தமிழ் - தமிழ் அகரமுதலி - மங்களாசரணை முதல் - மசரதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மங்களாசரணை | வாழ்த்து , வணக்கம் , வருபொருள் என்னும் முப்பகுதியுடைய நூன்முகம் . |
| மங்களாசாசனம் | நன்மையை வேண்டுகை ; பெரியோர்கள் வழிபாடு ; ஆழ்வாராதியரால் துதிக்கப்பெறுகை . |
| மங்களாரத்தி | கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கருப்பூர ஆரத்தி ; நல்ல காலங்களில் மஞ்சள் நீர் சுற்றுகை . |
| மங்களை | பார்வதி ; மக்களின் பருவநிலைகளுள் ஒன்று ; யோகினிதிசையி னொன்று . |
| மங்கினி | மிக்க மந்தபுத்தியுள்ளவர் ; பயன்றறவர் . |
| மங்கு | வங்கு ; கேடு ; சாடி . |
| மங்குங்காலம் | தீமைக்காலம் . |
| மங்குசனி | ஒருவனுடைய வாழ்நாளில் முதலில் வந்து தீமை செய்யும் ஏழரையாண்டுச் சனி . |
| மங்குதல் | ஒளிமழுங்குதல் ; குறைதல் ; நிறங்குன்றுதல் ; பெருமை குறைதல் ; வாட்டமுறுதல் ; கெடுதல் ; சாதல் . |
| மங்குரம் | பளிங்கு . |
| மங்குல் | வானம் ; மேகம் ; மூடுபனி ; இரவு ; இருட்டு ; திசை . |
| மங்குல்வாணி | தெய்வவாக்கு , வானொலி . |
| மங்குலம் | மழுக்கம் ; கலக்கம் ; முகவாட்டம் ; பார்வை மந்தம் ; ஐயம் ; நிறக்குறைவு . |
| மங்குலி | மேகத்தின் தலைவனாகிய இந்திரன் . |
| மங்குளம் | காண்க : மங்குலம் . |
| மங்கை | பெண் ; பன்னிரண்டு முதல் பதின்மூன்று வயது வரையுள்ள பெண் ; கற்றாழை ; பாதரசம் ; சில ஊர்ப்பெயர்களின் பின் இணைக்கப்படும் துணைச்சொல் . |
| மங்கைபங்கன் | உமையொருபாகன் , சிவபெருமான் . |
| மங்கைபங்காளன் | உமையொருபாகன் , சிவபெருமான் . |
| மங்கைபாகன் | உமையொருபாகன் , சிவபெருமான் . |
| மச்சக்கொடி | காமனுக்கும் பாண்டியனுக்கும் உரியதான மீனக்கொடி . |
| மச்சப்பொன் | மாற்றறிய வைத்திருக்கும் மாதிரிப் பொன் . |
| மச்சம் | காண்க : மச்சாவதாரம் ; மீன் ; மீனராசி ; பங்குனிமாதம் ; பதினெண் புராணத்துள் ஒன்று ; மாற்றறிய வெட்டும் பொன் ; மச்சநாடு ; சுவடு ; உடம்பில் உண்டாம் புள்ளி . |
| மச்சாவதாரம் | திருமாலின் பத்துப்பிறப்புகளுள் முதலாவதான மீன்பிறப்பு . |
| மச்சாவி | அண்ணி . |
| மச்சாள் | மனைவியின் உடன்பிறந்தாள் ; தாய்மாமன் அல்லது அத்தையின் மகள் . |
| மச்சான் | தாய்மாமன் மகன் அல்லது அத்தை மகன் ; மனைவியின் உடன்பிறந்தான் ; உடன் பிறந்தாளின் கணவன் . |
| மச்சி | காண்க : மச்சாள் ; கொடிவகை . |
| மச்சிகை | மோர் ; ஈ . |
| மச்சினச்சி | காண்க : மைத்துனி . |
| மச்சினன் | காண்க : மைத்துனன் . |
| மச்சினி | காண்க : மைத்துனி . |
