தமிழ் - தமிழ் அகரமுதலி - மகாவிந்து முதல் - மகௌடதம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
மகாவிந்து | அப்பிரகம் . |
மகாவிரதம் | சைவத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்று ; சமண நோன்புவகை . |
மகாவிலயம் | வானம் ; இதயம் ; குகை ; நீர்ச்சாடி . |
மகாவீரன் | அக்கினி ; அருகதேவன் ; கருடன் ; திருமால் ; பெருவீரன் . |
மகான் | அறிவுத்தத்துவம் ; பெரியோன் . |
மகானுபாவன் | பேரறிஞன் ; சிறந்தவன் ; ஞானி ; கொடைப்பண்பினன் . |
மகி | பூமி ; பசு . |
மகிடம் | எருமைக்கடா . |
மகிடமர்த்தனி | துர்க்கை . |
மகிடவாகனன் | எருமையை ஊர்தியாகவுடைய யமன் . |
மகிடவாகனி | எருமையை ஊர்தியாகவுடைய துர்க்கை . |
மகிடற்செற்றாள் | மகிடாசுரனைக் கொன்ற துர்க்கை . |
மகிடாசுரமர்த்தினி | மகிடாசுரனைக் கொன்ற துர்க்கை . |
மகிடி | காண்க : மகுடி ; வெளிக்காணாமல் புதைத்தும் புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டுவகை ; மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மாந்திரி கருக்குள் நிகழும் போட்டி . |
மகிடித்தல் | மக்களித்தல் ; தலைகீழாக விழுதல் . |
மகிணன் | காண்க : மகிழ்நன் ; சுவாமி . |
மகிதம் | சிவபிரானது திரிசூலம் . |
மகிதலம் | பூமி . |
மகிந்தகம் | எலி ; கீரி . |
மகிபன் | அரசன் . |
மகிபாலன் | அரசன் . |
மகிமா | எண்வகைச் சித்திகளுள் விருப்பம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல் . |
மகிமை | பெருமை ; காண்க : மகமை ; சிறப்பு , மதிப்பு . |
மகிலை | பெண் ; வெறிபிடித்தவள் . |
மகிழ் | இன்பம் ; குடிவெறி ; மது ; மரவகை . |
மகிழ்ச்சி | உவகை ; காண்க : மகிழ்ச்சியணி . |
மகிழ்ச்சிநிலை | உள்ளமிகுதி . |
மகிழ்ச்சியணி | மகிழ்ந்து சொல்லுகையாகிய அலங்காரவகை . |
மகிழ்ச்சிவினை | புண்ணியம் , நல்வினை . |
மகிழ்த்தாரான் | மன்மதன் . |
மகிழ்தல் | அகங்களித்தல் ; உணர்வழிய உவகை எய்துதல் ; குமிழியிடுதல் ; விரும்புதல் ; உண்ணுதல் . |
மகிழ்நன் | கணவன் ; மருதநிலத் தலைவன் . |
மகிழ்வு | இன்பம் . |
மகிழம் | மகிழமரம் . |
மகிழலகு | மகிழம்விதை . |
மகிளம் | பூவிதழ் . |
மகீதரம் | மலை . |
மகீபதி | அரசன் . |
மகீபன் | அரசன் . |
மகீருகம் | பூமியில் முளைப்பதான தாவரம் . |
மகீலதை | நாங்கூழ் . |
மகுடம் | மணிமுடி ; தலைப்பாகைவகை ; தலையணி ; பல பாடல்களில் ஓர் இறுதியாக வரும் முடிவு ; கட்டுரைத் தலைப்பு ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; ஓலைச்சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை ; மாதர் காதணி வகை ; மத்தளத்தின் விளிம்பு ; பறைவகை ; ஒளிமங்கல் . |
மகுடராகம் | ஒரு பண்வகை . |
மகுடராமக்கிரியம் | ஒரு பண்வகை . |
மகுடவர்த்தனர் | முடிமன்னர் . |
மகுடாதிபதி | முடியுடை வேந்தன் . |
மகுடி | இசைக்கருவிவகை ; பாம்பாட்டியின் ஊது குழல்வகை . |
மகுரம் | கண்ணாடி ; பளிங்கு ; பூமொட்டு ; தண்ட சக்கரம் . |
மகுலம் | காண்க : மகிழம் . |
மகுளி | ஓசை ; எட்பயிர் நோய்வகை . |
மகுளிபாய்தல் | பெருமழையால் நிலம் இறுகிவிடுதல் ; நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல் . |
மகூலம் | மலர்ந்த பூ . |
மகேச்சுரன் | சிவபெருமான் . |
மகேசன் | சிவபெருமான் . |
மகேசுரவடிவம் | இலிங்க வடிவொழிந்த சிவமூர்த்தங்கள் . |
மகேசுவரன் | காண்க : மகேச்சுரன் . |
மகேசுவரி | பார்வதி . |
மகேந்திரசாலம் | வியப்பைக் காட்டும் வித்தை . |
மகேந்திரம் | ஒரு மலை . |
மகேந்திரன் | இந்திரன் . |
மகேசுவரியம் | பெருஞ்செல்வம் . |
மகோததி | கடல் ; தனுக்கோடிக்கு வடக்கிலுள்ள கடற்பிரிவு . |
மகோதயம் | ஒரு புண்ணியகாலம் ; பெருமை ; வீடுபேறு ; மேன்மை . |
மகோதரம் | பூதம் ; பெருவயிற்றுநோய் . |
மகோதை | கொடுங்கோளூர் . |
மகோற்சவம் | பெரிய திருவிழா . |
மகோன்மதம் | மிகுவெறி . |
மகோன்னதம் | மிக்க உயரம் ; உயர்ந்த நிலை ; பனை . |
மகௌடதம் | சுக்கு ; திப்பிலி ; வசம்பு ; நன்மருந்து . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 831 | 832 | 833 | 834 | 835 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகாவிந்து முதல் - மகௌடதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, துர்க்கை, அரசன், உவகை, இன்பம், மகிழ்ச்சியணி, மகிழம், சிவபெருமான், மகேச்சுரன், பண்வகை, பெருமை, மகிழ்நன், எருமையை, பூமி, ஊர்தியாகவுடைய, மகிடாசுரனைக், மகுடி, கொன்ற, ஒன்று