தமிழ் - தமிழ் அகரமுதலி - மாட்சி முதல் - மாணவன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மாட்சி | பெருமை ; விளக்கம் ; இயல்பு ; அழகு . |
| மாட்சிமை | பெருமை . |
| மாட்டடி | மாட்டின் அடிவைப்பு ; கடுமையான அடி . |
| மாட்டல் | மகளிர் காதணியிலிருந்து தலைமயிரில் மாட்டும் ஓரணி . |
| மாட்டாங்கோல் | மாட்டையோட்டுங்கோல் . |
| மாட்டாதார் | வல்லமையில்லாதார் . |
| மாட்டார் | வல்லமையில்லாதார் . |
| மாட்டிக்கொள்ளுதல் | சிக்கிக்கொள்ளுதல் . |
| மாட்டிவிடுதல் | தொழுக்கட்டை முதலியவற்றிற் சேரவிணைத்தல் ; அகப்படுத்துதல் . |
| மாட்டிறக்கம் | ஆற்றிலே மாடிறக்குந் துறை . |
| மாட்டு | அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற் கொண்டுகூட்டிய சொல் முடிவுகொள்ளும் முறை ; அடி ; சொல் . |
| மாட்டுக்காரன் | மாட்டிற்குரியவன் ; மாடுமேய்ப்பவன் . |
| மாட்டுக்கிடை | மாட்டுமந்தை ; பசுத்தொழுவம் . |
| மாட்டுக்கொட்டகை | மாடு கட்டும் இடம் . |
| மாட்டுக்கொட்டில் | மாடு கட்டும் இடம் . |
| மாட்டுத்தனம் | விலங்குத்தன்மை . |
| மாட்டுத்தும்பு | மாடு கட்டுவதற்கான கவையுள்ள புரிக்கயிறு . |
| மாட்டுதல் | இணைத்தல் ; தொடுத்தல் ; செருகுதல் ; செலுத்துதல் ; உட்கொள்ளுதல் ; கற்றுவல்லனாதல் ; அடித்தல் ; விளக்கு முதலியன கொளுத்துதல் ; எரித்தல் ; கூடியதாதல் ; வலிபெறுதல் ; மாளச்செய்தல் ; அழித்தல் ; போக்குதல் . |
| மாட்டுப்பறங்கிக்காய் | காண்க : சாம்பற்பூசணி . |
| மாட்டுப்புத்தி | மிகுந்த அறிவுக்குறைவு . |
| மாட்டுப்பெண் | மகனின் மனைவி . |
| மாட்டுப்பொங்கல் | தைமாதம் இரண்டாம் நாள் மாட்டுக்கு நன்றிசெலுத்தப் பொங்கலிடுவதான பண்டிகை . |
| மாட்டுவாரம் | குடியானவன் உதவும் உழவு மாட்டுக்குத் தகக்படி மேல்வாரக்காரன் அவனுக்குக் கொடுக்கும் விளைச்சலின் பங்கு . |
| மாட்டுவித்தல் | அழியச் செய்தல் ; இணையும்படி செய்தல் . |
| மாட்டெறிதல் | ஏறிட்டுக் கூறுதல் ; ஆவணத்தின் மேற்புறத்தே விவரக்குறிப்பு எழுதுகை . |
| மாட்டேறு | முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்றானதும் ஒரு சூத்திரத்தில் கூறிய விதியை அதனையொத்த சூத்திரங்கட்கும் இணைத்துக் கொள்வதுமான உத்தி . |
| மாடக்குழி | சுவரில் உள்ளடங்கிய புரை . |
| மாடகம் | யாழின் முறுக்காணி . |
| மாடகூடம் | காண்க : மாடிவீடு . |
| மாடநிலை | உபரிகை . |
| மாடப்புறா | ஒரு புறாவகை . |
| மாடம் | உபரிகையுள்ள வீடு ; வீடு ; குடிசை ; காண்க : மாடக்குழி ; உழுந்து ; ஒரு நிறை ; மேட்டிடத்தில் குறுகிய வழியுள்ளதாகக் கோச்செங்கணான் கட்டிய சிவாலயம் . |
| மாடமாளிகை | காண்க : மாடகூடம் . |
| மாடவீதி | கோயிலைச் சுற்றியுள்ள தெரு . |
| மாடன் | ஒரு சிறுதெய்வம் ; மூடன் . |
| மாடாபத்தியம் | மடத்தின் தலைமை அதிகாரம் ; கோயில் விசாரணை . |
| மாடி | உபரிகை ; இக்கட்டு ; கோபம் ; புடைவையோரம் ; ஓர் ஊர்த்தேவதை . |
| மாடியம் | காப்புச்சட்டை , கவசம் . |
| மாடிவீடு | உபரிகையுள்ள வீடு . |
| மாடு | எருது ; பக்கம் ; இடம் ; ஏழனுருபு ; செல்வம் ; பொன் ; சீதனம் ; அகன்மணி . |
| மாடுசாய்த்தல் | மாடுகளை ஒருசேர ஓட்டிச் செலுத்துதல் . |
| மாடுசாய்தல் | மாடுகள் ஒருசேர மாலையில் வீடு நோக்கி வருகை . |
| மாடுவரும்வேளை | மேய்ச்சலானபின் மாடுகள் திரும்பிவரும் காலம் ; மாலைவேளை . |
| மாடை | பொன் , அரை வராகன் ; ஒரு பழைய நாணயவகை ; மாட்டுக்கொம்பு முதலியன கீழ்நோக்கி வளைந்திருத்தல் . |
| மாடைக்கொம்பன் | கீழ்நோக்கி வளைந்த கொம்புள்ள மாடு . |
| மாடோட்டும்வேளை | மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் காலைவேளை . |
| மாண் | மாட்சிமை ; மடங்கு ; மாணவன் ; பிரமசாரி ; குள்ளமானவர் . |
| மாண்டல் | மாட்சிமைப்படுதல் ; இறத்தல் . |
| மாண்டவர் | மாட்சிமையுள்ளவர் ; இறந்தவர் . |
| மாண்டார் | மாட்சிமையுள்ளவர் ; இறந்தவர் . |
| மாண்பு | பெருமை ; அழகு ; நன்மை ; மாட்சிமை . |
| மாணம் | மாட்சிமை . |
| மாணல் | மாட்சிமை ; நன்மை . |
| மாணவ்வியம் | பிள்ளைத்தன்மை ; மாணவர்கூட்டம் . |
| மாணவகம் | கல்வி . |
| மாணவகன் | பிரமசாரி ; மாணாக்கன் ; எட்டு முதல் பதினாறு ஆண்டிற்குட்பட்ட சிறுவன் ; அறிவீனன் . |
| மாணவம் | பிரமசரியம் ; பதினாறு கோவையுள்ள முத்தாரம் . |
| மாணவன் | பிரமசாரி ; மாணாக்கன் ; படிக்கும் சீடன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 865 | 866 | 867 | 868 | 869 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாட்சி முதல் - மாணவன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மாடு, மாட்சிமை, காண்க, வீடு, இடம், சொல், பிரமசாரி, பெருமை, மாடுகள், ஒருசேர, மாடுகளை, கீழ்நோக்கி, மாட்சிமையுள்ளவர், மாணாக்கன், பதினாறு, நன்மை, இறந்தவர், பொன், மாணவன், மாடிவீடு, கட்டும், கிடப்பினும், வல்லமையில்லாதார், அழகு, செலுத்துதல், முதலியன, உபரிகை, மாடகூடம், மாடக்குழி, செய்தல், உபரிகையுள்ள