| மச்சினிச்சி | காண்க : மைத்துனி . |
| மச்சு | மட்டமாகச் செங்கல்குத்திப் பாவியமேல்தளம் ; மேல்தளத்தில் பாவும் பலகை ; உத்தரமட்டத்தின் மேலுள்ள பலகைத்தடுப்பு ; மேல்மாடம் ; காண்க : மச்சப்பொன் : குற்றம் ; தகாதது ; கொடிவகை ; ஒர் அசைநிலை . |
| மச்சுக்கல் | மேல்தளத்தில் பதிக்கும் செங்கல் வகை . |
| மச்சுப்பாவுதல் | மேல்தளத்தைப் பலகை முதலியவற்றால் மூடுதல் . |
| மச்சுவீடு | மேல்தளமுள்ள கட்டடம் ; பலகையடைப்புள்ள மேன்மாடி வீடு . |
| மச்சுனமை | மைத்துனவுரிமை . |
| மச்சுனன் | காண்க : மைத்துனன் . |
| மச்சுனி | காண்க : மைத்துனி . |
| மச்சை | அம்பு எய்தற்குரிய குறி ; உடம்பிலுண்டாம் புள்ளி ; ஏழு தாதுவில் ஒன்று ; உட்சுரம் ; காண்க : மீனம்பர் . |
| மசக்குதல் | மயக்குதல் ; குழப்புதல் ; ஆடையைக் கஞ்சிப்பற்று நீங்கும்படி கசக்குதல் . |
| மசக்கை | சூதகக்கட்டு ; கருக்கொண்ட பெண்ணுக்கு மயக்கம் முதலியவற்றை உண்டாக்கும் ஒரு நோய்வகை . |
| மசகம் | கொசு ; நீர்த்துருத்தி ; மயிர் ; மயக்கம் . |
| மசகவரி | சித்திரப்பணி எழுதியதும் கொசுக்களை விலக்குவதுமான அமளித்திரை . |
| மசகாரி | சித்திரப்பணி எழுதியதும் கொசுக்களை விலக்குவதுமான அமளித்திரை . |
| மசகி | அத்திமரம் . |
| மசகிற்புள் | கடற்பறவைவகை . |
| மசகு | நடுக்கடலில் திசைதெரியாது ஆழ்ந்து அகன்ற இடம் ; வைக்கோற் கரியோடு எண்ணெய் கலந்து கட்டைவண்டியின் அச்சிலிடும் மை ; திகைப்பு . |
| மசகுதல் | சுணங்கிநிற்றல் ; மனந்தடுமாறுதல் . |
| மசங்கல் | மயக்கம் ; அந்திப்பொழுது . |
| மசங்குதல் | மயங்குதல் ; ஒளிகுறைதல் ; கசங்குதல் . |
| மசடன் | குணங்கெட்டவன் . |
| மசண்டை | அந்திநேரம் . |
| மசம் | கொசு . |
| மசமசத்தல் | தினவெடுத்தல் ; செயலை முடியாது தாழ்த்தல் . |
| மசமசெனல் | தினவு எடுத்தற்குறிப்பு ; பேச்சு முதலியவற்றில் தீர்மானமின்றி இழுத்தற் குறிப்பு . |
| மசரதம் | கானல்நீர் , பேய்த்தேர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 833 | 834 | 835 | 836 | 837 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மங்களாசரணை முதல் - மசரதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மைத்துனி, உமையொருபாகன், மயக்கம், சிவபெருமான், ஒன்று, பலகை, மைத்துனன், மேல்தளத்தில், எழுதியதும், விலக்குவதுமான, அமளித்திரை, கொசுக்களை, கொடிவகை, சித்திரப்பணி, கொசு, தாய்மாமன், மச்சப்பொன், மாற்றறிய, பெண், மங்குலம், குறைதல், பொன், மச்சாவதாரம், அல்லது, மனைவியின், மச்சாள், புள்ளி, மகன்

