தமிழ் - தமிழ் அகரமுதலி - மண்டலம் முதல் - மண்ணறை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மண்டலம் | நாடு ; வட்டம் ; பூமி ; வட்டவடிவம் ; சூரியவீதி ; நாட்டுப்பகுதி ; பாம்பு முதலியவற்றின் சுற்று ; வட்டவடிவமான படைவகுப்புவகை ; நாட்டின் பெரும்பகுதி ; ஊர் ; மந்திரச் சக்கரம் ; தேசிக்கூத்தின்வகை ; 40 , 41 , அல்லது 45 நாள்கொண்ட காலஅளவு ; குதிரை நடைவகை ; கூட்டம் ; பரிவேடம் ; அபிநயவகை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; அடையாளம் ; வில்லோர் நிலையுள் ஒன்று . |
| மண்டலம்போடுதல் | பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல் ; சுற்றிச்சுற்றி வட்டமிடுதல் ; சக்கரம் முதலியன வரைதல் ; காண்க : மண்டலமிடுதல் . |
| மண்டலமழை | எங்கும் பொழியும் மழை . |
| மண்டலமாக்கள் | அரசர் ; காண்க : மண்டிலமாக்கள் . |
| மண்டலமிடுதல் | காண்க : மண்டலம்போடுதல் ; நீர் தெளித்துத் தடவி இடம் பண்ணுதல் ; ஒரு மண்டலகாலம் வழிபடுதல் ; பரிவேடங் கொள்ளுதல் . |
| மண்டலவந்தாதி | ஈற்றடியிறுதியும் முதலடி முதலும் ஒன்றாகவரும் அந்தாதிவகை . |
| மண்டலவியூகம் | வட்டமாக அமைக்கும் படைவகுப்பு . |
| மண்டலாகாரம் | வட்டவடிவம் . |
| மண்டலி | ஒரு பாம்புவகை ; காட்டுப்பூனை ; ஒரு எலிவகை ; நாய் ; கூட்டம் ; பூமி . |
| மண்டலிகன் | காண்க : மண்டல¦கன் . |
| மண்டலிசிதம் | கடுகு ; தேன் ; வியர்வை . |
| மண்டலித்தல் | காலை வளைத்து வட்டமாக்குதல் ; காண்க : மண்டலம்போடுதல் ; வளைத்தல் ; இசைத்தல் . |
| மண்டல¦கன் | அரசன் ; நாட்டின் பகுதியை ஆளும் ஆதிகாரி . |
| மண்டலேச்சுவரன் | அரசன் ; சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் எந்திரம் . |
| மண்டலேசன் | அரசன் ; சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் எந்திரம் . |
| மண்டலேசுரன் | அரசன் ; சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் எந்திரம் . |
| மண்டா | மீன் , பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டிவகை . |
| மண்டி | காலை முடக்கி முழந்தாளால் நிற்கை ; வண்டல் ; தானியம் மிகுதியாக விற்கும் இடம் ; மொத்தவாணிகம் செய்யும் பண்டசாலை . |
| மண்டிகை | அப்பவருக்கம் . |
| மண்டிபோடுதல் | முழங்கால் முட்டிமேல் நிற்றல் . |
| மண்டியிடுதல் | முழங்கால் முட்டிமேல் நிற்றல் . |
| மண்டிரவல் | இரவலாக வாங்கிய நகையை வறுமையால் அடகுவைக்கை . |
| மண்டிலக்கடவுள் | சந்திரன் . |
| மண்டிலநிலை | தேசிக்கூத்தின்வகை ; வில்லோர் நிலையுள் ஒன்று . |
| மண்டிலம் | வட்டம் ; வட்டவடிவம் ; வட்டமாயோடுகை ; குதிரை ; குதிரைநடைவகை ; பூமி ; சூரியன் ; சந்திரன் ; பரிவேடம் ; வானம் ; கண்ணாடி ; நாட்டின் பெரும்பகுதி ; ஊர் ; தேசிக்கூத்தின்வகை . |
