முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மனப்பரிப்பு முதல் - மனைக்கிழத்தி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மனப்பரிப்பு முதல் - மனைக்கிழத்தி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மனப்பரிப்பு | காண்க : மனத்துயர் . |
| மனப்பரியயஞானம் | பிறர் கருத்துகள் , முற்பிறப்புகள் முதலியவற்றை அறியும் அறிவு . |
| மனப்பற்று | விருப்பு ; மனம் அழுந்தியிருக்கை . |
| மனப்பாங்கு | காண்க : மனநிலை . |
| மனப்பாடம் | கற்றதை மறதியின்றிச் சொல்லும் பாடம் . |
| மனப்பால்குடித்தல் | கை கூடாதவற்றைப்பற்றி நெடுக எண்ணி அகமகிழ்தல் . |
| மனப்பிடிப்பு | காண்க : மனப்பற்று . |
| மனப்பிரமை | மனத்தில் உண்டாகும் மயக்கம் . |
| மனப்பிரிப்பு | காண்க : மனக்கலக்கம் . |
| மனப்பூர்த்தி | மனநிறைவு ; முழுமனம் ; மிகுகளிப்பு ; மனநேர்மை . |
| மனப்பூர்வம் | மனநிறைவு ; முழுமனம் ; மிகுகளிப்பு ; மனநேர்மை . |
| மனப்பூரணம் | மனநிறைவு ; முழுமனம் ; மிகுகளிப்பு ; மனநேர்மை . |
| மனப்பூரிப்பு | மிகுகளிப்பு ; முழுமனநிறைவு . |
| மனப்பொருத்தம் | மனவொன்றிப்பு ; தன்மனத்துக்கு ஏற்றதாகை . |
| மனப்பொறுப்பு | மனஞ்சகிக்கை . |
| மனப்போக்கு | மனம்போகும் வழி . |
| மனம் | நெஞ்சம் ; எண்ணம் ; விருப்பம் ; இந்துப்பு . |
| மனம்பதிதல் | கருத்துவைத்தல் . |
| மனம்பேதித்தல் | கருத்துவேறுபடுதல் ; மனங்கலங்குதல் . |
| மனம்பொங்குதல் | மனம் அலைவுறுதல் ; சினங்கொள்ளல் . |
| மனம்பொருந்துதல் | இசைதல் ; ஏற்றுக்கொள்ளல் ; மனமொற்றுமையாதல் . |
| மனம்போனபோக்கு | சிந்தை சென்றவழியே செல்லுகை . |
| மனமகிழ்ச்சி | அகக்களிப்பு . |
| மனமடிவு | காண்க : மனச்சோர்வு ; மனமழிகை . |
| மனமலர்ச்சி | காண்க : மனமகிழ்ச்சி . |
| மனமாசு | மனக்குற்றம் . |
| மனமிடுக்கு | காண்க : மனத்திடம்(ன்) . |
| மனமிளகுதல் | மனமிரங்குதல் . |
| மனமிறுகுதல் | கடினமனமாதல் ; உலோபகுணங் கொள்ளுதல் . |
| மனமுடைதல் | காண்க : மனமுறிதல் . |
| மனமுளைதல் | மனம் வருந்துதல் . |
| மனமுறிதல் | துன்பத்தால் ஊக்கங்குன்றுதல் . |
| மனமுறிவு | ஊக்கமிழக்கை . |
| மனவிகற்பம் | மனவேறுபாடு . |
| மனவிகாரம் | மனத்திரிவு ; பைத்தியம் . |
| மனவிருப்பம் | ஆசை ; மனத்திற்கு உகந்தது . |
| மனவிழி | இசைப்பாட்டுவகை . |
| மனவு | மணி ; அக்குமணி ; சங்கு ; அரையிற் கட்டும் பட்டிகை ; புடைவை . |
| மனவுருக்கம் | மனமிளகுதல் . |
| மனவுறுதி | காண்க : மனத்திடம்(ன்) . |
| மனவூக்கம் | காண்க : மனத்திடம்(ன்) . |
| மனவெரிச்சல் | பொறாமை . |
| மனவெழுச்சி | உள்ளக்கிளர்ச்சி . |
