |
| முகத்துநாடி | முகத்திலோடும் அரத்தக்குழாய் . |
| முகத்துரை | தானே நேரில்நின்று பேசுகை . |
| முகத்துவாரம் | கழிமுகம் . |
| முகத்தெளிவு | காண்க : முகக்களை . |
| முகதலை | சீலையின் முன்றானை ; கைம்மாற்றுக் கடன் ; எதிர்முகமாக்குகை . |
| முகதலைத்தல் | எதிர்முகமாக்குதல் . |
| முகதாட்சிணியம் | ஒருவன் முன்னிலையில் காட்டும் கண்ணோட்டம் . |
| முகந்திரிதல் | காண்க : முகமாறுதல் . |
| முகந்திருத்துதல் | முகவாட்டந் தவிர்த்தல் . |
| முகந்துடைத்தல் | முகச்சவரஞ் செய்தல் . |
| முகநட்பு | வெளிநட்பு . |
| முகநிலை | இசைப்பாட்டுவகை . |
| முகநிலைப்பாசம் | பெருவிரலும் சுட்டுவிரலும் முகங்கூடி உகிர்விட்டிருக்கும் பசாசக்கைவகை . |
| முகநோக்குதல் | நோக்கெதிர் நோக்குதல் . |
| முகப்படுதல் | முன்தோன்றுதல் . |
| முகப்பணி | காண்க : முகச்சவரம் . |
| முகப்பரு | முகத்தில் தோன்றும் சினைப்பு . |
| முகப்பழக்கம் | அறிமுகம் . |
| முகப்பு | தலைப்பு , முற்பகுதி , முன்னிலை ; வீட்டுமுன் கூரைக் கட்டடம் ; அணிகலப் பொருத்து வாய் ; மகளிரின் சீலை முன்றானை . |
| முகப்புமடை | தலைமடை . |
| முகப்பூச்சு | முகத்தில் தடவும் பொடி ; வெளிப்பகட்டு . |
| முகப்பொருத்தம் | காண்க : முகராசி ; வெளிநட்பு . |
| முகப்பொலிவு | முகத்தின் அழகு . |
| முகப்போதரவு | இச்சகம் . |
| முகபடாம் | யானையின் முகத்திலிடும் அலங்காரத் துணி . |
| முகம் | தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம் ; வாய் ; வாயில் ; கழி ; இடம் ; மேலிடம் ; நுனி ; தொடக்கம் ; வடிவு ; நோக்கு ; தியானம் ; முகத்துதி ; காரணம் ; ஏழாம் வேற்றுமையுருபு ; முன்பு ; நாடகச்சந்தி ஐந்தனுள் முதலிலுள்ள சந்தி ; நடிகர்கள் அரங்கிற்கு வருமுன் நிகழுங் கூத்து ; இயல்பு ; நிலை ; தோற்றம் ; கட்டி முதலியவற்றின் முனையிடம் ; முதன்மை ; பக்குவம் ; பக்கம் ; உவமவுருபு ; மூலம் ; யாகம் ; வகை ; இந்திரகோபம் . |
| முகம்பார்த்தல் | நேர்நோக்குதல் ; அன்புசெய்தல் ; நன்குமதித்தல் ; குழந்தை பிறர்முகத்தைக் கவனித்து இனந்தெரிதல் . |
| முகம்புகுதல் | முகப்பொலிவு கொள்ளுதல் ; அருள்காட்டும்படி எதிர்சென்று நிற்றல் . |
| முகம்புடைத்தல் | துக்கக் குறியாக முகத்தில் அடித்துக்கொள்ளுதல் காண்க : முகங்காணுதல . |
| முகம்புதைத்தல் | முகத்தை மூடுதல் . |
| முகம்பெறுதல் | தோன்றுதல் . |
| முகமண்டபம் | கோயிலின் முன்மண்டபம் . |
| முகமண்டலம் | தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 881 | 882 | 883 | 884 | 885 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகச்சவரம் முதல் - முகமண்டலம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முகத்தில், அரத்தக்குழாய், முகத்துதி, முகத்திலடித்தல், அளக்கும், தானியங்களை, முகந்து, முன்றானை, அளவை, வெளிநட்பு, மோவாய், வரையுள்ள, முன்புறம், நெற்றிமுதல், தலையில், வாய், முகப்பொலிவு, முகத்தலளவு, முதலியவற்றின், நாடகச்சந்தி, ஐந்தனுள், முதலிலுள்ள, முகக்களை, இசைப்பாட்டுவகை, முகச்சாயல், முகத்தின், தோற்றம், சந்தி, முகம், முகட்டுவளை, உச்சி, முகச்சவரம், முகடு, தோன்றுதல், முகங்கடுத்தல, நோக்குதல், வாயில்