| மண்டிலமாக்கள் | நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள் . |
| மண்டிலயாப்பு | நாற்சீரடிச் செய்யுள் . |
| மண்டிவியாபாரம் | மொத்த வாணிகம் . |
| மண்டு | செறிவு ; மிகுதி ; மூடன் ; பொதுவிடம் . |
| மண்டுகால் | முட்டுக்கால் . |
| மண்டுதல் | நெருங்குதல் ; விரைந்து செல்லுதல் ; திரளுதல் ; கடுமையாதல் ; மிக ஒளிவிடுதல் ; அதிகமாதல் ; ஈடுபடுதல் ; செலுத்துதல் ; நெருங்கித் தாக்குதல் ; நிரம்ப உண்ணுதல் ; சேரவிணைத்தல் ; மூண்டு பொருதல் ; கவர்தல் ; தாங்குதல் . |
| மண்டூகம் | தவளை ; மூடன் ; காண்க : மண்டூரம் . |
| மண்டூகை | விலைமகள் . |
| மண்டூரசிந்தூரம் | இரும்புக்கிட்டத்தாற் செய்த செந்நிறப் பொடி . |
| மண்டூரம் | இரும்புக்கிட்டம் . |
| மண்டை | தலை ; தலையோடு ; தென்னை ; முதலியவற்றின் தலைப்பக்கம் ; இரப்போர் கலம் ; கலம் ; ஓரளவை ; விலைமகள் . |
| மண்டைக்கண் | குழிந்த கண் . |
| மண்டைக்கரப்பான் | தலையில் வரும் கரப்பான் நோய்வகை . |
| மண்டைக்கருவம் | மிகுசெருக்கு . |
| மண்டைக்கனம் | நீர்க்கோவையால் தலை கனத்திருக்கை ; காண்க : மண்டைக்கருவம் . |
| மண்டைக்குடைச்சல் | தலைநோவுவகை . |
| மண்டைச்சூலை | ஒரு நோய்வகை . |
| மண்டைப்பாணர் | உண்கலம் ஏந்தி இரக்கும் பாணர்வகையார் . |
| மண்டைப்பீனசம் | பீனசநோய்வகை . |
| மண்டையோடு | தலையோடு , கபாலம் . |
| மண்ணகம் | நிலவுலகம் . |
| மண்ணகமடந்தை | நிலமகள் . |
| மண்ணங்கட்டி | காண்க : மண்ணாங்கட்டி . |
| மண்ணசை | காண்க : மண்ணாசை . |
| மண்ணடித்தல் | மண்கொணர்ந்து கொட்டுதல் ; மண்மேடிடுதல் ; சீர்கொடுத்தல் . |
| மண்ணம் | நீற்றிய சுண்ணாம்பு . |
| மண்ணரிநார் | குயவன் வனைந்த கலங்களை அரியுங் கயிறு . |
| மண்ணரிவாளன் | குயவன் . |
| மண்ணரைத்தல் | சோம்பியிருத்தல் . |
| மண்ணவர் | மனிதர் . |
| மண்ணறை | மண்பூச்சு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 839 | 840 | 841 | 842 | 843 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மண்டலம் முதல் - மண்ணறை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நாட்டின், அரசன், எந்திரம், மத்தியகும்பத்தின், சிவதீட்சையில், மண்டலம்போடுதல், கீழிடப்படும், ஒன்று, தேசிக்கூத்தின்வகை, வட்டவடிவம், பூமி, முழங்கால், நோய்வகை, குயவன், முட்டிமேல், மண்டைக்கருவம், நிற்றல், மண்டூரம், விலைமகள், ஆளும், மூடன், தலையோடு, சந்திரன், கலம், இடம், குதிரை, கூட்டம், பரிவேடம், சக்கரம், பெரும்பகுதி, பாம்பு, முதலியவற்றின், வில்லோர், நிலையுள், மண்டல¦கன், காலை, வட்டம், மண்டிலமாக்கள், முதலியன, மண்டலமிடுதல், பகுதியை

