தமிழ் - தமிழ் அகரமுதலி - மட்டை முதல் - மடமயில் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மட்டை | தென்னை , பனை முதலியவற்றின் மடல் ; தேங்காயின் மேல்தோடு ; நாற்பத்தைந்து கவளிகொண்ட வெற்றிலைக் கட்டு ; பந்தடிக்கும் மட்டை ; பாம்பு ; மொட்டை ; அட்டை ; உடற்குறை ; மூடன் ; பயனற்றவர் ; பயனற்றது ; ஒரு மட்டமான நெல்வகை ; மாசுள்ள நெல்மணி ; பிணம் . |
| மட்டைத்தும்பு | பனைநார் . |
| மட்டையர் | சமணர் . |
| மட்பகை | மட்கலமறுக்குங் கருவி ; குயவன் . . |
| மட்பகைஞன் | குயவன் . |
| மட்பலகை | சுடாத செங்கல் . |
| மட்பாண்டம் | குயக்கலம் . |
| மட்பாம்பு | காண்க : ஆதிசேடன் . |
| மடக்கடி | கோணல் , சமனின்மை ; அபாயம் ; தந்திரம் ; வலைக்குட்படுத்துகை ; சூதுமொழி . |
| மடக்கம் | வளைவு ; பணிவு ; மனவடக்கம் ; வணக்கம் ; நோய் திரும்புகை . |
| மடக்கிடுதல் | மேற்செல்லாது தடுத்துவைத்தல் ; வாய்மடுத்தல் . |
| மடக்கிளி | இளங்கிளி ; பெண் ; ஒரு மீன்வகை . |
| மடக்கு | மூலைமுடுக்கு ; வளைவு ; திருப்பு ; மடிப்பு ; பிடிக்குள் மடக்கிவைக்கும் கத்தி ; தடை ; மாறிமாறி வருகை ; தாறுமாறு ; நிலவளவுவகை ; பெரிய மண்ணகல் ; செய்யுளில் சொல் , சீர் முதலியன பொருள் வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணி வகை ; ஒரு தடவையில் உட்கொள்ளக்கூடிய நீர் . |
| மடக்குக்கட்டில் | மடிக்கக் கூடிய கட்டில் . |
| மடக்குதல் | மடித்தல் ; திருப்புதல் ; மாறிமாறிச் செய்தல் ; வென்று கீழ்ப்படுத்துதல் ; வாயடக்குதல் ; கால்நடை முதலியவற்றை ஒருசேர அடக்கிவைத்தல் ; பண்டம் முதலியவற்றைத் தன்வயப்படுத்துதல் ; ஒதுக்கிக்கட்டுதல் ; தடுத்தல் ; அழித்தல் ; பணிவாக்குதல் ; தானிய அரியறுத்தல் ; உடற்கட்டுக் குலைத்தல் ; மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறித்தல் ; உடுத்துதல் ; திரும்பத்திரும்ப வருதல் . |
| மடக்குப்பிடிக்கத்தி | பிடிக்குள் மடக்கிவைக்கும் கத்திவகை . |
| மடக்குமடக்கெனல் | நீர்குடிப்பதால் உண்டாகும் ஒலிக்குறிப்பு . |
| மடக்குமேசை | கால்களை மடக்கி வைத்தற்குரிய மேசை . |
| மடக்குவரி | இரண்டாம் விளைச்சலின்மேல் விதிக்கும் வரி ; வரிமேல் வரி . |
| மடக்கொடி | பெண் . |
| மடங்கக்கூறுதல் | திரும்பக்கூறுதல் . |
| மடங்கடித்தல் | தோற்றோடச் செய்தல் ; திரும்பச் செய்யும்படி பண்ணுதல் . |
| மடங்கல் | வளைகை ; கோணம் ; மீளுகை ; மழுங்கிப்போகை ; அடக்கம் ; ஒடுக்கம் ; முடிவு : இடி ; வடவைத்தீ ; ஊழிக்காலம் ; யமன் ; யமனேவல் செய்யுங் கூற்றம் ; சிங்கம் ; காண்க : நரசிங்கம் ; யாளி ; நோய்வகை ; முற்றிய கதிர் ; கோடைப்பயிர் ; காண்க : தாழை . |
| மடங்கலர் | பகைவர் . |
| மடங்கலூர்தி | சிங்க ஊர்தியையுடைய துர்க்கை . |
| மடங்கற்கொடியோன் | சிங்கக் கொடியோனாகிய வீமன் . |
| மடங்காநீர் | வற்றாத நீருற்று . |
| மடங்கு | அளவு ; அடக்கம் ; தண்டவரி ; நோய் ; இழைக்கயிறு ; நிறைவகை . |
| மடங்குதல் | வளைதல் ; முடங்குதல் ; கோணுதல் ; வளைந்துசெல்லுதல் ; மீளுதல் ; சொல்முதலியன திரும்ப வருதல் ; திருகுறுதல் ; குறைதல் ; சுருங்குதல் ; ஒடுங்குதல் ; நெளிதல் ; கீழ்ப்படுதல் ; தாழ்தல் ; செயலறுதல் ; கடுமையடங்குதல் ; நிறுத்தப்பெறுதல் ; தடுக்கப்படுதல் ; வாயடங்குதல் ; சொத்து முதலியன ஒருவன்பால் அடைந்துவிடுதல் . |
| மடத்தகை | இளமைத்தன்மை . |
| மடத்தனம் | அறியாமை . |
| மடந்தை | பெண் ; பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பெண் ; பருவமாகாத பெண் ; சேம்புவகை . |
| மடந்தையாயிருத்தல் | மகப்பெறும் பருவத்தினளாதல் . |
| மடநடை | மென்னடை . |
| மடநோக்கு | மருண்ட பார்வை . |
| மடப்பம் | பேதைமை ; மென்மை ; இணக்கம் ; ஐந்நூறு ஊருக்குத் தலையூர் ; அரண்மனையிற் பெண் ; மருதநிலத்தூர் . |
| மடப்பள்ளி | காண்க : மடைப்பள்ளி . |
| மடப்பளி | காண்க : மடைப்பள்ளி . |
| மடப்பற்று | மடத்தைச் சார்ந்த சொத்து . |
| மடப்புறம் | மடத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம் . |
| மடம் | அறியாமை ; பொருண்மை அறியாது திரியக்கோடல் ; பேதைமை ; அழகு ; மென்மை ; இணக்கம் ; முனிவர் வாழிடம் ; சத்திரம் ; சாவடி ; கோயில் ; இடம் ; தேர் ; பிரமசாரிகளும் துறவியரும் வாழும் இடம் . |
| மடமடத்தல் | ஒலித்தல் . |
| மடமடெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு . |
| மடமயில் | அழகிய பெண் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 836 | 837 | 838 | 839 | 840 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மட்டை முதல் - மடமயில் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பெண், காண்க, அறியாமை, சொத்து, அடக்கம், வருதல், ஒலிக்குறிப்பு, பேதைமை, இடம், மடைப்பள்ளி, இணக்கம், மென்மை, முதலியவற்றை, மீண்டும், வளைவு, குயவன், முதலியவற்றின், மட்டை, நோய், பிடிக்குள், சொல், முதலியன, மடக்கிவைக்கும், செய்தல்

