தமிழ் - தமிழ் அகரமுதலி - மசனம் முதல் - மஞ்சு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மசனம் | வருத்தல் . |
| மசாலை | கறிச்சரக்கு ; குதிரை முதலிய விலங்குகட்குக் கொடுக்கும் மருந்து . |
| மசானக்கொள்ளை | பகற்கொள்ளை . |
| மசானம் | சுடுகாடு . |
| மசி | எழுதும் மை ; வண்டியின் அச்சிலிடும் மசகு . |
| மசிக்கூடு | எழுதும் மைவைக்குங் குப்பி . |
| மசிகம் | புற்று . |
| மசித்தல் | கடைதல் முதலியவற்றால் குழையச் செய்தல் ; குழப்புதல் . |
| மசிதல் | வழுவழுப்பாயிருத்தல் ; விட்டுக் கொடுத்தல் . |
| மசிபதம் | இறகுபேனா . |
| மசிமையிலி | நாணமில்லாதவன் . |
| மசியல் | கடைந்து செய்த உணவு முதலியன . |
| மசிர் | அறுகம்புல் : மயிர் . |
| மசுக்கரம் | மூங்கில்மரம் . |
| மசுரம் | கடலை . |
| மசூதி | பள்ளிவாயில் . |
| மசூரம் | மூட்டுப்பூச்சி ; தானியவகையுள் ஒன்று . |
| மசோதா | சட்ட முன்வடிவு , சட்டமாவதற்கு முன் சட்டப் பேரவைக்குக் கொணரப்படும் சட்ட நகலின் குறிப்பு ; மூலப்பத்திரத்துக்கு முன் குறிக்கப்படும் நகல் . |
| மஞ்சகம் | கட்டில் ; கொக்குவகை . |
| மஞ்சட்காப்பு | காப்பாக நெற்றியிலிடும் மஞ்சள் பொட்டு ; கோயிலில் தெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சட் குழம்பு ; ஓலைக்கு மஞ்சற் பூசுதல் . |
| மஞ்சட்காமாலை | ஒரு கண்நோய்வகை . |
| மஞ்சட்குருவி | ஒரு குருவிவகை . |
| மஞ்சட்குளி | மஞ்சள் தேய்த்துக் குளிக்கை ; மஞ்சள் நீர் விளையாட்டு . |
| மஞ்சட்கொத்து | கிழங்குடன் கூடிய மஞ்சட்செடி . |
| மஞ்சட்பால்கொடுத்தல் | தத்தெடுத்தல் . |
| மஞ்சட்பாவாடை | ஊர்த்தேவதைகளை வழிபடும்போது அணியும் மஞ்சள் நீரில் தோய்த்த புத்தாடை . |
| மஞ்சட்பூ | காண்க : பவழமல்லிகை . |
| மஞ்சட்பூச்சு | மகளிர் குளிக்கும்போது மஞ்சள் அரைத்துப் பூசிக்கொள்கை . |
| மஞ்சணம் | பற்பொடி . |
| மஞ்சணீர் | நல்ல காலத்தில் பயன்படுத்தும் மஞ்சட் கரைத்த நீர் ; கலியாணத்தில் விருந்தினர்மீது மஞ்சள்நீர் தெளிக்கும் சடங்கு . |
| மஞ்சணீர்ச்சீட்டு | வளர்ப்புப் பிள்ளையை எடுத்தற்கு உரித்தாக்குஞ் சீட்டு . |
| மஞ்சணீர்நதி | காஞ்சிபுரத்தருகில் ஓடும் வேகவதி ஆறு . |
| மஞ்சணீர்ப்பிள்ளை | வளர்ப்புப்பிள்ளை . |
| மஞ்சணை | சில சாதி மகளிர் கழுத்திலும் சிறுதேவதைகளின் உருவங்களிலும் பூசப்படும் எண்ணெய்க் குங்குமக்குழம்பு ; மரவகை . |
| மஞ்சத்தலம் | அரியணை . |
