தமிழ் - தமிழ் அகரமுதலி - மணத்தூண் முதல் - மணிச்சட்டம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மணத்தூண் | திருவரங்கத்தில் அரங்கநாதர் சன்னதியின் உட்புறத்திலுள்ள இரட்டைத் தூண்கள் . |
| மணந்தட்டுதல் | பரிமளித்தல் . |
| மணப்பந்தல் | கலியாணத்தில் இடப்படும் அலங்காரப் பந்தல் . |
| மணப்பு | நறுமணம் ; சாரம் ; புணர்ச்சி ; செல்வமுடைமை . |
| மணப்பூச்சு | உடம்பில் பூசும் சந்தனக்குழம்பு முதலியன . |
| மணப்பெண் | காண்க : மணமகள் . |
| மணப்பொருத்தம் | இராசி , இராசித் தலைவர் , இரச்சு , கணம் , திரிதீர்க்கம் , தினம் , மாகேந்திரம் , யோனி , வசியம் , வேதை என்னும் பத்துக் கலியாணப் பொருத்தங்கள் ; திருமண உடன்படிக்கை . |
| மணம் | கூடுதல் ; நறுநாற்றம் ; மணப்பொருள் ; மதிப்பு ; நன்னிலை ; எண்வகை மணம் . |
| மணம்பிடித்தல் | மோப்பம்பிடித்தல் ; தீநாற்றம் வீசுதல் ; நாற்றத்தால் இழுக்கப்படுதல் . |
| மணம்புரிதல் | கலியாணம் செய்தல் . |
| மணமகள் | கலியாணப் பெண் . |
| மணமகன் | கலியாண மாப்பிள்ளை ; கணவன் . |
| மணமண்டபம் | திருமணக்கூடம் . |
| மணமாலை | கலியாணத்தில் மணமக்கள் அணியும் பூமாலை . |
| மணமுரசு | விழாமுரசு . |
| மணமுழவு | மருதநிலப் பறை . |
| மணல் | பொடியாயுள்ள பிதிர்மண் ; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று . |
| மணல்வாரி | காண்க : மண்தோண்டி ; மணல் நீக்குங் கருவி ; நெல்வகை ; புல்வகை ; சின்னம்மைவகை . |
| மணலி | மணலிக்கீரை ; மருக்கொழுந்து ; ஒரு நெல்வகை ; ஒரு பாம்புவகை ; ஓர் ஊர் . |
| மணலேறு | முத்துக்குற்றவகை . |
| மணவணி | காண்க : மணக்கோலம் . |
| மணவறை | திருமணமண்டபம் ; பள்ளியறை . |
| மணவறைத்தோழன் | மாப்பிள்ளைத் தோழன் . |
| மணவாட்டி | மணமகள் ; மனைவி . |
| மணவாளன் | மணமகன் ; தலைவன் ; கணவன் . |
| மணவினை | திருமணச்சடங்கு . |
| மணவை | அடுப்பு . |
| மணவோலை | திருமண அழைப்பிதழ் . |
| மணற்கால் | மணற்பாங்கான நிலம் . |
| மணற்குன்று | மணலின் திட்டை . |
| மணற்கூகை | தவளை . |
| மணற்கோட்டை | மணலாலான கோட்டை ; வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்குவியல் . |
| மணற்கோடு | மணலாலான கோட்டை ; வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்குவியல் . |
| மணற்சோறு | குழந்தைகள் விளையாட்டில் சோறாகக் கருதும் மணல் . |
| மணற்பாக்கு | கெடாமலிருப்பதற்காக மணலில் புதைத்து வைக்கும் பாக்கு . |
| மணாட்டு | மணமகளாகும் நிலை . |
| மணாட்டுப்பெண் | மருமகள் . |
| மணாளன் | காண்க : மணவாளன் . |
| மணி | கோமேதகம் ; நீலம் ; பவளம் , புட்பராகம் , மரகதம் , மாணிக்கம் , முத்து , வைடூரியம் , வயிரம் என்னும் ஒன்பதுவகை இரத்தினங்கள் ; நீலமணி ; காண்க : சிந்தாமணி ; பளிங்கு ; கண்மணி ; உருத்திராக்கம் ; தாமரைமணி முதலியன ; தானியமணி நஞ்சுநீக்குங் கல் ; சந்திரகாந்தக்கல் ; மணிமாலை ; அணிகலன் ; உருண்டை வடிவமாயுள்ள பொருள் ; மீன்வலையின் முடிச்சு ; ஆட்டினதர் ; வீடுபெற்ற ஆன்மா ; அழகு ; சூரியன் ; ஒளி ; நன்மை ; சிறந்தது ; கருமை ; கண்டை ; அறுபது நிமிடமுள்ள நேரம் ; ஒன்பது ; ஆண்குறியின் நுனி ; பெண்குறியின் ஓர் உள்ளுறுப்பு . |
| மணிக்கட்டு | கைத்தலத்திற்கும் முன்கைக்கும் உள்ள மூட்டுவாய் . |
| மணிக்கணக்கு | கடிகாரப்படியுள்ள ஒழுங்கு . |
| மணிக்கயிறு | கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு ; முடிச்சுள்ள சாட்டைக்கயிறு ; பாசக்கயிறு ; முத்துவடம் ; முறுக்கு நன்கமைந்த கயிறு . |
| மணிக்காடை | சிறு காடைவகை . |
| மணிக்காம்பு | இரத்தினம் இழைத்துச் செய்தகால் ; காண்க : தக்காளி . |
| மணிக்காலறிஞர் | இரத்தினங்களின் குணாகுணங்களையறிந்த வணிகர் . |
| மணிக்காற்பள்ளி | அரசர்க்குரிய சிவிகைவகை . |
| மணிக்குடல் | சிறுகுடல் . |
| மணிக்கூடு | காண்க : மணிக்கூண்டு ; கடிகாரம் ; கடிகாரக்கூடு ; நாழிகைவட்டில் ; சாயப்பூடுவகை . |
| மணிக்கூண்டு | கடிகாரம் அமைந்த கோபுரம் ; மணிதூங்குமாடம் . |
| மணிக்கை | மணிக்கட்டு . |
| மணிக்கோவை | இரத்தினமாலை . |
| மணிகண்டன் | நீலகண்டத்தையுடைய சிவன் . |
| மணிகம் | நீர்க்குடம் . |
| மணிகர்ணிகை | காசியிலுள்ள ஒரு தீர்த்தம் . |
| மணிகன்றிகை | காசியிலுள்ள ஒரு தீர்த்தம் . |
| மணிகன்னிகை | காசியிலுள்ள ஒரு தீர்த்தம் . |
| மணிகாசம் | கண்ணோயுள் ஒன்று . |
| மணிகாரகன் | இரத்தினவேலை செய்வோன் . |
| மணிச்சட்டம் | குழந்தைகளுக்கு எண் அறிவிக்க உதவும் மணிகள் கோத்த சட்டம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 841 | 842 | 843 | 844 | 845 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மணத்தூண் முதல் - மணிச்சட்டம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மணல், மணமகள், காசியிலுள்ள, தீர்த்தம், இடும், தடுக்க, வெள்ளத்தைத், மணற்குவியல், மணிக்கூண்டு, கடிகாரம், கோட்டை, கயிறு, மணிக்கட்டு, நெல்வகை, திருமண, கலியாணப், என்னும், முதலியன, மணம், மணமகன், மணவாளன், கலியாணத்தில், ஒன்று, கணவன், மணலாலான

