தமிழ் - தமிழ் அகரமுதலி - மன் முதல் - மனக்கசிவு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மன் | ஓர் அசைநிலை ; எதிர்காலங் காட்டும் இடைநிலை ; ஒழியிசைக்குறிப்பு ; பிறிதொன்றாகைக் குறிப்பு ; மிகுதிக்குறிப்பு ; ஆக்கக் குறிப்பு ; கழிவுக்குறிப்பு ; நிலைபேற்றுக்குறிப்பு ; ஒரு பெயர்விகுதி ; அரசன் ; வீரன் ; தலைவன் ; கணவன் ; உத்தரட்டாதிநாள் ; பெருமை ; இழிவு ; மந்திரம் ; மணங்கு . |
| மன்பது | மக்கட்பரப்பு . |
| மன்பதை | காண்க : மன்பது ; படை . |
| மன்மகளிர் | அரசனால் தலைக்கோல் பெற்ற ஆடல்மகளிர் . |
| மன்மத | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தொன்பதாம் ஆண்டு . |
| மன்மததந்திரம் | மன்மதனுடைய மலர்க்கணை . |
| மன்மதபாணம் | காண்க : சாதிமல்லிகை ; மன்மததந்திரம் . |
| மன்மதன் | காமன் . |
| மன்மதன்கணை | மன்மதனின் மலரம்பு ; மாமரம் . |
| மன்மதோபாலம்பனம் | காமனைப் பழிக்கை . |
| மன்மம் | தீராப்பகை ; வஞ்சினம் . |
| மன்ற | ஓர் அசைச்சொல் ; உறுதியாக ; தெளிவாக ; மிக . |
| மன்றகம் | அவை . |
| மன்றம் | அவை : கழகம் ; வழக்குமன்றம் ; ஊருக்கு நடுவாயுள்ள மரத்தடிப் பொதுவிடம் ; காண்க : செண்டுவெளி ; வெளியிடம் ; போர்க்களப் பரப்பின் நடுவிடம் ; சிதம்பரம் ; வீடு ; பசுவின் தொழுவம் ; நெடுந்தெரு ; மெய்ம்மை ; உறுதி ; மணம் . |
| மன்றல் | திருமணம் ; மணம் ; புணர்ச்சி ; நெடுந்தெரு ; பாலைப்பண்வகை . |
| மன்றவாணன் | தில்லைச் சிவபிரான் . |
| மன்றன் | சிவபிரான் . |
| மன்றாட்டம் | வேண்டுகோள் ; தொந்தரவு . |
| மன்றாட்டு | வேண்டுகோள் . |
| மன்றாடி | சிவபெருமான் ; கூத்தப்பிரான் ; பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன் ; சபையில் வழக்காடுபவன் ; சில சாதியாரின் பட்டப்பெயர் ; ஆட்டிடையன் . |
| மன்றாடுதல் | குறையிரந்து வேண்டுதல் ; வழக்காடுதல் ; பிறர்க்காக வழக்கெடுத்துரைத்தல் . |
| மன்றில் | வாயில்முற்றம் . |
| மன்று | சபை ; தில்லையிலுள்ள பொன்னம்பலம் ; நீதிமன்றம் ; பசுத்தொழுவம் ; பசுமந்தை ; மரத்தடிப் பொதுவிடம் ; தோட்டத்தின் நடு ; நாற்சந்தி ; மணம் . |
| மன்றுதல் | தண்டஞ்செய்தல் , ஒறுத்தல் . |
| மன்றுபடுதல் | வெளிப்படுதல் . |
| மன்றுபாடு | தருமாசனத்தின் முன் அபராதமாகக் கொடுக்கும் பொருள் . |
| மன்றுளாடி | சிவபிரான் . |
| மன்னகுமரன் | இளவரசன் . |
| மன்னர்பின்னர் | வணிகர் . |
| மன்னர்பின்னோர் | வணிகர் . |
| மன்னர்மன்னவன் | பேரரசன் , சக்கரவர்த்தி ; துரியோதனன் . |
| மன்னர்விழைச்சி | அரசனால் நுகர்தற்குரியது . |
| மன்னல் | நிலைபேறு ; வலிமை ; பெருமை ; உயர்ச்சி ; விடாமுயற்சி . |
| மன்னவன் | காண்க : மன்னன் ; இந்திரன் . |
| மன்னன் | அரசன் ; எப்பொருட்கு மிறைவன் ; கணவன் ; தலைவன் ; முப்பத்திரண்டுக்குமேல் நாற்பத்தெட்டு வயதுக்குட்பட்ட ஆடவன் ; உத்தரட்டாதிநாள் . |
| மன்னாப்புக்குற்றவாளி | அரசாங்கத்தாரால் மன்னிப்புப்பெற்றுச் சாட்சிகூறுங் குற்றவாளி . |
| மன்னார் | பகைவர் . |
| மன்னாவுலகம் | காண்க : மன்னுலகம் . |
| மன்னி | அண்ணன் மனைவி . |
| மன்னித்தல் | குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல் . |
| மன்னிப்பு | குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல் . |
| மன்னியர் | மதிக்கத்தக்கவர் . |
| மன்னிறைதருதல் | அரசனுக்குரிய வரியைத் தருதல் . |
| மன்னினை | வரிவிலக்கு . |
| மன்னுதல் | நிலைபெறுதல் ; தங்குதல் ; பொருந்துதல் ; விடாது முயலுதல் ; உறுதியாய் நிற்றல் ; அடுத்தல் ; மிகுதல் ; ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொள்ளுதல் . |
| மன்னும் | பெரும்பான்மையும் , ஓர் இடைச்சொல் . |
| மன்னுமான் | கடவுள் . |
| மன்னுயிர் | நிலைபெற்ற உயிர் ; விலங்குச்சாதி ; மானிடச்சாதி ; ஆன்மா . |
| மன்னுயிர்முதல்வன் | கடவுள் . |
| மன்னுலகம் | துறக்கம் . |
| மன்னுலகு | துறக்கம் . |
| மன்னை | தொண்டை ; கோபம் ; கதுப்பு ; காண்க : மன்னைக்காஞ்சி . |
| மன்னைக்காஞ்சி | இறந்தவனைப்பற்றிச் சிறப்பித்து ஏனையோர் இரங்கிக் கூறும் புறத்துறை . |
| மன்னைப்பிடி | தொண்டையை இறுகப்பிடிக்கை . |
| மன்னைப்பிடித்தல் | தொண்டையைப் பிடித்தல் ; ஒருவனைத் தாங்கிக்கேட்டல் . |
| மன | மிகவும் ; வினைமுற்று வினையெச்சங்கட்கு இறுதியாக வரும் இடைச்சொல் . |
| மனக்கசப்பு | வெறுப்பு . |
| மனக்கசிவு | காண்க : மனவுருக்கம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 860 | 861 | 862 | 863 | 864 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மன் முதல் - மனக்கசிவு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சிவபிரான், மணம், மன்னுலகம், குற்றத்தைப், மன்னன், வணிகர், பிறர்க்காக, பொறுத்துக், கொள்ளல், மன்னைக்காஞ்சி, துறக்கம், கடவுள், இடைச்சொல், வேண்டுகோள், அரசன், தலைவன், மன்பது, பெருமை, உத்தரட்டாதிநாள், அரசனால், மன்மததந்திரம், குறிப்பு, நெடுந்தெரு, பொதுவிடம், மரத்தடிப், கணவன்

