தமிழ் - தமிழ் அகரமுதலி - மங்கல் முதல் - மங்களவாரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மங்கல் | கெடுதல் ; ஒளிமங்குதல் ; இருள்நேரம் . |
| மங்கல்யம் | காண்க : மாங்கலியம் . |
| மங்கலக்கருவி | யாழ் முதலிய இசைக்கருவிகள் ; சவரக்கத்தி . |
| மங்கலக்கிழமை | செவ்வாய்க்கிழமை . |
| மங்கலகாரியம் | நற்செயல் . |
| மங்கலகீதம் | காண்க : மங்கலப்பாட்டு . |
| மங்கலகௌசிகம் | ஒரு பண்வகை . |
| மங்கலச்சொல் | மங்கலமொழி , நன்மையைக் குறிக்கும் மொழி ; வாழ்த்துரை ; செய்யுள்களின் முதலில் வரற்குரிய திரு , பூ , உலகம் முதலிய நன்மொழிகள் . |
| மங்கலசூத்திரம் | தாலிக்கயிறு . |
| மங்கலத்திருநாள் | புண்ணியதினம் , திருவிழாவில் சிறந்த நாள் . |
| மங்கலத்துகில் | வெண்துகில் . |
| மங்கலதினம் | காண்க : மங்கலநாள் . |
| மங்கலநாண் | தாலிக்கயிறு , கழுத்திலணியும் திருமங்கலியச் சரடு . |
| மங்கலநாள் | நன்னாள் . |
| மங்கலப்பாட்டு | நல்ல காலங்களில் பாடும் பாட்டு . |
| மங்கலப்பிரதை | மஞ்சள் . |
| மங்கலப்பொருத்தம் | செய்யுள் முதன்மொழிப் பொருத்தம் பத்தனுள் முதன்மொழியிடத்து மங்கலச்சொல் நிற்பது . |
| மங்கலபத்திரிகை | திருமண அழைப்பிதழ் . |
| மங்கலபாடகர் | அரசர் முதலியோரைப் பாடுவோர் . |
| மங்கலபேரிகை | நல்ல காலங்களில் முழக்கும் முரசம் . |
| மங்கலம் | திருமணம் ; ஆக்கம் ; பொலிவு ; நற்செயல் ; நன்மை ; தாலி ; தருமம் ; சிறப்பு ; வாழ்த்து ; காண்க : மங்கலவழக்கு ; எண்வகை மங்கலம் ; சேகரிப்பு ; தகனபலி ; சில ஊர்ப்பெயர்களின் பின் இணைக்கப்படும் துணைச் சொல் . |
| மங்கலம்பதினாறு | கவரி , நிறைகுடம் , கண்ணாடி , கோட்டி , முரசு , விளக்கு , கொடி , இணைக்கயல் என்னும் எண்வகை மங்கலத்தோடு வாள் , குடை , ஆலவட்டம் , சங்கம் , தவிசு , திரு , அரசியலாழி , ஓமாலிகை என்னும் எட்டுஞ் சேர்ந்த பதினாறு வகையான எடு பிடிகள் . |
| மங்கலமகளிர் | சுமங்கலிகள் . |
| மங்கலமங்கையர் | சுமங்கலிகள் . |
| மங்கலமடந்தை | கணவனுடன் வாழ்பவள் ; ஒரு பெண்தேவதை . |
| மங்கலமரபு | காண்க : மங்கலவழக்கு . |
| மங்கலமாந்தர் | மங்கலச் செயல்களைச் செய்பவர் . |
| மங்கலமுகூர்த்தம் | காண்க : மங்கலவேளை . |
| மங்கலமுரசு | விழாக்காலங்களில் முழக்கும் முரசு . |
| மங்கலமுழவம் | விழாக்காலங்களில் முழக்கும் முரசு . |
| மங்கலமொழி | காண்க : மங்கலச்சொல் . |
| மங்கலவண்ணம் | மங்கலக்குறியான வெண்ணிறம் . |
| மங்கலவணி | திருமங்கலியம் ; இயற்கையழகு ; மங்கலக்குறியாக அணியும் வெள்ளணி . |
| மங்கலவழக்கு | தகுதிவழக்கு மூன்றனுள் மங்கல மல்லாததை மங்கலமாகக் கூறும் வழக்கு . |
| மங்கலவள்ளை | உயர்குல மங்கையை ஒன்பது வெண்பாக்களால் வகுப்புறப் பாடும் நூல் . |
| மங்கலவார்த்தை | நல்லுரை ; நற்செய்தி . |
| மங்கலவாரம் | செவ்வாய்க்கிழமை ; நல்ல நாள் . |
| மங்கலவாழ்த்து | நூலின் முதலில் அல்லது இறுதியில் செய்யப்படும் துதி ; மணமக்களுக்கு வாழ்த்துக் கூறுகை . |
| மங்கலவினைஞன் | நாவிதன் ; நற்செயல் செய்யத் தகுதியுள்ளவன் . |
| மங்கலவெள்ளை | சந்தனக்குழம்பு ; நூல்வகை . |
| மங்கலவேளை | நல்வேளை . |
| மங்கலன் | நாவிதன் ; செவ்வாய் . |
| மங்கலாதேவி | ஒரு பெண்தேவதை . |
| மங்கலி | சுமங்கலி ; நாவிதன் . |
| மங்கலியசூத்திரம் | காண்க : மங்கலசூத்திரம் . |
| மங்கலியப்பிச்சை | கணவன் உயிரைக்காக்குமாறு மனைவி இரந்து கேட்கை . |
| மங்கலியப்பெண்டுகள் | தெய்வமாகக் கொண்டாடப்படும் பெண்டிர் ; சுமங்கலிகளாய் இறந்த மகளிர் . |
| மங்கலியப்பொருத்தம் | திருமணப் பொருத்தத்துள் ஒன்று . |
| மங்கலியம் | திருமணத்தில் கட்டப்படும் தாலி ; சந்தனம் ; தயிர் ; பொன் ; செவ்வீயம் . |
| மங்கலியவதி | சுமங்கலி . |
| மங்கலை | சுமங்கலி , கணவனோடு வாழ்பவள் ; திருமகள் ; பார்வதி ; துர்க்கை ; அம்பட்டத்தி . |
| மங்களகரம் | நன்மையானது . |
| மங்களம் | காண்க : மங்கலம் . |
| மங்களம்பாடுதல் | நற்செயல் முடிவில் வாழ்த்துப்பாட்டுப் பாடுதல் ; செயலை முடித்தல் . |
| மங்களரேகை | ஒருவனுக்கு உண்டாகும் நன்மைகளைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை வரி . |
| மங்களவாத்தியம் | நற்காலங்களில் இசைக்கும் இசைக்கருவி . |
| மங்களவாரம் | காண்க : மங்கலக்கிழமை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 832 | 833 | 834 | 835 | 836 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மங்கல் முதல் - மங்களவாரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நற்செயல், மங்கலவழக்கு, மங்கலம், நாவிதன், சுமங்கலி, முழக்கும், முரசு, நல்ல, மங்கலச்சொல், சுமங்கலிகள், என்னும், செவ்வாய்க்கிழமை, வாழ்பவள், எண்வகை, பெண்தேவதை, முதலிய, மங்கலக்கிழமை, விழாக்காலங்களில், மங்கலவேளை, மங்கலப்பாட்டு, தாலி, நாள், தாலிக்கயிறு, மங்கலசூத்திரம், திரு, மங்கலநாள், சொல், மங்கலமொழி, பாடும், காலங்களில், முதலில்

