தமிழ் - தமிழ் அகரமுதலி - மடமான் முதல் - மடியேற்றல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மடமான் | பெண் . |
| மடமை | பேதைமை . |
| மடல் | பனை முதலியவற்றின் ஏடு ; தோண்மேலிடம் ; கை ; ஏற்றக்கழி ; பனங்கருக்கு ; காண்க : மடன்மா ; உலாமடல் ; பூவிதழ் ; கிளை ; சிறுவாய்க்கால் ; கண்ணிமை ; திருநீறும் சந்தனமும் வைக்குங் கலம் ; சோளக்கதிர் முதலியவற்றின் மேலுறை ; காதுமடல் ; ஆயுதவலகு . |
| மடலவிழ்தல் | இதழ்விரிதல் . |
| மடலி | இளம்பனை . |
| மடலூர்தல் | தலைவன் தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலால் ஆன குதிரையின் மீது ஏறுதல் . |
| மடலேறுதல் | தலைவன் தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலால் ஆன குதிரையின் மீது ஏறுதல் . |
| மடவரல் | பெண் ; மடப்பம் . |
| மடவள் | அறிவிலாள் . |
| மடவளாகம் | கோயிலைச் சூழ்ந்துள்ள தெரு . |
| மடவன் | அறிவிலான் . |
| மடவாதல் | மடப்பம் வருதல் . |
| மடவாயம் | மகளிர் விளையாட்டுக் கூட்டம் . |
| மடவார் | பெண்டிர் ; மூடர் . |
| மடவாள் | பெண் . |
| மடவியர் | காண்க : மடவார் . |
| மடவை | கவைக்கால் ; துடுப்பு ; காண்க : தணக்கு ; மீன்வகை . |
| மடவைக்கெண்டை | ஒரு மீன்வகை . |
| மடவோர் | காண்க : மடவார் . |
| மடற்பனை | கருக்குமட்டை விழாத ஆண்பனை . |
| மடற்பாளை | பூம்பாளை . |
| மடன் | அறியாமை ; அறிவிலான் ; கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை . |
| மடன்மா | காதலித்த தலைவியைப் பெறா விடத்துத் தலைவன் ஏறுதற்பொருட்டுப் பனங்கருக்காற் குதிரைபோல் செய்த ஊர்தி . |
| மடா | பாண்டவகை . |
| மடாதிபத்தியம் | கோயில் அல்லது மடத்தின் ஆளுகை . |
| மடாரெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| மடாலயம் | முனிவர் வாழுமிடம் ; பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியார் வாழும் இடம் . |
| மடி | மடங்குகை ; வயிற்றுமடிப்பு ; வயிறு ; அரை ; மடித்த தொடையின் மேற்பாகம் ; ஆடை ; தாள் முதலியவற்றின் மடிப்பு ; பை போன்ற முந்திச்சுருக்கு ; வலைவகை ; பசு முதலியவற்றின் முலையிடம் ; அடக்கம் ; தனிமை ; சோம்பல் ; சோம்பலுடையவன் ; நோய் ; மீன்வலையோடு சேர்ந்த பெரும்பை ; கேடு ; பகை ; பொய் ; தீநாற்றம் ; ஆடைவகை ; தீட்டில்லா நிலை ; இரட்டைக் கட்டுமரம் ; சோறு ; தாழை ; தாழைவிழுது ; மடங்கு . |
| மடிகட்டுதல் | ஆசார உடை அணிதல் ; ஆடையை உலர்த்தல் ; மணப்பெண்ணின் மடியில் வெற்றிலை பாக்கு பழங்கட்டுதல் ; அதிகமாக எடுத்துக்கொள்ளுதல் . |
| மடிச்சீலை | ஆசார உடை ; கோவணம் ; மடியிற் கட்டிக்கொள்ளும் பணப்பை . |
| மடிசஞ்சி | புல் அல்லது கம்பளியாலான பை . |
| மடித்தல் | மடக்குதல் ; வளைத்தல் ; பேச்சில் மடங்க வடித்தல் ; அழித்தல் ; உழக்குதல் . |
| மடிதடவுதல் | பிறன்பொருளைக் கவர்தல் ; ஏதேனும் மறைத்து வைத்திருப்பதைப் பார்க்க மடியை ஆராய்தல் . |
| மடிதல் | மடங்குதல் ; நுனிமழுங்குதல் ; தலைசாய்தல் ; வீழ்தல் ; வாடுதல் ; சுருளுதல் ; முயற்சி அறுதல் ; தூங்குதல் ; சுருங்குதல் ; ஊக்கங்குறைதல் ; அழிதல் ; சாதல் ; தானியங் கேடுறுதல் ; திரண்டுசெல்லுதல் ; கொப்புளம் உடைதல் ; மறத்தல் . |
| மடிதாறு | உடையின் பின்கச்சம் . |
| மடிப்பணம் | கைப்பணம் . |
| மடிப்பிச்சை | மடிச்சீலையில் வாங்கும் பிச்சை ; தாழ்மையாகக் கேட்கும் இரத்தற்பொருள் . |
| மடிப்பிளை | வங்கமணல் . |
| மடிப்பினை | வங்கமணல் . |
| மடிப்பு | ஒன்றைப் பல பகுதிகளாக மடித்திருப்பது ; மடித்துத் தைக்கும் தையல் ; மடிப்படையாளம் ; மோசம் ; தொந்திமடிப்பு ; இருபோகம் . |
| மடிப்புக்காரன் | வஞ்சகன் . |
| மடிப்புடைவை | மடித்தலுடைய ஆடை ; மகளிரின் ஆசாரச் சீலை . |
| மடிப்புப்பேச்சு | கவர்பொருள் படும் சொல் . |
| மடிப்பை | அடிப்பை ; காண்க : மடிசஞ்சி ; அரை மடியிற் கட்டிய பை . |
| மடிபிசைதல் | பால் சுரக்கும்படியாகப் பசுவின் மடியைத் தடவுதல் . |
| மடிபிடி | மடிச்சீலையிற் பிடிக்கும் பிடி ; கட்டாயப்படுத்தல் ; சண்டை . |
| மடிபிடித்தல் | கட்டாயப்படுத்தல் ; வழக்காடுதல் ; வலுவிற் சண்டைக்கு அழைத்தல் . |
| மடிமாங்காய்போடுதல் | பொய்க்குற்றஞ் சாட்டுதல் ; இலஞ்சங் கொடுத்தல் . |
| மடிமாங்காயிடுதல் | பொய்க்குற்றஞ் சாட்டுதல் ; இலஞ்சங் கொடுத்தல் . |
| மடிமை | சோம்பல் . |
| மடியில் | கூடாரம் . |
| மடியிறக்குதல் | ஈனுதற்கு முன் பசுவின் மடி பருத்தல் . |
| மடியுறை | விம்மிதம் . |
| மடியேந்துதல் | இரத்தல் . |
| மடியேற்றல் | இரத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 837 | 838 | 839 | 840 | 841 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மடமான் முதல் - மடியேற்றல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முதலியவற்றின், மடவார், காதலித்த, தலைவன், பெண், மடியிற், மடிசஞ்சி, மடியில், வங்கமணல், சோம்பல், ஆசார, சாட்டுதல், கொடுத்தல், இரத்தல், இலஞ்சங், மடிப்பு, கட்டாயப்படுத்தல், பொய்க்குற்றஞ், பசுவின், அறிவிலான், அடைதல், வேண்டிப், தலைவியை, தான், மடன்மா, பனைமடலால், குதிரையின், சொல், மீன்வகை, மடப்பம், ஏறுதல், மீது, அல்லது

