தமிழ் - தமிழ் அகரமுதலி - மனைக்கிழவன் முதல் - மாகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மனைக்கிழவன் | வீட்டுக்குரியவனான கணவன் . |
| மனைக்கோள் | பல்லி . |
| மனைகட்டுதல் | சொக்கட்டானில் ஓர் ஆட்டம் வெல்லுதல் . |
| மனைகோலுதல் | வீடு கட்டுதல் . |
| மனைச்சீட்டு | மனையின் விலையாவணம் . |
| மனைத்தாயம் | இல்லறவொழுக்கம் . |
| மனைப்படப்பு | வீட்டுக்கொல்லை . |
| மனைப்படப்பை | வீட்டுக்கொல்லை . |
| மனைப்பலி | மனையுறை தெய்வங்கட்கு இடும் பலி . |
| மனைமரம் | தேற்றாமரம் . |
| மனைமுதல் | மனைவி . |
| மனையறம் | இல்லறம் . |
| மனையாட்டி | மனைவி . |
| மனையாள் | மனைவி . |
| மனையிறை | வீட்டுவரி . |
| மனையுறைமகள் | திருமணமான பெண் . |
| மனையோள் | மனைவி . |
| மனைவழி | வீட்டுக்குரிய இடம் . |
| மனைவாழ்க்கை | இல்வாழ்க்கை . |
| மனைவி | இல்லாள் ; மருதநிலத்தின் தலைவி ; மனையையுடையாள் . |
| மனைவீடு | மனையும் வீடும் ; ஊர்நத்தம் . |
| மனைவேலி | வீட்டின் எல்லைச்சுவர் . |
| மனைவேள்வி | இல்லறம் . |
| மனோக்கியம் | இன்பமானது ; விரும்பப்படுந்தன்மை ; அழகுடைத்தன்மை . |
| மனோகதி | மனத்தின் வேகம் . |
| மனோகரம் | காண்க : மனோக்கியம் ; பலகாரவகை . |
| மனோசன் | மனத்தில் உதித்தவனான மன்மதன் . |
| மனோசியை | பிறவிப்பாடாணவகை . |
| மனோதண்டம் | மனத்தை ஒறுக்கை . |
| மனோதிடம் | காண்க : மனத்திடம்(ன்) . |
| மனோதைரியம் | காண்க : மனத்திடம்(ன்) . |
| மனோபலம் | காண்க : மனத்திடம்(ன்) . |
| மனோபவம் | எண்ணம் . |
| மனோபவன் | காண்க : மனோசன் . |
| மனோபாவம் | மனப்பாவிப்பு ; மனநிலை . |
| மனோபாவனை | மனப்பாவிப்பு ; மனநிலை . |
| மனோபு | காண்க : மனோசன் . |
| மனோபூசை | காண்க : மானதபூஜை . |
| மனோமயம் | ஐந்து உறையுள் ஒன்றான மனம் . |
| மனோரஞ்சிதம் | இன்பமானது ; ஒரு பூவகை . |
| மனோரதம் | காண்க : மனவிருப்பம் ; மனோபாவம்(னை) . |
| மனோரம்மியம் | மனநிறைவு ; இன்பமானது . |
| மனோராச்சியம் | மனோபாவனையில் எண்ணியது . |
| மனோராசி | சம்மதம் . |
| மனோலயம் | மனவொடுக்கம் . |
| மனோவதி | பிரமன் நகரம் . |
| மனோவாயு | பத்து வாயுக்களுள் மூச்சை நிகழ்விப்பது . |
| மனோவிகாரம் | மனநிலை ; அறிவுதிரிகை . |
| மனோவியாபாரம் | மனத்தின் தொழில் . |
| மனோவிருத்தி | மனத்தின் தொழில் ; வீட்டுச் செலவு . |
| மனோவேகம் | மனத்தின் வேகம்போன்ற விரைவு . |
| மனோற்சாகம் | உள்ளக்கிளர்ச்சி . |
| மனோற்பவன் | காண்க : மனோசன் . |
| மனோன்மணி | பார்வதி . |
| மா | ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ) ; விலங்கு ; குதிரை ; யானை ; குதிரை , பன்றி , யானை ஆகியவற்றின் ஆண் ; சிம்மராசி ; வண்டு ; அன்னம் ; விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம் ; மாமரம் ; அழைக்கை ; சீலை ; ஆணி ; துன்பம் பொறுக்கை ; ஓர் அசைச்சொல் ; திருமகள் ; செல்வம் ; கலைமகள் ; மாற்று ; ஒரு நிறை ; கீழ்வாயிலக்கத்துள் ஒன்று ; நிலவளவைவகை ; வயல் ; நிலம் ; வெறுப்பு ; கானல் ; ஆகாது என்னும் பொருளில் வரும் ஒரு வடசொல் ; பெருமை ; வலி ; அழகு ; கருமை ; நிறம் ; மாமைநிறம் ; அரிசி முதலியவற்றின் மாவு ; துகள் ; நஞ்சுக்கொடி ; அளவை ; இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல் . |
| மாக்கருவி | குதிரைச்சேணம் . |
| மாக்கல் | பலப்பம் முதலியவை செய்தற்குரிய கல் ; சவர்க்காரக்கல் . |
| மாக்கள் | மனிதர்கள் ; பகுத்தறிவிலார் ; குழந்தைகள் ; விலங்குகள் . |
| மாக்காப்பு | தெய்வத் திருமேனிகட்குச் சாத்தும் அரிசிமாச் சாத்துப்படி . |
| மாக்கிகம் | நிமிளை ; தேன் . |
| மாக்குளித்தல் | மகளிர் விளையாட்டுவகை . |
| மாக்கோலம் | நீர் சேர்த்த அரிசிமாவால் பூமியிலிடும் சித்திரங்கள் . |
| மாகத்தார் | தேவர் ; ஒரு குழுவினர் . |
| மாகதி | காண்க : திப்பிலி ; முல்லைவகை ; ஊசிமுல்லை ; சருக்கரை ; பிராகிருதமொழிவகை . |
| மாகந்தம் | மாமரம் . |
| மாகந்தி | நெல்லிமரம் ; காண்க : அமுக்கிரா . |
| மாகபதி | இந்திரன் . |
| மாகம் | மாசிமாதம் ; மகநாள் ; மேலிடம் ; வானம் ; துறக்கம் ; திக்கு ; மேகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 863 | 864 | 865 | 866 | 867 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனைக்கிழவன் முதல் - மாகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மனைவி, மனத்தின், மனோசன், மனநிலை, மனத்திடம், இன்பமானது, விலங்கு, தொழில், யானை, மாமரம், குதிரை, மனோபாவம், இல்லறம், வீட்டுக்கொல்லை, சொல், மனோக்கியம், மனப்பாவிப்பு

