தமிழ் - தமிழ் அகரமுதலி - மடிவிடுதல் முதல் - மண்டலநிலை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மடிவிடுதல் | காண்க : மடியிறக்குதல் . |
| மடிவித்தல் | கொல்லுதல் ; முனைமழுங்கச் செய்தல் . |
| மடிவு | சோம்பல் ; ஊக்கக்குறைவு அழிவு ; சாவு . |
| மடிவை | தழை . |
| மடு | நீர்நிலை ; குளம் ; ஆற்றிடைப் பள்ளம் . |
| மடுத்தல் | உண்ணுதல் ; நிறைத்தல் ; சேர்த்தல் ; அடக்கிக்கொள்ளுதல் ; ஊட்டுதல் ; தீமூட்டுதல் ; அமிழ்த்துதல் ; குத்துதல் ; மோசம் பண்ணுதல் ; விழுங்குதல் ; மயக்குதல் ; செலுத்துதல் ; இடையூறு எதிர்ப்படுதல் . |
| மடுப்படுத்தல் | ஆழ்ந்திருத்தல் . |
| மடுப்பு | அடைவு ; நிறைப்பு ; உண்கை ; மோசஞ் செய்கை ; ஏமாற்றம் ; கேடு ; காண்க : மடிப்பு . |
| மடுவங்கரை | குளக்கரை . |
| மடை | சமையல்வேலை ; சோறு ; தெய்வபலி ; மதகு ; தொளை ; மதகுபலகை ; நீரணை ; ஓடை ; அணிகலக் கடைப்பூட்டு ; பழைய நாணயவகை ; ஆயுதமூட்டு ; ஆணி ; பகுதி . |
| மடைக்கடல் | ஆறு கடலொடு கலக்கும் இடம் . |
| மடைக்கலம் | சமையற்பாண்டம் . |
| மடைகோலுதல் | வயலுக்கு நீர்பாய்ச்சுதல் . |
| மடைத்தலை | மதகு . |
| மடைத்தனம் | காண்க : மடத்தனம் . |
| மடைத்தொழில் | சமையல்வேலை . |
| மடைத்தொழிலோன் | சமையற்காரன் . |
| மடைநூல் | அட்டிற்கலை . |
| மடைப்பள்ளி | கோயில் முதலியவற்றின் அடுக்களை ; ஒரு சாதி ; அரண்மனைச் சரக்கறைத் தலைவன் . |
| மடைபரவுதல் | அலங்கார நிவேதனஞ் செய்தல் . |
| மடைமாறி | புரட்டுக்காரன் . |
| மடைமுகம் | மதகு ; காண்க : மடைக்கடல் . |
| மடையடைத்தல் | நீர்பாயுங் காலை மூடுதல் ; தீர்மானமான விடை சொல்லுதல் . |
| மடையன் | சமையற்காரன் ; நீர்மடை திறப்போன் ; அறிவிலான் . |
| மடையான் | நீர்மடை திறப்போன் ; ஒரு பறவை வகை ; உள்ளான்வகை . |
| மண் | நிலவுலகம் ; நீராடுங்கால் பூசிக்கொள்ளும் பத்துவகை மண் ; பூமி ; புழுதி ; காண்க : திருமண் ; தரை ; அணு ; சுண்ணச்சாந்து ; மத்தளம் முதலியவற்றில் பூசும் மார்ச்சனை ; மணை ; வயல் ; கழுவுகை ; ஒப்பனை ; மாட்சிமை . |
| மண்கட்டுதல் | புற்றுக்கட்டுதல் ; உலோகங்களை உருக்குவதற்காகக் கருக்கட்டுதல் . |
| மண்கணை | குடமுழவுவகை ; முழவுப்பொது . |
| மண்கல் | செங்கல் ; வெள்ளைச் சுக்கான்கல் . |
| மண்கிடங்கு | மண்ணெடுத்த குழி ; கல்லறை ; களிமண்ணில் தோண்டிய கட்டப்படாத கிணறு ; மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு . |
| மண்கிணறு | மண்ணெடுத்த குழி ; கல்லறை ; களிமண்ணில் தோண்டிய கட்டப்படாத கிணறு ; மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு . |
| மண்குகை | நிலவறை ; குளவிக்குகை , மண்ணாலான குகை . |
| மண்குத்துநோவு | மகப்பேற்றுக்குப் பின் உண்டாகும் நோவு . |
| மண்கும்பம் | மண்ணாலான மேடு . |
| மண்குளித்தல் | புழுதியாடுதல் . |
| மண்கூட்டாளன் | குயவன் . |
| மண்கொட்டு | காண்க : மண்வெட்டி . |
| மண்கொத்தளம் | மண்ணாற் செய்த மதிலுறுப்பு . |
| மண்சாந்து | குழைத்த சேறு . |
| மண்சிலை | கற்காவி . |
| மண்சீலை | மருந்தைப் புடமிடக் கலத்தின்மேல் சுற்றும் மண்ணூட்டிய துணி . |
| மண்செய்கை | காண்க : மண்வேலை . |
| மண்சேய் | நிலமகள் மகனாகிய செவ்வாய் . |
| மண்டக்கம் | முத்துக்குளிப்பவர்களை இழுக்குங் கயிறு . |
| மண்டக்கன் | முத்துக்குளிப்பவனைக் கயிறு கொண்டு மேலிழுப்பவன் . |
| மண்டக்காள் | முத்துக்குளிப்பவனைக் கயிறு கொண்டு மேலிழுப்பவன் . |
| மண்டக்கு | காண்க : மண்டக்கம் . |
| மண்டகப்படி | கேலி ; அடி ; காண்க : மண்டபச்செலவு . |
| மண்டகம் | சருக்கரை போடாத கோதுமைப்பூரி ; அலங்காரப் பந்தல் ; திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம் ; சாவடி . |
| மண்டபச்செலவு | உற்சவமூர்த்தி மண்டபத்தில் எழுந்தருளுவதற்காகச் செய்யும் செலவு . |
| மண்டபப்படி | அலங்கார நைவேத்தியம் ; திருவிழாவில் சுவாமி தங்குமிடம் ; திருநாட்சிறப்பு ; காண்க : மண்டபச்செலவு . |
| மண்டபம் | திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம் ; மந்திரச் சக்கரம் ; அலங்காரப் பந்தல் ; சாவடி . |
| மண்டபவெழினி | கூடாரம் . |
| மண்டம் | நீர்மப்பொருளைக் காய்ச்சும்போது அல்லது புளிப்புச் சேர்க்கும்பொழுது மேலெழும் ஏடு ; தயிரேடு ; ஆமணக்கஞ்செடி . |
| மண்டர் | படைவீரர் . |
| மண்டலசெயம் | திக்குவிசயம் . |
| மண்டலநிலை | வில்லோர் நிலையுள் ஒன்று . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 838 | 839 | 840 | 841 | 842 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மடிவிடுதல் முதல் - மண்டலநிலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கிணறு, சுவாமி, மண்டபச்செலவு, கயிறு, மதகு, மேலிழுப்பவன், கொண்டு, முத்துக்குளிப்பவனைக், மண்டக்கம், பந்தல், கற்கட்டடம், சாவடி, கட்டப்பட்ட, தங்குவதற்காகக், மண்ணாலான, திருநாளில், அலங்காரப், மணற்பாங்கில், அலங்கார, நீர்மடை, சமையற்காரன், மடைக்கடல், செய்தல், சமையல்வேலை, திறப்போன், மண்ணெடுத்த, தோண்டிய, கட்டப்படாத, களிமண்ணில், கல்லறை, குழி, தோண்டப்பட்ட