| மனவேகம் | மனத்தின் வேகம்போன்ற விரைவு ; சினம் . |
| மனவொடுக்கம் | மனத்தை ஒருமுகப்படுத்துகை ; அமைதி ; அடக்கம் . |
| மனவொன்றிப்பு | மனவொற்றுமை ; மனத்தை ஒருமுகப்படுத்துகை . |
| மனனம் | சிந்திக்கை ; நினைவில் வைக்கை ; எல்லாமறிகை ; எண்ணம் . |
| மனா | அக்குமணி ; அரையிற் கட்டும் பட்டிகை . |
| மனாகுலம் | காண்க : மனத்துயர் . |
| மனாலம் | குங்குமமரம் ; காண்க : சாதிலிங்கம் . |
| மனாவு | அரையிற் கட்டும் பட்டிகை . |
| மனிச்சடித்தல் | பெருமையாகப் பேசுதல் . |
| மனிச்சர் | மனிதர் . |
| மனிச்சு | ஆண்தகைமை . |
| மனிசன் | மனிதன் . |
| மனிதகணம் | காண்க : மனுகுலம் ; உரோகிணி , பரணி , திருவாதிரை , பூரத்திரயம் , உத்தரத்திரயம் ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் . |
| மனிதசஞ்சாரம் | மனிதர் நடமாடுகை . |
| மனித்தன் | ஆண்மகன் . |
| மனிதன் | ஆண்மகன் . |
| மனிலாக்கொட்டை | காண்க : மணிலாக்கொட்டை . |
| மனிலாப்பயிறு | காண்க : மணிலாக்கொட்டை . |
| மனு | சூரியகுலத்து முதலரசனான ஏழாம் மனு ; அறநூல் பதினெட்டனுள் ஒன்றான மனுதருமசாத்திரம் ; அறநூல் ; மந்திரம் ; மனிதன் ; சோழமன்னர்களின் முன்னோன் ; விண்ணப்பம் ; சொல் ; அளவுவகை ; பதினான்கு ஆதி அரசர் . |
| மனுகுலம் | மனிதசாதி ; சூரியமரபு . |
| மனுசரிதன் | மனுநீதிப்படி அரசியல் புரிவோன் . |
| மனுசன் | ஆண்மகன் . |
| மனுடன் | ஆண்மகன் . |
| மனுதார் | விண்ணப்பஞ் செய்வோன் . |
| மனுதாரி | விண்ணப்பஞ் செய்பவள் . |
| மனுநெறி | அளவுவகை ; நீதி . |
| மனுப்படுதல் | பூப்படைதல் ; பசு முதலியன சினையாதல் ; பயன்படுதல் . |
| மனுமக்கள் | மனிதர்கள் . |
| மனுமகன் | உயர்குடியிற் பிறந்தவன் ; நாணயமானவன் . |
| மனுவர் | கொல்லர் ; மனிதர் . |
| மனை | வீடு ; வீடுகட்டுதற்குரிய நிலம் ; நில அளவுவகை ; குடும்பம் ; மனைவி ; இல்வாழ்க்கை ; சூதாடுபலகையின் அறை ; நற்றாய் . |
| மனைக்கட்டு | வீடுகட்டுதற்குரிய இடம் . |
| மனைக்கிழத்தி | வீட்டுக்குரியவளான மனைவி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 862 | 863 | 864 | 865 | 866 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனப்பரிப்பு முதல் - மனைக்கிழத்தி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஆண்மகன், மனம், மிகுகளிப்பு, கட்டும், மனத்திடம், அரையிற், மனிதன், அளவுவகை, மனிதர், முழுமனம், பட்டிகை, மனநேர்மை, மனநிறைவு, மனுகுலம், விண்ணப்பஞ், மனைவி, வீடுகட்டுதற்குரிய, அறநூல், மணிலாக்கொட்டை, அக்குமணி, எண்ணம், மனவொன்றிப்பு, மனப்பற்று, மனத்துயர், மனமகிழ்ச்சி, மனமிளகுதல், மனத்தை, சொல், மனமுறிதல், ஒருமுகப்படுத்துகை