| மஞ்சம் | கட்டில் ; இருக்கையிடுதற்குரிய மேடை ; சப்பரம் ; காண்க : கொம்மட்டிமாதுளை . |
| மஞ்சரி | தளிர் ; பூங்கொத்து ; பூமாலை ; மலர்க்காம்பு ; ஒழுக்கம் ; ஒரு நூல்வகை ; மருந்துவகை ; முத்து ; நாயுருவிச்செடி ; பண்வகை . |
| மஞ்சரிப்பா | நூல்வகை . |
| மஞ்சள் | செடிவகை ; மஞ்சள்நிறம் ; எலுமிச்சை ; காண்க : மஞ்சட்குருவி . |
| மஞ்சள்வெயில் | மாலைநேர வெயில் . |
| மஞ்சளாலாத்தி | கண்ணேறு போக்க மஞ்சள் நீரால் எடுக்கும் ஆராத்தி . |
| மஞ்சன் | ஆண்மகன் ; மஞ்சள்நிறமுடையவன் . |
| மஞ்சனசாலை | குளியலறை . |
| மஞ்சனநீர் | முழுக்குநீர் . |
| மஞ்சனம் | நீராட்டம் ; காண்க : மஞ்சனநீர் . |
| மஞ்சனமாடுதல் | நீராடுதல் . |
| மஞ்சனி | காண்க : வேலிப்பருத்தி ; பெண் . |
| மஞ்சா | காண்க : இலைக்கள்ளி . |
| மஞ்சாடி | ஒரு மரவகை ; காண்க : மஞ்சாளி ; செவ்வள்ளி ; நுணாப்பட்டை . |
| மஞ்சாடிமரம் | ஒரு மரவகை . |
| மஞ்சாரி | காண்க : கஞ்சாங்கோரை . |
| மஞ்சாளி | இரண்டு குன்றிமணி எடைகொண்ட மஞ்சாடி வித்து . |
| மஞ்சி | சிறுவரம்பு ; படகு ; சணல்நார் ; காண்க : சணல் ; குறுமாடி ; மூடுபனி ; சுங்கம்வாங்கி ; புல்வகை . |
| மஞ்சிகம் | பெட்டி ; தாளிக்கொடி . |
| மஞ்சிகன் | நாவிதன் . |
| மஞ்சிகை | பெட்டி ; கொட்டாரம் ; தொம்பை ; தாளிக்கொடி ; கையாந்தகரை ; காதணிவகை . |
| மஞ்சிட்டி | ஒரு நீர்ப்பூடுவகை . |
| மஞ்சிபலை | வாழை . |
| மஞ்சிமம் | அழகு . |
| மஞ்சிரம் | காலாழி . |
| மஞ்சில் | முதுவரப்பு வழி ; பாதையில் தங்கிச் செல்லும் இடம் . |
| மஞ்சிலிக்கான் | திருநீற்றுப்பச்சை . |
| மஞ்சிலை | செங்கல் . |
| மஞ்சிவிரட்டு | காண்க : சல்லிக்கட்டு . |
| மஞ்சிறு | காண்க : கையாந்தகரை . |
| மஞ்சீரம் | காற்சிலம்பு . |
| மஞ்சு | அழகு ; அணிகலன் ; மேகம் ; வெண்மேகம் ; பனி ; மூடுபனி ; யானையின் முதுகு ; களஞ்சியம் ; கட்டில் ; குறுமாடியின் அடைப்பு ; வீட்டு முகடு ; இளமை ; வலிமை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 834 | 835 | 836 | 837 | 838 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மசனம் முதல் - மஞ்சு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மஞ்சள், கட்டில், மரவகை, மஞ்சாடி, மஞ்சாளி, மூடுபனி, தாளிக்கொடி, அழகு, கையாந்தகரை, மஞ்சனநீர், பெட்டி, மகளிர், முன், சட்ட, மஞ்சட், மஞ்சட்குருவி, எழுதும், நீர், நூல்வகை

